பண்ணாரியம்மன் - ஈரோடு - தமிழ்நாடு





	


	



























	




 




	








 




10:43:00 PM         Friday, May 15, 2026

பண்ணாரியம்மன் - ஈரோடு - தமிழ்நாடு

பண்ணாரியம்மன் - ஈரோடு - தமிழ்நாடு
பண்ணாரியம்மன் - ஈரோடு - தமிழ்நாடு பண்ணாரியம்மன் - ஈரோடு - தமிழ்நாடு பண்ணாரியம்மன் - ஈரோடு - தமிழ்நாடு பண்ணாரியம்மன் - ஈரோடு - தமிழ்நாடு பண்ணாரியம்மன் - ஈரோடு - தமிழ்நாடு பண்ணாரியம்மன் - ஈரோடு - தமிழ்நாடு பண்ணாரியம்மன் - ஈரோடு - தமிழ்நாடு பண்ணாரியம்மன் - ஈரோடு - தமிழ்நாடு பண்ணாரியம்மன் - ஈரோடு - தமிழ்நாடு பண்ணாரியம்மன் - ஈரோடு - தமிழ்நாடு
Product Code: பண்ணாரியம்மன் - ஈரோடு - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் ஆலயம்- சத்தியமங்கலம் 

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தில் பல மாரியம்மன் ஆலயங்கள் இருந்தாலும் மிகப்பிரசித்திபெற்ற ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் முக்கியமான ஒன்றாகும். ஈரோட்டில், கோயம்புத்தூரில் இருந்தும் சுமார் 75 கி.மீ, சத்தியமங்கலத்திலிருந்து 15 கி.மீ தொலைவிலும் பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.

மூலவர் : ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் 
தல விருட்சம் : வேங்கை 
தீர்த்தம் :   சக்தி (தெப்ப கிணறு)

தல சிறப்பு : தாமரைபீடத்தில் கத்தி,கபாலம் ,கலசங்களுடன் உயிர்ப்புடன் சக்தி அம்சமாய் பிரமாண்டாமாய் அழகாய் தெற்கு நோக்கிய அம்மன் கோவில், தாமே தோன்றிய சுயம்பு மூர்த்தி. இந்த அம்பாள் கால்நடை வளர்ப்போரின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். கால் நடைகள் கொண்டு தொழில் செய்பவர்கள், தங்கள் தொழில் விருத்தியடைய அம்பாளை வணங்குகின்றனர். இங்கு அம்மனுக்கு உயிர் பலி ஏதும் இல்லாமல், சைவ படையல் மட்டுமே செய்யப்படுகிறது.  திருநீறுக்கு பதிலாக காட்டிலிருந்து வெட்டி எடுக்கப்படும் புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. 

தல வரலாறு:  பண்ணாரியில் ஓடிய தோரணப்பள்ளம் என்ற காட்டாற்றங் கரையில் மக்கள் மாடு மேய்த்து வாழ்ந்தனர். ஒரு காராம்பசு ஒன்று தன் கன்றுக்கு கூட பால் கொடுக்காமல் காட்டுக்குள் அடிக்கடி ஓடி ஒளிந்தது. மடுநிறைய பாலுடன் செல்லும் பசு, திரும்பும் போது காலியான மடுவுடன் வரும். மாடு மேய்ப்பவர் ஒருநாள் பசுவை பின்தொடர்ந்து சென்று கவனித்தார். அந்தப்பசு, ஒரு வேங்கை மரத்தடியில்உள்ள புற்றில், பாலைப் பொழிவதைப் பார்த்தார். மறுநாள் கிராம மக்களிடம்  விபரத்தைக் கூறினார். மக்கள், அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது, ஒரு அம்மன் திருவுருவம் இருப்பதை 
பார்த்தனர். பசு அந்த அம்மனுக்கே அபிஷேகம் செய்ததாகக் கருதினர். அப்போது, ஒருவருக்கு தெய்வ அருள் உண்டாகி, நான் மண்ணார்க்காடு என்ற ஊரிலிருந்து வருகிறேன் (இவ்வூர் கேரளாவில் உள்ளது). பொதிமாடுகளை ஒட்டிக் கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன். எழில் மிகுந்த இந்த இயற்கை சூழலில் தான் தங்க விரும்புகிறேன். என்னை "பண்ணாரி மாரியம்மன்' எனப் பெயரிட்டு வணங்கி வாருங்கள், என்றார்.
அந்த அருள்வாக்கின்படி அந்த இடத்தில் புற்களைக் கொண்டு குடில் அமைத்து அம்பாளை பிரதிஷ்டை செய்தனர். காலப்போக்கில், விமானத் துடன் சிறிய கோயில் கட்டப்பட்டது. அதில் அமைக்கப்பட்ட தாமரை பீடத்தில் தற்போது அம்பாள் அருள்பாலித்து வருகிறாள்.

கோயில் அமைப்பு: தாமரைப்பீடத்தில் அமர்ந்த நிலையில் பண்ணாரி மாரியம்மனின் கைகளில் கத்தி, கபாலம், டமாரம், கலசம் ஆகியவை உள்ளது. சாந்த நிலையில் முகம் இருக்கிறது. பிரகாரத்தில் மாதேசுவர திருமூர்த்தி, தெப்பக்கிணறு அருகில் சருகு மாரியம்மன், வண்டி முனியப்ப சுவாமி ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். அம்மன் சன்னதி அடுத்து அர்த்த மண்டபத்தில் பொம்மராய சாமி மேற்கு பார்த்த படி காட்சி தருகிறார்.முன்மண்டபத்தில் கிழக்கு நோக்கியபடி விநாயகர் தரிசனம் தருகிறார்.பண்ணாரிஸ்வரர் சிவலிங்கம் சுயம்பு வடிவினர்.முன்னர் கணம் புற்களால் குடில் அமைத்து பச்சிலை பந்தலில் அம்மன் இருந்தாள். பின்னர் கூரை இருந்ததாகவும் அதை நீக்கிவிட்டு ஓடுகளால் முகப்பு கட்டப்பட்டது. தற்போது கட்டிட கோபுரமாக இருக்கிறது. கோவில் உள்ளே தெப்ப கிணறு தீர்த்தமாக உள்ளது. கண் மற்றும் நரம்பு சம்பத்தப்பட்ட வியாதிகளில் இருந்தும், கல் நடைகளை காக்க பிராத்தனை செய்கிறார்கள்.

தரிசன நேரம்:  காலை 6.00 முதல் பகல் 1.00 வரை, மாலை 4.00 முதல் இரவு 8.30 வரையிலும் கோவில் திறந்திருக்கும்

அருகிலுள்ள விமான நிலையம் : மேட்டுப்பாளையம் 
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்பத்தூர் 
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×