163. திருஅவளிவணல்லூர்





	


	



























	




 




	








 




11:24:22 PM         Thursday, June 25, 2026

163. திருஅவளிவணல்லூர்

163. திருஅவளிவணல்லூர்
163. திருஅவளிவணல்லூர் 163. திருஅவளிவணல்லூர் 163. திருஅவளிவணல்லூர் 163. திருஅவளிவணல்லூர் 163. திருஅவளிவணல்லூர் 163. திருஅவளிவணல்லூர் 163. திருஅவளிவணல்லூர் 163. திருஅவளிவணல்லூர் 163. திருஅவளிவணல்லூர் 163. திருஅவளிவணல்லூர் 163. திருஅவளிவணல்லூர் 163. திருஅவளிவணல்லூர்
Product Code: 163. திருஅவளிவணல்லூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                     சாட்சி நாதர் கோவில், திருஅவளிவநல்லூர்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் சாலியமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கே 10 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது  மேலும் அரதைப்பெரும்பாழிக்கு மேற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது. தஞ்சையிலிருந்து அரித்துவாரமங்கலம் செல்லும் நகரப்பேருந்துகள் இத்தலத்தின் வழியாகவே செல்கின்றன.

சுவாமி : சாட்சி நாதர்

அம்பிகை : சௌந்தர நாயகி, சௌந்தர வல்லி

தலமரம் : பாதிரி

தீர்த்தம் : சந்திரி தீர்த்தம்

பதிகம் : திருநாவுக்கரசர் - 1,   திருஞானசம்பந்தர் - 1,   சுந்தரர் - 1

திருத்தலச் சிறப்புகள்: திருமால், காசிபர், முருகன், சூரியன், அகத்தியர், கண்வர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றனர். திருமால் பன்றியாகத் தோன்றிய பொழுது ஈசனால் அவரது கொம்பு முறிக்கப்பட்டது. அத்தோற்றத்துடன் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கி அருள் பெற்ற தலம். இத்திருத்தலத்திற்கு புல்லாரண்யம், சாட்சிநாதபுரம், பாதிரிவனம் எனவும் பெயர்கள் வழங்கப்பெறுகின்றன. மூவர்  பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பெற்ற  தலம். 

தல வரலாறு: பண்டைநாளில் இத்தலத்தில் இறைவனைப் பூசித்து வந்த ஆதி சைவ அந்தணர் ஒருவருக்கு இரு பெண்கள் இருந்தனர். மூத்த பெண்ணை ஒருவருக்கு மணம் முடித்தார். மணந்து கொண்டவர் சிறிது காலங்கழித்து, காசி யாத்திரை சென்றார். அவர் காசி சென்றிருந்த காலத்தில் மூத்த பெண்ணுக்கு அம்மை வார்க்கப்பெற்று, உருவம் மாறியதோடு கண்களையும் இழந்தாள். இரண்டாவது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. சில ஆண்டுகள் கழித்து, காசி யாத்திரை சென்றிருந்த மூத்த மருமகன் வீடு திரும்பினார். தன் மனைவியின் உருவ வேறுபாட்டைக்கண்டு, "இவள் என் மனைவியல்ல என்றும் உருவத்தில் ஒத்திருந்த இளையவளே என் மனைவி என்று வாதிட்டார். இதனால் இரு பெண்களையும் பெற்ற ஆதிசைவர் மனங்கலங்கி இத்தல இறைவனைப் பிரார்த்திக்க, இறைவன் காட்சி தந்து மனந்தடுமாறிய மருமகனைப் பார்த்து, மூத்தவளே அவர் மனைவி என்னும் பொருளில் "அவள் இவள்" என்று சுட்டிக் காட்டி மறைந்தார். மேலும் இறைவன் அருளியவாறு மூத்தவளும் இத்தலத்துத் தீர்த்தத்தில் மூழ்கிப் பண்டைய உடலும் கண்களும் பெற்றாள். கணவனுடனும் சேர்ந்து இன்புற்று வாழ்ந்தாள். அவள் இவள் என்று சாட்சி கூறியதால் இத்தல இறைவன் சாட்சிநாதர் என்ற பெயர் பெற்றார். தலத்தின் பெயரும் நல்லூர் என்பது மாறி அவளிவநல்லூர் என்றாயிற்று.

கோவில் அமைப்பு: இவ்வாயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு கிழக்கு நோக்கிய முகப்பு வாயில உள்ளது. உள்ளே வெளிச்சுற்றில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். முகப்பில் விநாயகர் காட்சி தருகிறார். . உள்ளே நுழைந்தால் நேரே மூலவர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். மூலவருக்குப் பின்னால் தலவரலாற்றின்படி சாட்சி சொன்ன நிலையில் சாட்சிநாதராக சிவன் பார்வதி காட்சி தருகின்றனர். உள்சுற்றில் விநாயகர், நால்வர் சந்நிதிகள், கண்வ முனிவர், வீரபத்திரர், சப்தகன்னியர், அறுபத்துமூவர் மூலத்திருமேனிகள் ஆகிய சந்நிதிகள் உள்ளன. சோமாஸ்கந்தர், விநாயகர், சிவகாமி, நால்வர், ஆறுமுகர், மகாலட்சுமி ஆகிய உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராசர் சந்நிதி உள்ளது. பக்கத்தில் குமாரலிங்கம், காசிவிசுவநாதர், விசாலாட்சி, தபஸ் அம்பாள் திருமேனிகள் உள்ளன. எதிரில் நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. கால பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கோஷ்டமூர்த்தங்களாக அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரமன், துர்க்கை ஆகியோர் உள்ளனர். எதிரில் சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது.

தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம்   : சாலியமங்கலம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×