மண்டைக்காடு பகவதி - தமிழ்நாடு





	


	



























	




 




	








 




4:23:07 PM         Saturday, May 16, 2026

மண்டைக்காடு பகவதி - தமிழ்நாடு

மண்டைக்காடு பகவதி - தமிழ்நாடு
மண்டைக்காடு பகவதி - தமிழ்நாடு மண்டைக்காடு பகவதி - தமிழ்நாடு மண்டைக்காடு பகவதி - தமிழ்நாடு மண்டைக்காடு பகவதி - தமிழ்நாடு மண்டைக்காடு பகவதி - தமிழ்நாடு மண்டைக்காடு பகவதி - தமிழ்நாடு மண்டைக்காடு பகவதி - தமிழ்நாடு மண்டைக்காடு பகவதி - தமிழ்நாடு மண்டைக்காடு பகவதி - தமிழ்நாடு
Product Code: மண்டைக்காடு பகவதி - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில்

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மண்டைக்காடு என்னும் இடத்தில் அமைந்துள்ளது.  இரணியல் ரயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ தூரத்திலும் ,  நாகர் கோவிலிருந்து 23 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
மூலவர் : பகவதியம்மன்
தல மரம்  : வேம்பு
சிறப்புகள்:  பெண்களின் சபரிமலை என்ற பெயருடன் சிறப்பு பெற்றத் தலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் ஆலயம். சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு இருமுடி கட்டி பக்தர்கள் செல்வதைப் போலவே, இங்கும் பெண்கள் பலரும் மாசி மாதத்தில் அம்மனுக்கு விரதம் இருந்து இருமுடி கட்டி ஆலய தரிசனம் காணச் செல்கின்றனர்.  15 அடி உயரம் வளர்ந்து மேற்க்கூரையை முட்டி கொண்டிருக்கும் புற்று பகவதி அம்மன் கோயில். 
தல வரலாறு: காஞ்சி சங்கராச்சாரியார் கேரள சீடர்களோடு வந்து தினமும் தான் தங்கியிருந்த குடிலில் இருந்து ஸ்ரீ சக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் ஸ்ரீ சக்கரம் திரும்ப வரவே இல்லை. எடுத்துப் பார்த்தும் திரும்ப வரவில்லை. இந்த இடத்திலேயே இருந்து சித்து விளையாட்டுக்கள் நடத்தி மண்ணுக்குள் சமாதி ஆகிவிட்டார். அந்த ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தின் மேல் புற்று வளர்ந்து வருகிறது. இந்த விசயம் அப்பகுதியில் இருக்கும் கேரள மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு தெரிவிக்கப் பட்டது. அவரும் அந்த இடத்தில் சிறு குடில் கட்டி வழிபாடு நடத்தினார். பின்பு காலப்போக்கில் அம்மனின் மகிமை பரவ பக்தர்கள் பெரும் அளவில் வந்து வழிபடும் பெரிய கோயிலாக புகழடைந்ததாக கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு :  கோவில் கொடிமரத்துடன் வடக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தில், அம்மன் புற்று உருவத்தில் இருந்து அருள்பாலித்து வருகிறார். 1400 வருடங்கள் பழமையானது . ஆரஞ்சு கலரில் முகப்பு. ஓடு வேய்ந்த மேற் கூரையுடன் மலையாளச் சாயல் படிந்த எளிமையுடன் இருக்கும் கோயில். அதற்குள் மிகப் பிரம்மாண்டமாக உருவெடுத்து நிற்கும் புற்று. அதன் தலைப் பகுதியில் பகவதி அம்மன். இங்கு, தமிழகத்தின் பாரம்பரிய உடையான பாவாடை, தாவணியுடன் செபமாலையை கையில் ஏந்தி தவம் செய்யும் நிலையில் பகவதியம்மன் காட்சி தருகிறார். கோயில் 3 தடவைக்கு மேல் இடித்து கட்டப்பட்டுள்ளது. காலை மட்டுமே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப் படுகிறது.

தரிசன நேரம் : காலை 5.00 முதல் பகல் 10.00 வரை, மாலை 5.00 முதல் இரவு 8.00 வரையிலும் கோவில் திறந்திருக்கும்

அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம், 75 கி.மீ. 
அருகிலுள்ள ரயில் நிலையம் : இரணியல், நாகர்கோயில் 23 கி.மீ.
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×