185. திருகைச்சினம்





	


	



























	




 




	








 




2:26:56 AM         Wednesday, April 15, 2026

185. திருகைச்சினம்

185. திருகைச்சினம்
185. திருகைச்சினம் 185. திருகைச்சினம் 185. திருகைச்சினம் 185. திருகைச்சினம் 185. திருகைச்சினம் 185. திருகைச்சினம் 185. திருகைச்சினம் 185. திருகைச்சினம் 185. திருகைச்சினம்
Product Code: 185. திருகைச்சினம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                      கைச்சின நாதேசுவரர் கோவில், திருகைச்சினம்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து சுமார் 18 கி.மி. தொலைவிலும், திருநெல்லிக்காவல் ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும் இத்தலம் ஊள்ளது. 

சுவாமி : கைச்சின நாதேசுவரர்

அம்பிகை : வெள்வளை நாயகி

தீர்த்தம் : இந்திரதீர்த்தம், வச்சிரத் தீர்த்தம்

பதிகம் : திருஞானசம்பந்தர்


சிறப்புக்கள் : இந்திரன், ஐராவதத்தின் தந்தத்தால் செய்த வெள்வளையை அம்பிகைக்கு அணிவித்து வழிபட்டதால் அம்பிகைக்கு வெள்வளை நாயகி என்று பெயர் ஏற்பட்டது. இந்திரனோட சாபம் இத்தலத்தில்தான் விலகியது. தியாகராஜருக்குக் காட்சி கிடைத்ததும், அகத்தியரின் பிரம்மஹத்தி தோஷம் விலகியதுமாகிய சிறப்புடைய இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் இங்குள்ள ரிஷபாரூட தட்சிணா மூர்த்தியே. திருணபிந்து முனிவர் வழிபட்ட தலம். முற்காலத்தில் இப்பகுதியில் கோங்கு மரங்கள் அடர்ந்திருந்தமையால் கோங்குவனம், கர்ணிகாரவனமென்றும் பெயர்கள் உண்டு.

தலவரலாறு: கெளதம முனிவரின் மனைவியான  அகலிகை மீது மோகம் கொண்டான்​ இந்திரன். முனிவர் இல்லாத சமயத்தில் இந்திரன், கெளதமரைப் போலவே உருமாறி அகலிகையுடன் சேர்ந்து இருந்தான். விபரீதம் நடந்துள்ளதை ஞான திருஷ்டியால் உணர்ந்த முனிவர் ஆசிரமத்துக்கு திரும்பினார். இந்திரனின் செயலைக்கண்ட அவர் அவனுக்கு சாபமிட்டார். சாபம் பெற்ற இந்திரன் பூலோகத்திற்கு வந்து மண்ணால் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தான். பலகாலம் வழிபட்டும் தன் சாபம் நீங்காமல் இருக்கக் கண்ட இந்திரன் சிவலிங்கத்தைக் கைகளால் கட்டிப் பிடித்துக் கொண்டு சிவனிடம் தன்னை மன்னித்து அருளும் படி வேண்டினான். இவ்வாறு இந்திரன் செய்துவர இந்திரனின் கைச்சின்னம் சிவலிங்கத்தில் பதிந்து தழும்பாக மாறியது.  சிவன், நீண்ட நாள் சாபத்தில் சிக்கி வருந்திய இந்திரனுக்கு விமோசனம் கொடுத்தார். இதனாலேயே இந்திரன் பூஜை செய்த இந்த சிவலிங்கத்திற்கு கைச்சின்ன நாதேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. 

கோவில் அமைப்பு: கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். மதிற்சுவருடன் கூடிய கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே  நேரே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கோபுர வாயில் வழியாக  உள் பிரகாரத்தில் விநாயகர், நவக்கிரகம், சுப்ரமணியர், நடராஜர், விதூமலிங்கம், அர்த்தநாரீஸ்வரர் சந்நிதிகள் இருக்கின்றன. இறைவி வெள்வளை நாயகி சந்நிதி தனிக் கோவிலாக ஒரு சுற்றுப் பிராகாரத்துடன் உள்ளது. சுற்றுப் பிராகார கோஷ்டங்களில் முறையே ஜேஷ்டாதேவி, துர்க்காதேவி, சரஸ்வதி ஆகியோர் உள்ளனர். உள் பிரகாரத்தில் மேற்கில் விநாயகர் அஷ்டவசுக்களில் ஒருவனான விதூமன் வழிபட்ட விதூமலிங்கம், சுப்பிரமணியர், அம்பாள் சந்நிதிகளும் உள்ளன. கிழக்கில் நடராஜ மண்டபம் உள்ளது. மதிலுக்கு வடப்புறம் இந்திரதீர்த்தமும் தென்புறம் வச்சிரத் தீர்த்தமும் உள்ளது. யானை ஏறாதபடி கட்டப்பட்ட மாடக் கோயிலாகத் திகழும் இக்கோயில் மிகவும் பழமையானது. இக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி ரிஷபாரூட தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தருவது சிறப்பாக உள்ளது.  நடனச்சிற்பங்களும், அர்த்தநாரீஸ்வர வடிவமும் அழகாக உள்ளன.

இந்த ஆலயத்தில் ஸ்ரீனிவாச பெருமானின் அழகிய திரு உருவம் உள்ளது. இவ்வாலயத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தோண்டும் போது கிடைத்த சங்கு சக்கரபாணியாகத் திகழும் பெருமாள் சிலை இதுவாகும். மகாலட்சுமியின் சகோதரியாக கருதப்படும் ஜேஷ்டாதேவிக்கு (மூதேவி) இக்கோவிலில் தனி சந்நிதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விசேஷ நாள்களில் சுவாமிக்கு வெள்ளி நாகாபரணமும், அம்பாளுக்கு வெள்ளி அங்கியும் சார்த்தப் பெறுகின்றன. பேய் பிடித்தல் போன்ற தோஷங்கள் இத்தலத்தில் நீங்குவதாக வரலாறு சொல்லப்படுகிறது.

தினந்தோறும் காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சி

அருகிலுள்ள ரயில் நிலையம்   : திருநெல்லிக்காவல், திருத்துறைப்பூண்டி

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×