வெக்காளியம்மன் - தமிழ்நாடு





	


	



























	




 




	








 




8:52:49 PM         Saturday, May 16, 2026

வெக்காளியம்மன் - தமிழ்நாடு

வெக்காளியம்மன் - தமிழ்நாடு
வெக்காளியம்மன் - தமிழ்நாடு வெக்காளியம்மன் - தமிழ்நாடு வெக்காளியம்மன் - தமிழ்நாடு வெக்காளியம்மன் - தமிழ்நாடு வெக்காளியம்மன் - தமிழ்நாடு வெக்காளியம்மன் - தமிழ்நாடு வெக்காளியம்மன் - தமிழ்நாடு வெக்காளியம்மன் - தமிழ்நாடு வெக்காளியம்மன் - தமிழ்நாடு வெக்காளியம்மன் - தமிழ்நாடு வெக்காளியம்மன் - தமிழ்நாடு வெக்காளியம்மன் - தமிழ்நாடு வெக்காளியம்மன் - தமிழ்நாடு வெக்காளியம்மன் - தமிழ்நாடு
Product Code: வெக்காளியம்மன் - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில்

திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் மேற்கு பகுதியில் உள்ள உறையூரில் உள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து உறையூர் வழியாக நாச்சியார் கோயில் நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் 500 மீட்டர் மேற்கு நோக்கி நடந்தால் வெக்காளியம்மன் கோவிலுக்குச் செல்லலாம்
திருத்தலத்தின் சிறப்பு: நாற்கரங்களில் திரிசூலம், உடுக்கை, பாசம், அட்சய பாத்திரம். கழுத்தில் திருமாங்கல்யம், முத்தாரம், அட்டிகை, தலையில் பொன்முடி, கையில் வளையல்கள், இடுப்பில் யோக பட்டம். வடக்கு நோக்கிய யோக பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். வெக்காளியம்மன் கோயிலில் விமானம் கிடையாது. மேற்கூரை இல்லாத சன்னதியில் வெட்டவெளியில் அமர்ந்திருக்கிறார் வெக்காளி. பொதுவாக இடது காலை மடித்து வலது காலை அசுரன் மீது பதியுமாறு அம்மன் அமர்ந்திருப்பார். ஆனால், வெக்காளியம்மனோ, வலதுகாலை மடித்து இடது கால் பாதத்தை அசுரன்மீது பதியவைத்திருப்பது அபூர்வ காட்சி. இந்த அம்மனுக்கு பக்தர்கள் அனைவரும் தங்களுடைய கோரிக்கைகளை ஒரு துண்டு சீட்டில் எழுதி திரிசூலத்தில் கட்டினால் அந்த வேண்டுதல் நடக்கும் என்பது ஐதீகம். 
கோயில் அமைப்பு:  வெக்காளியம்மன் ஒரு ஊர்க்காவல் தெய்வமாகையினால், உறையூரின் எல்லைப்பகுதியில் எழுந்தருளியுள்ளாள். வெக்காளியம்மன் கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த அம்பாள் வெட்ட வெளியில் பக்தருக்கு காட்சி தருகிறார். முன்னொரு காலத்தில் உறையூர் என்ற ஒற்றை வன்பராந்தகன் என்பவர் ஆட்சி செய்தார். அப்போது அந்த ஊரில் சாரமா என்ற முனிவர் வாழ்ந்து  வந்தார். அவர் தோட்டம் ஒன்று அமைத்து தினமும் அதில் பூக்கும் மலர்களை அங்கு கோவில் கொண்ட தாயுமானவருக்கு சாற்றுவது இயல்பாக இருந்தது. அப்போது அதே ஊரில் வசித்து வந்த பிராந்தகன் என்னும் ஒரு மலர் வியாபாரி  முனிவருக்கு தெரியாமல்  பூக்களை அரசருக்கு விற்றார். ஒரு நாள் பூக்கள் குறைவதை கண்ட முனிவர் அதனை