230. திருவடுகூர்





	


	



























	




 




	








 




3:18:57 AM         Friday, May 01, 2026

230. திருவடுகூர்

230. திருவடுகூர்
230. திருவடுகூர் 230. திருவடுகூர் 230. திருவடுகூர் 230. திருவடுகூர் 230. திருவடுகூர் 230. திருவடுகூர் 230. திருவடுகூர் 230. திருவடுகூர் 230. திருவடுகூர் 230. திருவடுகூர் 230. திருவடுகூர் 230. திருவடுகூர்
Product Code: 230. திருவடுகூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                             பஞ்சநாதீஸ்வரர் கோவில், வடுகூர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள பாண்டிச்சேரி மாநிலத்தில்  பாண்டிச்சேரி - கண்டங்குளம் - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பாண்டிச்சேரி மாநில எல்லைக்குள் 20 கி.மீ தொலைவில் திருவாண்டார் கோயில் என்ற இடத்தில் இறங்கினால் இக்கோவிலை எளிதில் அடையலாம். பாண்டிச்சேரி ரயில் பாதையில் உள்ள சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில இத்தலம் உள்ளது.

சுவாமி : வடுகீசர்,  வடுகநாதர்

அம்பிகை : வடுவகிர்க் கண்ணி, திரிபுர சுந்தரி

தலமரம் : வன்னி

தீர்த்தம் : வாமதேவ தீர்த்தம், பெண்ணைநதி

பதிகம் : திருஞானசம்பந்தர் - 1

திருத்தலச் சிறப்புகள்: இது ஆண்டார் கோயில் என வழங்கப்படுகிறது. திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும் 12 திருக்கரங்களுடனும் மயில் மீது அமர்ந்த கோலத்தில் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்.

அர்த்த மண்டபத்தையும், கருவறையையும் உள்ளடக்கிய சுவர்களின் வெளிப்பிரகாரத்தில் கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. மேலும் தெற்கு நோக்கிய பிச்சாடனர், தட்சினாமூர்த்தி, மேற்கு நோக்கிய லிங்கோத்பவர், வடக்கு நோக்கிய துர்க்கை, அர்த்தநாரீசுவரர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன. இக்கோவிலின் கருவறை விமானம் தஞ்சை பெரிய கோவில் பாணியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இத்தலம் முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. மேலும் முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் கலத்து கல்வெட்டுகளும் கணப்படுகின்றன.

இத்திருத்தலத்தில் அஷ்ட பைரவருள் ஒருவராகிய வடுக பைரவர், முண்டகன் என்னும் அசுரனைக் கொன்ற பழி தீர வழிபட்டது. இத்தலத்தில் விநாயகர், முருகர், நால்வர், முதலிய சந்நிதிகள் உள்ளன. இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் இல்லாத கட்டை கோபுரம் மட்டுமே உள்ளது. நுழைவாயிலுக்கு வெளியே நந்தி ஒன்று காணப்படுகிறது. கோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி மற்றும் 18 கால் மண்டபம் உள்ளது. இங்கு தெற்கு நோக்கியவாறு இறைவி வடுவகிர்க்கன்னி அம்மை சந்நிதி உள்ளது. அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் உருவம் சிற்பகலைக்கு எடுத்துக்காட்டாக காணப்படுகிறது. அர்த்த மண்டபத்தை அடுத்து மூலவர் வடுகூர்நாதர் கருவறை உள்ளது. மூலவர் சுயம்புலிங்கம். கருவறைச் சுற்றில் தென் திசையில் நால்வர் சந்நிதி, கன்னி மூலையில் விநாயகர் சந்நிதி, நிருதி மூலையில் வள்ளி தெய்வானையுடன் கூடிய ஆறுமுகன் சந்நிதி ஆகியவை இருக்கின்றன. இக்கோவிலின் கருவறை விமானம் தஞ்சை பெரிய கோவில் பாணியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகள் மூலம் இத்தலம் முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்தது என்று அறியப்படுகிறது. மேலும் முதலாம் ராஜராஜசோழன், முதலாம் ராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க சோழன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

தலவரலாறு : முண்டாசுரன் என்பவன் சிவனை நோக்கி கடுந்தவம் செய்து அவரிடமிருந்து தேவாசுரர்களாலும், பிறரால் சாகாமலும் இருக்க வரங்கள் பெற்றான். வரங்கள் பெற்ற முண்டாசுரன் தேவர்கள் பிரம்மா ஆகியோருடன் போர் புரிந்து வெற்றி பெற்றான். பிரம்மா மற்றும் தேவர்களும் சிவனிடம் சரணடைந்தனர். சிவனின் ஆணைப்படி வடுகபைரவர் தோன்றி முண்டாசுரனை வதம் செய்கிறார். ஆகையால் இத்தலத்தில் சிவபெருமான் வடுகநாதர் என்றும் வடுகபைரவர் தான் செய்த கொலைப்பழி தீர தவம் செய்து பேறு பெற்றதால் இத்தலம் வடுகூர் என்றும் பெயர் பெற்றது.

தினந்தோறும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும். நாள் தோறும் இருகால வழிபாடுகள் நடைபெறுகின்றன. கார்த்திகை அஷ்டமியில் பைரவருக்கு இங்கு விசேஷமான பூஜைகள் நடைபெறுகின்றன. இது தவிர, ஞாயிறு தோறும் அன்பர்களின் உபயமாகப் பைரவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சித்திரைப் பெருவிழா ஏக தின உற்சவமாக நடைபெறுகிறது.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை

ரயில் நிலையம்   : சின்னபாபு சமுத்திரம்

பஸ் வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×