221. திருவதிகை





	


	



























	




 




	








 




3:21:44 AM         Friday, May 01, 2026

221. திருவதிகை

221. திருவதிகை
221. திருவதிகை 221. திருவதிகை 221. திருவதிகை 221. திருவதிகை 221. திருவதிகை 221. திருவதிகை 221. திருவதிகை 221. திருவதிகை 221. திருவதிகை 221. திருவதிகை
Product Code: 221. திருவதிகை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                          அதிகை வீரட்டேஸ்வரர் கோவில்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் தென் ஆற்காடு மாவட்டம் பண்ருட்டியிலிருந்து கடந்து செல்லும் பாதையில் 1 கி.மீ. தொலைவில் கெடில நதியின் வடகரையில் உள்ளது. இத்திருத்தலத்தின் திருப்பெயர் திருவதிகை வீரட்டானம் என்பதாகும். இத்தலம் சென்னையிலிருந்து சுமார் 175 கி.மீ தொலைவில் அமைந்தள்ளது. மேலும் விழுப்புரத்திலிருந்து 20 கி.மீயும் கடலூரிலிருந்து 26 கி.மீ தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

சுவாமி : வீரட்டேசுவரர்,  வீரட்ட நாதர், அதிகைநாதர்

அம்பிகை : திரிபுரசுந்தரி

தலமரம் : சரக்கொன்றை

தீர்த்தம் : கெடிலநதி

பதிகம் : 
திருநாவுக்கரசர் - 16
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1

திருத்தலச் சிறப்புகள்: சிவபெருமான் வீரத்திருவிளையாடல் புரிந்த எட்டுத் வீரட்டத்தலங்களுள் இத்தலமும் ஒன்று. நாவுக்கரசரின் சகோதரி திலகவதியார் ஈசனுக்குத் திருத்தொண்டு புரிந்த தலம். திருநாவுக்கரசரை ஆட்கொண்டு சூலை நோய் தீர்த்த பதி. ஞான சாத்திர நூலான உண்மை விளக்கத்தை அருளிச் செய்தவரும், மெய்கண்ட நாயனாரின் மாணவர்கள் 49 ல் ஒருவருமான  மனவாசகங்கடந்தாரின் அவதாரப்பதி. மூவர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம். முப்புரங்களை எரித்த வீரச்செயல் புரிந்த தலம். திருநாவுக்கரசர் தனது முதல் தேவாரத் திருப்பதிகம் பாடி சைவப்பெருநெறிக்கு மீண்டு வந்தது இத்தலத்தில்தான். திருஞானசம்பந்தருக்கு திருநடனம் காட்டிய தலம். அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்துவந்த தலம். சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான உண்மை விளக்கம் நூலை அருளிய மனவாசகங்கடந்தார் பிறந்த தலம் இதுவே. அப்பர் பெருமான் உழவாரப் பணி புரிந்த தலம் இதுவென்று இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கியதும் இறைவனின் திருவடி தீட்சை பெற்றதும் இத்தலத்தில்தான். பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணத்திலிருந்து சைவநெறிக்கு மாறி சமணப் பள்ளிகளை இடித்து குணபரவீச்சரம் எழுப்பியது இத்தலத்தில்தான். விசய நகர ஆட்சியில் இது திருவதிகை நாடு என்ற பெயருடன் ஒரு சிற்றரசின் தலைநகராய் இருந்தது. மகேந்திரவர்ம பல்லவன் திருநாவுக்கரசரை நீற்றறையில் இட்ட தலமும் இதுவேயாகும்.

பெயர்காரணம் : அதியமான் அல்லது அதிகன் என்பது சேரர் குலத்தில் ஒரு பிரிவு என்று கூறப்படுகிறது. அக்குலத்தைச் சார்ந்த மன்னர்கள் அதிராசர் எனப்பட்டனர். அவர்கள் இக்காலத்தில் தருமபுரி எனப்பெறும் தகடூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தனர். அம்மன்னர்களில் ஒருவர் இக்கோயிலைக் கட்டியமையால் அதியரைய மங்கலம் எனப்பெயர் பெற்றது எனக் கருதப்படுகிறது
 நிருபதுங்க பல்லவர் காலத்தில் இவ்வூர் அதியரையமங்கலம் என்றும் முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தில் அதிராசமங்கலம் என்றும் முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் அதிராமங்கலியபுரம் என்றும் மணவிற் கூத்தனான கலிங்கராயனின் திருப்பணிகளைக் கூறும் பாடல்களில் அதிகை என்றும் குறிக்கப்பெற்றுள்ளன.

