139. திருப்புகலூர் வர்த்தனீச்சரம்





	


	



























	




 




	








 




12:10:47 PM         Wednesday, April 15, 2026

139. திருப்புகலூர் வர்த்தனீச்சரம்

139. திருப்புகலூர் வர்த்தனீச்சரம்
139. திருப்புகலூர் வர்த்தனீச்சரம் 139. திருப்புகலூர் வர்த்தனீச்சரம் 139. திருப்புகலூர் வர்த்தனீச்சரம் 139. திருப்புகலூர் வர்த்தனீச்சரம் 139. திருப்புகலூர் வர்த்தனீச்சரம் 139. திருப்புகலூர் வர்த்தனீச்சரம் 139. திருப்புகலூர் வர்த்தனீச்சரம் 139. திருப்புகலூர் வர்த்தனீச்சரம் 139. திருப்புகலூர் வர்த்தனீச்சரம் 139. திருப்புகலூர் வர்த்தனீச்சரம் 139. திருப்புகலூர் வர்த்தனீச்சரம் 139. திருப்புகலூர் வர்த்தனீச்சரம்
Product Code: 139. திருப்புகலூர் வர்த்தனீச்சரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                         வர்த்தமானேஸ்வரர் கோவில், திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ.தூரத்திலும், காரைக்காலில் இருந்து 20 கி.மீ.,தூரத்திலும், திருவாரூரிலிருந்து 18 கி.மீ.,தூரத்திலும், நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் உள்ள திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயிலுக்குள்ளேயே திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் என்ற் மற்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது.

சுவாமி : வர்த்தமனீச்சுரர்

அம்பிகை : கருந்தார்க்குழலி

பதிகம் : திருஞானசம்பந்தர் - 1

திருத்தலச் சிறப்புகள்: திருப்புகலூர்த் திருக்கோவிலில் உள்ளேயே அக்கினீசுவரருக்கு அடுத்த வடபக்கத்தில் வர்த்தமனீசுரர் சன்னிதி உள்ளது. இது திருப்புகலூர் திருக்கோயிலுள் தனிக் கோயிலாக உள்ளது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலம். முருக நாயனார் சந்நிதி உள்ளது. அப்பர்சுவாமி திருவிழா சித்திரைச் சதயத்தில் 10 நாட்களுக்குச் சிறப்பாக நடைபெறுகிறது.

மூலவர் அக்னீஸ்வரர் சந்நிதிக்கு வலப்புறம் உள்ளது. இலகு இறைவன் வர்த்தமானேஸ்வரர் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். சந்நிதியுள் நுழைந்ததும் இடதுபுறம் முருகநாயனார் சந்நிதியைக் காணலாம். வர்த்தமானேஸ்வரரை சம்பந்தர் மட்டுமே பாடியுள்ளார். அவரின் பதிகக் கல்வெட்டு சந்நிதியில் உள்ளது. வர்த்தமானேஸ்ரர் சிவலிங்கத் திருமேனி அழகான மூர்த்தி. அம்பாள் மனோன்மணி சிறிய அழகான சந்நிதியில் எழுந்தருளியுள்ளாள். இறைவனையும், அம்பாள் மனோன்மணியையும் தரிசிக்க இயலாதவாறு இரு சந்நிதிகளும் இருட்டடித்து காணப்படுகின்றன. 

திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில் தலத்தை திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் பதிகம் பாடி இருந்தாலும், அதே ஆலயத்திற்குள் உள்ள திருப்புகலூர் வர்த்தமானீச்சரம் தலத்தை திருஞானசம்பந்தர் மட்டுமே பதிகம் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பாடிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. பதிகத்தின் 3-வது மற்றும் 5-வது பாடலில் 63 நாயன்மார்களில் ஒருவரான முருக நாயனாரை சிறப்பித்துப் பாடியுள்ளார். முருக நாயனார் இத்திருத்தலத்தில் அவதரித்து அருள்மிகு வர்த்தமானேசுவரருக்கு புஷ்பத் தொண்டு புரிந்து வந்ததை சம்பந்தர் தனது பதிகத்தில் 5-வது பாடலில் குறிப்பிடுகிறார்.

தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.


அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம்   : நன்னிலம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லைc

Mail this page Printable view
×
×
×
×
×
×
×