225. திருக்கோவலூர் வீரட்டம்





	


	



























	




 




	








 




3:23:15 AM         Friday, May 01, 2026

225. திருக்கோவலூர் வீரட்டம்

225. திருக்கோவலூர் வீரட்டம்
225. திருக்கோவலூர் வீரட்டம் 225. திருக்கோவலூர் வீரட்டம் 225. திருக்கோவலூர் வீரட்டம் 225. திருக்கோவலூர் வீரட்டம் 225. திருக்கோவலூர் வீரட்டம்
Product Code: 225. திருக்கோவலூர் வீரட்டம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                               வீரட்டேஸ்வரர் கோவில்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. இத்திருவூர் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் இருக்கிறது.  இது மேலூர் கீழுர் என இரண்டு பிரிவாக திகழ்கின்றது. இத்தலம் கீழுரில் அமைந்துள்ளது. திருவண்ணாமலையிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ளது. திருக்கோவிலூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ளது. இத்திருத்தலம் உள்ளது. திண்டிவனம் சென்னை விழுப்புரம் திருவண்ணாமலை கடலூர் சிதம்பரம் விருதாச்சலம் முதலிய பெரிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

சுவாமி : வீரட்டேசுவரர்

அம்பிகை : பெரிய நாயகி, சிவானந்த வல்லி, பிருகந் நாயகி

தலமரம் : வில்வம், கொன்றை

தீர்த்தம் : தென்பெண்ணை ஆறு

திருத்தலச் சிறப்புகள் : இத்தலம் எட்டு வீரட்டான தலங்களில் ஒன்று. அந்தகாசுரனை அழித்த வீரட்டத்தலம். மெய்ப்பொருள் நாயனார் ஆண்ட பதி. ஔவையார் விநாயகப் பெருமானைப் போற்றி விநாயகர் அகவல் பாடிய தலம். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம். தமிழரின் பெருமையைக் கடல் கடந்த நாடுகளிலும் பரவச் செய்த சோழ மன்னர்களில் தலைசிறந்தவனான இராஜராஜசோழன் பிறந்தது இத்தலத்திலேயாகும்.

இத்திருத்தலத்திற்கு சேதிநாடு, நடுநாடு என பல பெயர்கள் உண்டு. சிவாலயத்தில் அந்தகாசுர சம்ஹார மூர்த்தியின் உற்சவ வடிவம் செப்புத் திருமேனியில் காணலாம். அந்தகாசுரனைக் கீழே தள்ளி மிதித்துக் கொண்டு அவன் மீது சூலத்தைப் பாய்ச்சும் நிலையில் உள்ளது. இங்கு விநாயகர், முருகர், சண்டிகேசுவரர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சந்திரசேகரர், அஷ்டபுஜதுர்க்கை, ஏகாம்பரேசுவரர், பஞ்சபூதலிங்கங்கள், விசுவநாதர், நவக்கிரகம் முதலிய சந்நிதிகள் உள்ளன.

திருத்தல வரலாறு : சிவபெருமானின் மூன்று கண்களை விளையாட்டாக உமையன்னை பொத்தினாள். அதனால் உலகமே இருண்டது. இறைவி கண்களைப் பொத்தியது ஒரு கணம் என்றாலும் உலகத்திற்கு ஒரு ஊழியாயிற்று. உமையன்னை கண் பொத்திய நேரத்தில் உண்டான இருளில் பிறந்ததாலும், கரிய நிறம் உடையவனாக இருந்ததாலும் அந்தகன் எனப்பட்டான். சிவனிடம் தான் பெற்ற பெருவரத்தால் அந்தகன் அமரர்களைத் துன்புறுத்தினான். வானவர்கள் சிவனிடம் வந்து முறையிட்டனர். கருணையே வடிவான ஈசன் தேவர்கட்டு மனமிரங்கி சிவகணங்களை அனுப்பி அந்தாகாசுரனைப் போரிட்டு அழிக்குமாறு பணித்தார். சிவகணங்களால் அவ்வசுரனை அழிக்க முடியவில்லை. எனவே சிவபெருமான் அந்தகன் மேல் போர் தொடுத்தார். தரையில் வீழ்ந்த அந்தகனின் குருதியிலிருந்து ஆயிரக்கணக்கான அந்தகர்கள் தோன்றினார்கள். அவர்களை திருமால் தன் சக்கரப்படையால் கொன்றார்.  சிவபெருமான் அந்தகனைத் தன் சூலத்தால் குத்தி எடுத்து திருநடனம் ஆடினார். மேலும் அந்தகனின் உடலிலிருந்து விழும் குருதியைத் தடுக்க ஈசன் யோகேசுவரியை உண்டாக்க நான்முகன், மகேசுவரன், திருமால், வராகமூர்த்தி, முருகன், இந்திரன் மற்றும் எமன் ஆகியோர் தத்தம் சக்திகளை அனுப்பி வைத்தனர். அவர்கள் முறையே பிராம்மி, மகேசுவரி, வைணவி, வராகி, கௌமாரி, இந்திராணி மற்றும் சாமுண்டியாம். இவர்கள் ஏழு கதிருக்கோவிலூர் வீரட்டம்