தல பெருமை : தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு எனும் மூன்று கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்துவந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடத்திற்கு செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புறங்களையும் வைத்துக்கொண்டு அவர்கள் தேவர்கட்கும் முனிவர்கட்கும் தொல்லைகள் பல கொடுத்துக் கொண்டே வந்தனர். தேவர்கள் ஈசனின் தாழ் பணிந்து புகலிடம் கேட்டனர். ஈசன் தேவர்களைக் காக்கப் பூமியை  தேராக்கி, நான்கு வேதங்களை குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய, சந்திரர்களை சக்கரங்களாக்கி, மற்ற உலக படைப்புகளையும் வானவர்களையும் போர்கருவிகளாகவும் உடல் உறுப்புகளாகவும் மாற்றினார். இச்சமயம் ஒவ்வொரு உறுப்புகளும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று கர்வம் கொள்ளத் தொடங்கின. ஈசன் இப்படையில் எந்த பயனும் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க நினைத்து தேர் தட்டில் கால்வைக்க அதன் அச்சு முறிந்தது. அமரர்களின் அகந்தையை எண்ணி எம்பெருமான் எள்ளி நகைக்க அவர் சிரித்த உடனேயே வானவர் உதவி ஏதுமின்றி கோட்டைகள் மூன்றும் பொடிபொடியாகின. இச்சம்பவம் நடந்ததுதான் திருவதிகை. அரக்க மன்னர்கள் மூவரும் சிவபூஜையைத் தவறாது செய்து வந்ததை எண்ணி இருவரைத் தமது வாயில் காப்போராகவும் ஒருவரைக் குடமுழா முழக்குபவராகவும் தமது அருகில் இருக்கும்படி ஆணையிட்டு ஈசன் மறைந்தார். இவ்வாறு மறக்கருணையோடு அறக்கருணையும் புரிந்த பெம்மானின் மூர்த்தத்தை வழிபடும் க்ஷேத்ரம் திருவதிகை. இத்திருத்தலத்தில் அம்பாள் சந்நிதி தனிக் கோயிலாக உள்ளது. இங்கு திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு 10 நாள் திருவிழா சித்திரை சதயத்தில் நடைபெறுகிறது. விரிசடைக் கடவுள் என்று பழைய தமிழ் நூல்கள் சிறப்பித்துக்கூறும் பெருமை உடையது.

திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலவதியும் மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர். மருள்நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வந்தார். தமக்கை திலவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் இறந்துபோக இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து இறைப்பணி வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலை நோய் தாக்க அவன் துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் கூட்டிக்சென்று அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும் பாடி முடித்தபின் சூலை நோய் நீங்கப்பெற்று நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் சைவ சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். தனது சூலை நோய் நீங்கப் பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும்.

கோயில் அமைப்பு : இவ்வாலயம் மிகப்பெரிய ஆலயம் ஆகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடன் 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது. கோபுர வாயிலின் இரு பக்கமும் நாட்டியக் கலையின் 108 தாண்டவ லட்சணங்களை விளக்கும் வகையில் பெண்கள் அழகிய சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றனர். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் உள்ள திறந்த வெளி முற்றத்தில் தென்பக்கம் சங்கர தீர்த்தமும் வடப்பக்கம் பத்மாசக் கோலத்தில் காணப்படும் ஒரு புத்தர் சிலையும் உள்ளன. 5 நிலைகளையுடைய 2வது கோபுர வாயிலில் உள்ள ஒரு பெரிய நந்தியின் உருவச்சிலை காணப்படுகிறது. 2வது சுற்றின் தென்புறத்தில் திருநாவுக்கரசருக்கும் அவர் தமக்கை திலகவதிக்கும் தனித்தனியாக சந்நிதி உள்ளது. அதற்கடுத்து பைரவர் சனீஸ்வரர் மற்றும் துர்க்கையம்மன் சந்நிதிகள் உள்ளன. அதன்பின் இறைவி சந்நிதி இருக்கிறது. அம்பாள் கோவில் வாசலில் இருந்து இறைவி சந்நிதி விமானத்தைக் காணலாம். விமானத்தில் உள்ள சுதை வேலைப்பாடு சிற்பங்கள் பல வண்ணங்களில் காணப்படுகிறது.

 உள்சுற்றில் தென்மேற்கே உள்ள பஞ்சமுகலிங்கம் காணவேண்டிய ஒன்றாகும். இது பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. இத்தகைய பஞ்சமுகலிங்கம் தமிழ்நாட்டில் வேறெங்கும் காண முடியாது.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் : பண்ருட்டி

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×