159. திருநாலூர் மயானம்





	


	



























	




 




	








 




9:35:28 AM         Thursday, June 25, 2026

159. திருநாலூர் மயானம்

159. திருநாலூர் மயானம்
159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம் 159. திருநாலூர் மயானம்
Product Code: 159. திருநாலூர் மயானம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                     ஞானபரமேஸ்வரர் கோவில், திருநாலூர் மயானம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் ஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் - குடவாசல் சாலை வழியில் திருச்சேறைக்குத் தென் கிழக்கே 1 கி.மீ தொலைவில் குடமுருட்டி ஆற்றின் வடகரையில் உள்ளது. இது கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது

சுவாமி : பலாசவனநாதர், ஞானபரமேஸ்வரர்

அம்பிகை : பெரிய நாயகியம்மன், ஞானாம்பிகை

தலமரம் : பலாசு

தீர்த்தம் : ஞான தீர்த்தம்

பதிகம் : திருஞானசம்பந்தர் - 1

திருத்தலச் சிறப்புகள் : இத்தலத்தில் ஆபஸ்தம்ப ரிஷி வழிபட்டுப் பேறு பெற்றார் என்பது சிறப்பு. நான்கு வேதங்களும் வழிபட்ட திருத்தலம். கிழக்கு நோக்கிய சந்நிதி. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.

சோழர் காலத்து கட்டிடக் கலைப்பாணியில் அமைந்த இககோவில் கிழக்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயிலுக்கு வெளியே நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. கோவிலுக்கு வெளியே ஞானதீர்த்தம் உள்ளது. வாயில் வழி உள் நுழைந்தால் வெளிப் பிரகாரம் உள்ளது. பிரகாரம் சுற்றி வரும்போது மேற்குச் சுற்றில் அமிர்தகடேஸ்வரர், சட்டநாதர், ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீவீழிஅழகர் ஆகிய சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாக உள்ளன. அதையடுத்து நாகாராஜா, சண்டிகேஸ்வரி, புதிய தட்சிணாமூர்த்தி, ஆத்மலிங்கம் ஆகியவற்றைக் காணலாம். வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானின் சந்நிதியும் இப்பிரகாரத்தில் உள்ளது. வடக்குப் பிரகாரத்தில் கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கையைக் காணலாம். நவக்கிரக சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் உள்ளது. பிரகாரச் சுற்று முடிந்து கருவறை மண்டப வாயில் வழி உள்ளே நுழைந்தால் மூலவர் கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்தம்ப முனிவர், நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பைப் பெற்ற தலம். இறைவன் கருவறை விமானம் உருண்டை வடிவத்திலுள்ளது. அம்பாள் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.

நான்கு மயானங்களில் இதுவும் ஒன்று. மற்றவை கடவூர் மயானம், கச்சி மயானம், காழி மயானம் ஆகியனவாகும். இக்கோவிலின் அருகே நாலூர் என்ற வைப்புத் தலம் உள்ளது.

தினந்தோறும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

ரயில் நிலையம்   : கும்பகோணம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×