143. திருமருகலும் செங்காட்டக்குடியும்





	


	



























	




 




	








 




5:22:44 PM         Thursday, June 25, 2026

143. திருமருகலும் செங்காட்டக்குடியும்

143. திருமருகலும் செங்காட்டக்குடியும்
143. திருமருகலும் செங்காட்டக்குடியும் 143. திருமருகலும் செங்காட்டக்குடியும் 143. திருமருகலும் செங்காட்டக்குடியும் 143. திருமருகலும் செங்காட்டக்குடியும் 143. திருமருகலும் செங்காட்டக்குடியும் 143. திருமருகலும் செங்காட்டக்குடியும் 143. திருமருகலும் செங்காட்டக்குடியும் 143. திருமருகலும் செங்காட்டக்குடியும் 143. திருமருகலும் செங்காட்டக்குடியும் 143. திருமருகலும் செங்காட்டக்குடியும் 143. திருமருகலும் செங்காட்டக்குடியும் 143. திருமருகலும் செங்காட்டக்குடியும் 143. திருமருகலும் செங்காட்டக்குடியும் 143. திருமருகலும் செங்காட்டக்குடியும் 143. திருமருகலும் செங்காட்டக்குடியும்
Product Code: 143. திருமருகலும் செங்காட்டக்குடியும்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                          மாணிக்கவண்னர் (இரத்தினகிரீஸ்வரர்) கோவில்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 9 கி.மீ தொலைவில் உள்ளது. இது திருச்செங்காட்டங்குடிக்கு அருகே கிழக்கில் உள்ள தலம்.

சுவாமி : மாணிக்கவண்ணர்,  ரத்னகிரீசுவரர்

அம்பிகை : வண்டுவார் குழலி, ஆமோதள நாயகி

தலமரம் : மருகல் (வாழை)

தீர்த்தம் : இலட்சுமி தீர்த்தம்

பதிகம் : திருநாவுக்கரசர் - 1,   திருஞானசம்பந்தர் - 2

திருத்தலச் சிறப்புகள்: கோசெங்கட் சோழன் கட்டிய யானை ஏற முடியாத மாடக்கோவில்களில் திருமருகல் ஆலயமும் ஒன்றாகும். இத்தலத்தின் திருச்செங்காட்டங்குடியில் உள்ள கணபதீச்சரத்து இறைவன் தம் திருக்கோலத்தை திருஞான சம்பந்தருக்குக் காட்டி அற்புதம் நிகழ்த்திய பதி. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.

கோயில் அமைப்பு : கிழக்கு திசையிலுள்ள பெரிய உயரமான கோபுரமே பிரதான நுழை வாயிலாகும். தென் திசையில் ஒரு சிறிய கோபுரம் உள்ளது. நான்கு புறமும் மதில்களை உடைய இக்கோவில் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. பிரகாரத்தில் கொடிமர மண்டபத்தின் மேற்கே அம்பாள் சந்நிதி அமைந்திருக்கிறது. மூலவர் மாணிக்கவண்ணர் சந்நிதி ஒரு கட்டுமலை மேல்  அமைந்துள்ளது. இத்தலத்தின் தலவிருட்சம் மருகல் ஆதலால் இத்தலம் திருமருகல் என்று அழைக்கப்படுகிறது. இங்கு விநாயகர். முருகர். அறுபத்து மூவர். பராசரலிங்கம். நடராஜர்சபை, பதஞ்சலி, வியாக்கிரபாதர், நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், செட்டிமகன், செட்டிப்பெண் திருவுருவங்கள், திருஞானசம்பந்தர், சப்தமாதர்கள், சௌந்தரநாயகி, தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மன், துர்க்கை முதலிய சந்நிதிகள் உள்ளன.

கோச்செங்கட் சோழன் கட்டிய யானை ஏற முடியாத மாடக்கோவில்களில் திருமருகல் ஆலயமும் ஒன்றாகும். மருகல் என்பது ஒருவகை கல்வாழையைக் குறிக்கும். இதைத் தலமரமாகக் கொண்டதாதலின் இத்தலம் "திருமருகல்" என்று பெயர் பெற்றது. கிழக்கு திசையிலுள்ள 68 அடி உயரமான கோபுரமே பிரதான நுழை வாயிலாகும். கோவிலுக்கு வெளியே எதிரில் இத்தலத்தின் தீர்த்தமான மாணிக்க தீர்த்தம் நீராழி மண்டபத்துடன் உள்ளது. தீர்த்தக் கரையில் முத்து விநாயகர் சந்நிதியைக் காணலாம். தென் திசையில் ஒரு சிறிய கோபுரம் உள்ளது. 4 புறமும் மதில்களை உடைய இக்கோவிலில் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. இடதுபுறம் மேடையுடன் வன்னி மரம் உள்ளது. இம்மரத்தினடியில் தான் ஞானசம்பந்தர் விஷம் தீர்த்து எழுப்பிய செட்டி மகனுக்கும், செட்டிப் பெண்ணுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

பிரகாரத்தில் கொடிமர மண்டபத்தின் மேற்கே அம்பாள் சந்நிதி அமைந்திருக்கிறது. மூலவர் இரத்தினகிரீஸ்வரர் சந்நிதி ஒரு கட்டுமலை மேல் அமைந்திருக்கிறது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக சிவலிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். சனீசுவர பகவானுக்கு சுவாமி சந்நிதிக்கு போகும் வாயிற்படியில் வடபுறம் தனி சந்நிதி உள்ளது. இதுபோல வேறு எந்த தலத்திலும் சனிபகவானை காண முடியாது. உள்பிராகாரத்தில் அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள், பராசரலிங்கம், விநாயகர், சுப்பிரமணியர் முதலிய சந்நிதிகள் உள்ளன. கோயிலின் உட்பிரகாரத்தில் வடக்கு மதில் ஓரமாக தல விருட்சம் இருக்கிறது. கோஷ்ட மூர்த்தங்களாகக் கணபதியும், தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். நவக்கிரக சந்நிதியும், பைரவர், சூரியன் திருவுருவங்களும், ஒரே பீடத்தில் அமைந்துள்ள செட்டி மகன், செட்டிப் பெண் மூலத்திருவுருவங்களும், பக்கத்தில் ஞானசம்பந்தர் மூலமேனியும் அடுத்தடுத்துள்ளன. இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழ் வைப்புத் தலங்களில் இத்தலம் ஒன்றாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் இரண்டு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

ஒருசமயம் வைப்பூரைச் சேர்ந்த செட்டிப் பெண் ஒருத்தி, தன் தந்தையின் சொல் தவறக் கூடாது என்னும் வாய்மையில் தன் முறை மாமனோடு உடன்போக்கு செய்தாள். இத்தலத்தில் தங்கி இருந்த போது பாம்பு தீண்டி அச்செட்டிமகன் உயிர் துறந்தான். அப்பெண்ணின் அழுகை ஒலி கேட்டு திருஞானசம்பந்தர் அங்கு வந்து செய்தியறிந்து செட்டி மகனை உயிர் பெற்று எழுமாறு அற்புதம் நிகழ்த்தித் திருமணம் செய்து வைத்தார். இத்தலத்து இறைவனை வழிபட்டால் பிரிந்தவர் கூடிவாழ்வர். திருமாலைவிட்டு பிரிந்திருந்த மகாலெட்சுமியும் இங்குள்ள இறைவனை வழிபட்டு திருமாலுடன் சேர்ந்தார் என்று தலபுராணம் கூறுகிறது.

தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம்   : நன்னிலம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×