220. திருச்சோபுரம்





	


	



























	




 




	








 




3:21:28 AM         Friday, May 01, 2026

220. திருச்சோபுரம்

220. திருச்சோபுரம்
220. திருச்சோபுரம் 220. திருச்சோபுரம் 220. திருச்சோபுரம் 220. திருச்சோபுரம் 220. திருச்சோபுரம் 220. திருச்சோபுரம் 220. திருச்சோபுரம் 220. திருச்சோபுரம் 220. திருச்சோபுரம் 220. திருச்சோபுரம் 220. திருச்சோபுரம் 220. திருச்சோபுரம்
Product Code: 220. திருச்சோபுரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                      சோபுரநாதர் கோவில்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் கடலூர் என்னும் மாவட்டத்தில் இத்திருத்தலம் உள்ளது. இத்தலம் தற்போது தியாகவல்லி என வழங்கப்படுகிறது. கடலூருக்குத் தெற்கே 20 கி.மீ. தொலைவில் கடற்கரையில் உள்ளது. கடலூர்-சிதம்பரம் ரயில் பாதையில் உள்ள ஆலம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கே சுமார் 3 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ஆலம்பாக்கம் சென்னையிலிருந்து 190 கி.மீயும் சிதம்பரத்திலிருந்து 30 கி.மீ தொலைவிலும் கடலூரிலிருந்து 32 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சுவாமி : திருச்சோபுரநாதர்,  மங்களாபுரீசுவரர்

அம்பிகை : வேல்நெடுங்கண்ணி , சத்தியதாட்சியம்மை ,  தியாகவல்லியம்மை

தலமரம் : கொன்றை

தீர்த்தம் : கோபுர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்

பதிகம் : திருஞானசம்பந்தர் - 1

திருத்தலச் சிறப்புகள்: இத்திருத்தலத்தில் திரிபுவன சக்கரவர்த்தியான சோழ மன்னரின் பட்டத்தரசி தியாகவல்லி திருப்பணி செய்து பூசித்துப் பேறு பெற்றார். திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம்.

கோவில் அமைப்பு: மணற்பாங்கான பகுதியில் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. விசாலமான இடப்பரப்பு. ஓரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. உள்ளே கவசமிட்ட கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. இரண்டாவது வாயில் வழியே உள்ளே நுழைந்து உட்பிரகார வலம் வரும் போது சுப்பிரமணியர், கஜலட்சுமி, வீரட்டேஸ்வர லிங்கம், கண்ணப்பர், திரிபுவன சக்கரவர்த்தி அவர் மனைவி வழிபட்ட லிங்கங்கள், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் முதலிய சந்நிதிகள் உள்ளன. விநாயகரைத் தொடர்ந்து அறுபத்துமூவர் சந்நிதியும், சோமாஸ்கந்தர் சந்நிதியும் உள்ளன. கருவறை முன் மண்டபம் கடந்து செல்லும் போது நேரே மூலவர் தரிசனம் தருகிறார். முன் மண்டபத்தின் இடதுபுறம் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. இரு சந்நிதிகளையும் ஒரே இடத்திலிருந்து தரிசிக்கக் கூடிய அமைப்புடன் அமைந்துள்ளன. இத்தலத்து மூலவர் சிவலிங்கத் திருமேனி அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சதுர ஆவுடையார் மீது பாணம் சுற்றளவு சற்று குறைவாக நீட்டுவாக்கில் உள்ள லிங்கத் திருமேனி. சுவாமி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். லிங்கத்தை அகத்தியர் பிரதிஷ்டை செய்த போது ஏற்பட்ட கைத்தடமும் இருக்கிறது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். கோஷ்ட மூர்த்தத்தில் லிங்கோத்பவருக்கு இருபுறங்களிலும் திருமாலும் பிரம்மாவும் நின்று தரிசிக்கும் கோலத்தில் உள்ளனர். மும்மூர்த்திகளின் இந்த தரிசனம் விசேஷமானது

இத்தலம்  மணல் மேடிட்டு இருந்த நிலையில் தம்பிரான் மார்களால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்டது என உரைக்கப்படுகிறது. என இத்தலம் தம்பிரான் கண்ட தலம் என்று அழைக்கப்படுகிறது. அகத்திய முனிவர் வழிபட்ட பதி. இத்தலத்தில் விநாயகர், முருகர், வீரட்டேசுவரர், கஜலட்சுமி, அறுபத்துமூவர், நடராஜர், திருமால், பிரம்மன் முதலிய சந்நிதிகள் உள்ளன.

தினந்தோறும் காலை 8-30 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

கடலூர் - சிதம்பரம் சாலை வழியில் கடலூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலுள்ள ஆலப்பாக்கம் என்ற கிராமத்தை அடைந்து அங்கிருந்து பிரிந்து ஆலப்பாக்கம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் சென்று ரயில் பாதையைக் கடந்து சுமார் 1.5 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். திருசோபுரம் கிராமத்தில் சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

ரயில் நிலையம்   : ஆலம்பாக்கம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×