136. திருப்பனையூர்





	


	



























	




 




	








 




5:28:27 AM         Wednesday, April 15, 2026

136. திருப்பனையூர்

136. திருப்பனையூர்
136. திருப்பனையூர் 136. திருப்பனையூர் 136. திருப்பனையூர் 136. திருப்பனையூர் 136. திருப்பனையூர் 136. திருப்பனையூர் 136. திருப்பனையூர் 136. திருப்பனையூர்
Product Code: 136. திருப்பனையூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                            சௌந்தர்யநாதர் கோவில், திருப்பனையூர்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்திற்குத் தென்கிழக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரளம் - திருவாரூர் சாலையில் சன்னாநல்லூரை கடந்து சென்றால் பனையூர் கைகாட்டியுள்ள கிளைப்பாதையில் 1 கி.மீ குறுகலான மண்பாதை வழியாக நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம்.

சுவாமி : சௌந்தரேசுவரர்,  அழகியநாதர், தாலவனேசுவரர்

அம்பிகை : பெரிய நாயகி, பிரகந் நாயகி

தலமரம் : பனை மரம்

தீர்த்தம் : பராசர தீர்த்தம், திருமகள் தீர்த்தம்

பதிகம் : திருஞானசம்பந்தர் - 1,   சுந்தரர் -1

திருத்தலச் சிறப்புகள்: இத்தலத்தில் சப்த ரிஷிகள், பராசர முனிவர், மகாலட்சுமி, கரிகாற்சோழன் ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர் என்பது சிறப்பு. இறைவன் சுந்தரருக்கு நடனக்காட்சியருளிய தலம். திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.

இத்திருத்தலத்தில் சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள தல மரமான இரண்டு பனை மரங்கள் தனிச் சிறப்பும், அற்புதமும் உடையன. இத்தலத்தில் விநாயகர், முருகர், பராசரமுனிவர், திருமகள், திருமால், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை, சண்டேசுவரர், சப்த ரிஷிகள்  வழிபட்ட ஏழு சிவலிங்கங்கள், நால்வர், நடராஜர் சபை முதலிய சந்நிதிகள் உள்ளன.

 இத்தலத்திற்கு தாலவனேசுவரர் என்ற மற்றொரு பெயரும் உண்டு. கோயில் வாயிலில் நுழைந்ததும் துணை இருந்து விநாயகர், தந்தையை இழந்து பிறந்த கரிகாலனை கொன்று அரசை கைப்பற்ற நினைத்த தாய்த்தார்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய்மாமனாகிய இரும்பிடாத்தலையார் எனும் சங்கப்புலவர், பிறர் அறியாமல் தாயையும், குழந்தையையும் பனையூருக்கு அனுப்பி வைத்தார். அரசி தன் மகனுடன் இவ்வூர்க்கு வந்தபோது இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து இத்தல விநாயகரிடம் முறையிட்டு அவர் துணையால் எட்டு ஆண்டுகள் பாதுகாப்பாக இருந்தாள். ஆகவே கரிகாற்சோழனுக்கு பாதுகாப்பாக இருந்தமையால் இத்தல விநாயகர் துணைஇருந்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

தலத்தின் சிறப்பு:  கரிகாலச் சோழன் சிறியவனாக இருக்கும் போது தாயாதிகளின் சூழ்ச்சியால் அவனது தந்தை கொல்லப்பட்டார். தந்தையை கொன்ற தாயாதிகள் கரிகாலனையும் கொன்று சோழ நாட்டைக் கைப்பற்ற முனைந்த போது. அவனது தாய்மாமன் "இரும்பிடர்த்தலையார்" என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார். அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இக்கோயிலில் அடைக்கலம் புகுந்து, இவ்விநாயகரிடம் முறையிட, விநாயகரின் துணையால் கரிகாலன் எட்டு ஆண்டுகள் இத்தலத்தில் பாதுகாப்பாக இருந்தான். கரிகாலச் சோழனுக்குத் துணையிருந்ததனால் இத்தல விநாயகர் "துணையிருந்த விநாயகர்" என்னும் பெயர் பெற்றார்.

கோவில் அமைப்பு: இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. கிழக்கு நோக்கியுள்ள ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயில் மேல் ரிஷபாரூடர் சிற்பம் சுதையால் ஆக்கப்பட்டுள்ளது. வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் வலதுபுறம் தெற்கு நோக்கிய பெரியநாயகி அம்பாள் சந்நிதி உள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். அம்பாள் சந்நிதிக்கு முன்னால் கரிகாலனைக் காப்பாற்றிய துணை இருந்த விநாயகர் சந்நிதி உள்ளது. 2-வது நுழைவாயில் கடந்து உள்ளே சென்றால் இறைவன் வீற்றிருக்கும் கருவறையும், சுற்றுக் பிராகாரமும் உள்ளது.

சப்தரிஷிகள், பராசர முனிவர், மகாலட்சுமி, கரிகாற்சோழன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். கருவறையில் மூரவர் சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார். கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. பிரகாரத்தில் பராசர முனிவர் உருவம் உள்ளது. பராசர முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத் திருமேனி மேற்கு நோக்கி உள்ளது இவர் தாலவனேஸ்வரர் என்ற பெயருடன் சதுர ஆவுடையார் மீது எழுந்தருளியுள்ளார். 

தினந்தோறும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம்   : நன்னிலம்

பஸ் வசதி   : இல்லை

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×