138. திருப்புகலூர்





	


	



























	




 




	








 




9:25:47 AM         Thursday, June 25, 2026

138. திருப்புகலூர்

138. திருப்புகலூர்
138. திருப்புகலூர் 138. திருப்புகலூர் 138. திருப்புகலூர் 138. திருப்புகலூர் 138. திருப்புகலூர் 138. திருப்புகலூர் 138. திருப்புகலூர் 138. திருப்புகலூர் 138. திருப்புகலூர் 138. திருப்புகலூர் 138. திருப்புகலூர் 138. திருப்புகலூர் 138. திருப்புகலூர் 138. திருப்புகலூர் 138. திருப்புகலூர் 138. திருப்புகலூர் 138. திருப்புகலூர் 138. திருப்புகலூர்
Product Code: 138. திருப்புகலூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                அக்னீஸ்வரர் கோவில், திருப்புகலூர்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் ரயில்நிலையத்திற்குக் கிழக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

சுவாமி : அக்கினிபுரீசுவரர்,  சரண்யபுரீசுவரர், கோணப்பிரான்

அம்பிகை : சூளிகாம்பாள்,  கருந்தார் குழலி

தலமரம் : புன்னை

தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்

பதிகம் : திருநாவுக்கரசர் - 5,   திருஞானசம்பந்தர் - 2,   சுந்தரர் - 1

திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலம் அக்கினி தேவன், பரத்துவாசமுனிவர் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். முருக நாயனார் அவதாரத் தலம். சுந்தரருக்குச் செங்கல்லைப் பொன்னாக்கி, அற்புதம் நிகழ்த்திய தலம். மூவர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். இத்தலத்தில் அக்னி பகவான் இறைவனை நோக்கி தவம் செய்து பேறு பெற்றிருக்கிறார். அவர் தவம் செய்யும் போது தன்னைச் சுற்றி ஒரு தீர்த்தம் அமைத்துக் கொண்டார். அதுவே ஆலயத்தின் வெளிப்புறத்தில் அகழியாக அக்னி தீர்த்தமாக விளங்குகிறது. 

பாணாசுரன் என்ற அசுரனின் தாயார் சிவபூஜை செய்பவள். தாயாரின் பூஜைக்காக சுயம்புலிங்கத்தை பெயர்த்து எடுத்து வருகிறான் பாணாசுரன். ஆனால் திருப்புகலூர் அக்னீசுவரரை பெயர்த்து எடுக்க முடியாமல் போகவே தன்னையே பலி கொடுக்க முயற்சி செய்யும் போது, இறைவன் அவனை தடுத்து ஆட்கொள்கிறார். அவன் தாயாரின் பூஜையை இருந்த இடத்தில் இருந்தே ஏற்றுக்கொண்டதின் அடையாளமாக தலைசாய்த்து காட்சி அளிக்கிறார். அதனாலேயே இறைவன் கோணப்பிரான் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் நடைபெறும் வாஸ்து பூஜை சிறப்பம்சம் உடையதாகும். இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும், அக்னிபகவான் பாவவிமோசனம் பெற்றதாலும், புதிதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம்.

திருவாரூரில் பங்குனி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும். ஒருசமயம் அவ்வாறு பங்குனி விழாவின் போது தனது மனைவி பரவையார் செலவிற்குப் பொன் பெற விரும்பி சுந்தரர் திருப்புகலூர் வந்தார். திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி, தனது கருத்தைப் பதிகத்தில் வைத்துப் பாடினார். பிறகு மற்ற அடியார்களுடன் கோவிலில் சிறிது இளைப்பாறினார். தூங்குவதற்காக அங்கிருக்கும் செங்கற்களை தலைக்கு உயரமாக வைத்துத் தம் மேலாடையாகிய வெண்பட்டை விரித்துப் படுத்தார். துயில் நீங்கி சுந்தரர் எழுந்தபோது தம் தலையாணையாக வைத்திருந்த செங்கற்களெல்லாம் பொற்கட்டிகளாக மாறி இருக்க கண்டு வியப்படைந்தார். இத்தலத்தில் தான் சமயக்குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் முக்தி அடைந்தார். இவருக்கு இக்கோவிலில் தனிச்சந்நிதி அமைந்துள்ளது.

இத்திருத்தலம் பெரிய கோயில். திருநாவுக்கரசர் முத்தித் தலம். இத்தலத்தில் 2 முகம், 7 கரம், 3 திருவடி, 4 கொம்பு, 7 ஜூவாலைகளுடன் கூடிய அக்கினி மூகாசூரசம்ஹார மூர்த்தி, சோமாஸ்கந்தர், நடராசர் ஆகிய சந்நிதிகள் தனிச் சிறப்புடையன. சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். முருக நாயனார் திருமடத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலோர் கூடியிருந்து முருக நாயனாருடன் மகிழ்ந்த பதி.

கோவிலின் பரப்பளவு சுமார் 73000 சதுர அடி. கிழக்கு-மேற்கு மதில் சுவர் நீளம் 325 அடி. வடக்கு-தெற்கு மதில் சுவர் நீலம் 225 அடி. கோவில் மதில் சுவரை ஒட்டி வெளிப்புறத்தில் நான்கு பக்கமும் அகழி இருக்கிறது. மூலவர் அக்னீசுவரர் சந்நிதிக்கு உள்ள நுழைவு வாயில் கோபுரம் 5 நிலை உள்ளதாகவும் சுமார் 90 அடி உயரமும் உள்ளது. இறைவி கருந்தாழ்குழலியின் தெற்கு நோக்கிய சந்நிதி. இந்த சந்நிதியை ஒட்டியே மூலவர் அக்னீசுவரர் சந்நிதி அமைந்துள்ளது. சுயம்பு லிங்கமான மூலவருக்கு கோணப்பிரான் என்ற பெயரும் உண்டு. மூலவருக்குப் பக்கத்தில் சந்திரசேகரர் தனிச்சந்நிதி உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், நடராசர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, பிட்சாடனர் ஆலிங்கனகல்யாண சுந்தரர் முதலிய மூர்த்தங்கள் உள்ளன.மூலவர் சந்நிதிக்கு வடக்கே வர்த்தமானீசுவரர், அவர் துணைவி மனோண்மனிக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன. இந்த வர்த்தமானீசுவரரைப் பாராட்டி சம்பந்தர் தனியாக ஒரு பதிகம் பாடி இருக்கிறார். மூலவரைச் சுற்றி உள்ள உட்பிரகாரத்தில் சந்திரசேகரர், திரிபுராந்தகர், அக்னி, பிரம்மா ஆகியோரின் செப்புச் சிலை வடிவங்களைக் காணலாம். நவக்கிரகங்கள் இங்கு மற்ற கோவில்களில் இருப்பதைப் போல் இல்லாமல் "ட" என்ற அமைப்பில் இருக்கிறார்கள். அனுக்கிரக சனீஸ்வர பகவானும், நளச்சக்கரவத்தியும் ஒரு சன்னதியில் உள்ளனர்.

இத்தலத்தில் வாஸ்து பூஜை செய்வது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும் அக்னி பகவான் பாபவிமோசனம் பெற்றதாலும் புதியதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து செங்கல் வைத்து மனைமுகூர்த்தம் செய்த பிறகே வீடுகட்ட ஆரம்பிப்பது வழக்கம்.

தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம்   : நன்னிலம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×