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. இத்திருவூர் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் இருக்கிறது.  இது மேலூர் கீழுர் என இரண்டு பிரிவாக திகழ்கின்றது. இத்தலம் கீழுரில் அமைந்துள்ளது. திருவண்ணாமலையிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ளது. திருக்கோவிலூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ளது. இத்திருத்தலம் உள்ளது. திண்டிவனம் சென்னை விழுப்புரம் திருவண்ணாமலை கடலூர் சிதம்பரம் விருதாச்சலம் முதலிய பெரிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

சுவாமி : வீரட்டேசுவரர்

அம்பிகை : பெரிய நாயகி சிவானந்த வல்லி பிருகந் நாயகி

தலமரம் : வில்வம்  கொன்றை

தீர்த்தம் : தென்பெண்ணை ஆறு

திருத்தலச் சிறப்புகள்: இத்தலம் எட்டு வீரட்டான தலங்களில் ஒன்று. அந்தகாசுரனை அழித்த வீரட்டத்தலம். மெய்ப்பொருள் நாயனார் ஆண்ட பதி. ஔவையார் விநாயகப் பெருமானைப் போற்றி விநாயகர் அகவல் பாடிய தலம். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம். தமிழரின் பெருமையைக் கடல் கடந்த நாடுகளிலும் பரவச் செய்த சோழ மன்னர்களில் தலைசிறந்தவனான இராஜராஜசோழன் பிறந்தது இத்தலத்திலேயாகும்.

இத்திருத்தலத்திற்கு சேதிநாடு நடுநாடு என பல பெயர்கள் உண்டு. சிவாலயத்தில் அந்தகாசுர சம்ஹார மூர்த்தியின் உற்சவ வடிவம் செப்புத் திருமேனியில் காணலாம். அந்தகாசுரனைக் கீழே தள்ளி மிதித்துக் கொண்டு அவன் மீது சூலத்தைப் பாய்ச்சும் நிலையில் உள்ளது. இங்கு விநாயகர் முருகர் சண்டிகேசுவரர் நடராஜர் தட்சிணாமூர்த்தி லிங்கோத்பவர் சந்திரசேகரர் அஷ்டபுஜ துர்க்கை ஏகாம்பரேசுவரர் பஞ்சபூதலிங்கங்கள் விசுவநாதர் நவக்கிரகம் முதலிய சந்நிதிகள் உள்ளன.

திருத்தல வரலாறு : சிவபெருமானின் மூன்று கண்களை விளையாட்டாக உமையன்னை பொத்தினாள். அதனால் உலகமே இருண்டது. இறைவி கண்களைப் பொத்தியது ஒரு கணம் என்றாலும் உலகத்திற்கு ஒரு ஊழியாயிற்று. உமையன்னை கண் பொத்திய நேரத்தில் உண்டான இருளில் பிறந்ததாலும் கரிய நிறம் உடையவனாக இருந்ததாலும் அந்தகன் எனப்பட்டான். சிவனிடம் தான் பெற்ற பெருவரத்தால் அந்தகன் அமரர்களைத் துன்புறுத்தினான். வானவர்கள் சிவனிடம் வந்து முறையிட்டனர். கருணையே வடிவான ஈசன் தேவர்கட்டு மனமிரங்கி சிவகணங்களை அனுப்பி அந்தாகாசுரனைப் போரிட்டு அழிக்குமாறு பணித்தார். சிவகணங்களால் அவ்வசுரனை அழிக்க முடியவில்லை. எனவே சிவபெருமான் அந்தகன் மேல் போர் தொடுத்தார். தரையில் வீழ்ந்த அந்தகனின் குருதியிலிருந்து ஆயிரக்கணக்கான அந்தகர்கள் தோன்றினார்கள். அவர்களை திருமால் தன் சக்கரப்படையால் கொன்றார்.  சிவபெருமான் அந்தகனைத் தன் சூலத்தால் குத்தி எடுத்து திருநடனம் ஆடினார். மேலும் அந்தகனின் உடலிலிருந்து விழும் குருதியைத் தடுக்க ஈசன் யோகேசுவரியை உண்டாக்க நான்முகன் மகேசுவரன் திருமால் வராகமூர்த்தி முருகன் இந்திரன் மற்றும் எமன் ஆகியோர் தத்தம் சக்திகளை அனுப்பி வைத்தனர். அவர்கள் முறையே பிராம்மி மகேசுவரி வைணவி வராகி கௌமாரி இந்திராணி மற்றும் சாமுண்டியாம். இவர்கள் ஏழு கன்னியர் (சப்தமாதர்) எனப்பட்டனர். சூல நுனியால் குத்தப்பட்டு துன்பமாற்றாது வருந்திய அந்தகன் பெருமானைப் பலவாறு துதித்துப் பிழை பொறுக்க வேண்டினான். பெருமான் அவனை விடுவித்து அவனுக்குச் சிவஞானத்தை அளித்துச் சிவகணங்களுக்குத் தலைவனாக்கினார்.  இவ்வாறு இறைவனது வீரச்செயல் நிகழ்ந்த இடமாக இத்தலம் போற்றப்படுகிறது.

கோயில் அமைப்பு : இக்கோயில் மேற்கு நோக்கி இரண்டு பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. இரண்டாவது பிரகாரத்தை நான்கு நிலைக்கோபுரம் அணி செய்கிறது. நந்தி மண்டபமும் கொடிமரமும் உள்ளன. ஔவையார் ஒருமுறை திருக்கயிலையை அடைய நினைக்கும் பொழுது தம் தும்பிக்கையால் கயிலை கொண்டு சேர்த்த பெரியானை கணபதி வீற்றிருக்கும் தலம் முதல் பிரகாரத்தில் அமைந்துள்ளது. சிவனுமைமுருகும், யோகேசுவரியும் இடப்புறம் ஆறுமுகப் பெருமான் தன் மயிலூர்தியின் மீதும் உள்ளனர். பக்கத்தில் வள்ளி, தெய்வானை உள்ளனர். இந்த ஆறுமுகனை அருணகிரிநாதர் தம் திருப்புகழில் பாடியுள்ளார். திருச்சுற்றின் வடக்கே திருவீதி உலாவரும் திருமேனிகளான விநாயகர் தன் துணைவியாருடன் முருகன், உமை, உடனாயபிறையனி, பெம்மான்சண்டிகேசுவரர் உள்ளனர். மேலும் தேவார மூவர் மாணிக்கவாசகர், ஆடல்வல்லான், சிவகாம சுந்தரி மற்றும் அத்திரதேவர் உள்ளனர். திருமறைப் பேழை உள்ளது. கபிலரின் உருவச் சிலை இடம் பெற்றுள்ளது. இத்தலத்து சிறப்பு வடிவமான அந்தகாசுரவத மூர்த்தியின் வடிவம் மிக அழகுடன் விளங்குகிறது. அஞ்ஞான இருளை அழித்து ஞான ஒளியை பரப்பிய பெம்மான் இவன். இறைவன் திரிபங்க நிலையில் நாற்கைகளோடு உள்ளார். பின்னிரு கைகளில் மானும் மழுவும் முன்னிரு கைகளில் சூலம் ஏந்தியும் விளங்குகிறான். ஆடல்வல்லான் காலடியில் முயலகன் போன்று அந்தகாசுரவத மூர்த்தியின் காலடியில் அந்தகாசுரன் உள்ளார். இவரின் இடப்புறம் நரசிங்க முனையரையரும் வலப்புறம் மெய்ப்பொருள் நாயனாரும் உள்ளனர். ஒன்பான் கோள்கள், பைரவர், ஆணோடு பெண்ணாகிய பெம்மான், சூரியன், ஐம்பெரும் பூத லிங்கங்கள், சண்டிகேசுவரர், திருமுன் ஆகியவை திருச்சுற்றின் கீழ்ப்புறத்தில் அமைந்துள்ளன. விநாயகர், வீரபத்திரர், சம்பந்தர், ஏழு கன்னியர் வடிவங்கள் தென்புறத்தில் உள்ளன.

 கருவறையின் நுழை வாயிலில் குமுதம், யாளி வரிசை மற்றும் பல சிற்பங்கள் உள்ளன. கருவறையில் லிங்கத்திருவுருவில் வீரட்டானேசுவரர் மேற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வட்ட வடிவமான விமானம். கருவறையின் முன்னே அர்த்த மண்டபம் உள்ளது. அன்னையின் திருமுன் தனியாக இருக்கிறது. அன்னை சிவானந்தவல்லி பிரகந்நாயகி என்ற பெயர்கள் பூண்டவள் அன்னையின் நாற்கரங்களில் முன்னிருகரங்கள் அபய வரத முத்திரைகளுடனும், பின்னிருகரங்கள் தாமரை மலர்களுடனும் காணப்படுகின்றன. கருவறையின் வடக்கு புறச்சுவரில் நான்முகனும், எட்டு கைகளோடு துர்க்கையும், கீழ்புறச் சுவர்ப்புரையில் லிங்கோத்பவரும் தென்புறச் சுவர்ப்புரையில் ஆலமர் செல்வனும் காணப்படுகின்றனர். இக்கோவிலின் கட்டட அமைப்பு சோழப் பேரரசன் முதலாம் பராந்தகன் காலத்தியதாகக் கருதப்படுகிறது.

தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

ரயில் நிலையம் : திருக்கோவிலூர்

பஸ் வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×