கண்டு மன்னரிடம்  கூறினார். ஆனால் மன்னர் அதனை பொருட்படுத்தவில்லை. அதனால் பெரும் துன்பம் அடைந்த முனிவர் அதனை தாயுமானவ சன்னதியில் கூறினார். தனது பக்தர் துன்ப படுவதை விரும்பாத தாயுமானவ சுவாமிகள் மேற்கு முகமாக திரும்பி உறையூரை நோக்கினர். உறையூரில் அப்போது மண் மழை பொழிந்தது. அதனால் மக்கள் அனைவரும் வீடுகளை இழந்து பெரும் துன்பத்திருக்கு ஆளாகி வெக்காளி அம்மனை வேண்ட துவங்கினர். அனால் வெக்காளி அம்மனோ தாயுமானவரை வழிபட்டாள். அப்போது மக்கள் அனைவரும் வீட்டை இழந்து வாழ வேண்டிய நிலைமைக்கு  ஆளாகினர். ஆதலால் வெக்காளி அம்மனும் என் பக்தருக்கு வீடு இல்லாமல் வெட்ட வெளியாக  உள்ளனர். நானும் என் மக்களுக்கு வீடு கிடைக்கும் வரை வெட்ட வெளியில் இருப்பத கூறினார். ஆதலால் தான் வெக்காளி அம்மன் இன்னும் கூரை வேயாமல்  மழை , காற்று, வெய்யில்  
ஆகியவற்றை பொறுத்து கொண்டு மக்களுக்கு காட்சி செய்து அருள்பாளிகிறாள்.
தல வரலாறு : இந்த உறையூர் வெக்காளி அம்மன் கோயில் சுமார்
ஐநூறு முதல் ஆயிரம் ஆண்டு கால பழமை வாய்ந்த கோவில் ஆகும்.  இந்த ஊருக்கு  வாசபுரி, கோழியூர்,  மூக்கீச்சுரம் என்ற  பெயர்கள் உள்ளன. உறையூரை ஆண்ட பராந்தக சோழனின் ராஜகுரு சாரமா முனிவர். சிவபக்தர். திருச்சி மலைக்கோட்டையில் நந்தவனம்உருவாக்கி, தாயுமானவருக்கு பூஜை செய்து வந்தார். அங்கு சுவாமிக்காக ஏராளமான பூச்செடிகளை வளர்த்தார். மன்னனுக்கோ, மனைவி புவனமாதேவிக்குப் பூக்களைச் சூட ஆசை. பறித்துச் சென்றார்.  முனிவர் சொல்லியும் ஆணவத்தால் மன்னன் கேட்கவில்லை. கிழக்கு நோக்கியிருந்த இறைவன் தாயுமானவர் மேற்கு முகமாக உறையூரை நோக்கி நெற்றிக்கண்ணை திறந்தார். நெருப்பு மழை பொழிய, மக்கள் ஊரைக் காலி செய்ய, மன்னனின் கோட்டை சிதைந்தது. வீடுகளை இழந்த மக்கள் வேண்டி நிற்க, தாயுமானவரின் கோபம் தணிக்க முழு நிலவாக மாறி, அவர் முன்பு வெக்காளியம்மன் தோன்றினாள். அன்னையின் குளிர்ந்த பார்வை கண்டு இறைவன் அமைதி கொள்ள, நெருப்பு மழை நின்றது. நெருப்பு மழையில் சிக்கிக்கொண்ட  நிறைமாதக் கர்ப்பிணியான அரசி புவனமாதேவி நெருப்பின் உக்கிரம் தாளாமல், காவிரியாற்றில் சென்று குதித்தாள், காவிரி வெள்ளம் அவளை இழுத்துச் சென்றது. உத்தமச்சேரி என்ற இடத்தில் ஒரு அந்தணர் ராணியை காப்பாற்றி கரை சேர்த்தார். அவளுக்குப் பிறந்தவரே கரிகால் பெருவளத்தான். புவனமாதேவி வெக்காளி அம்மனின் பக்தை. அம்மன் கருணையால் உயிர் பிழைத்ததால் மீண்டும் சோழகுலம் தழைத்தது.தொழில் நஷ்டம், கடன், குடும்பப் பிரச்னை நீங்கவும், நோய், நொடியின்றி நலமாக வாழவும், கல்வி, பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடையவும் கருவறை அம்மனுக்கு நேர் எதிரில் உள்ள சூலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை கடிதங்களை எழுதி கட்டுவது இன்றைக்கும் வழக்கமாக இருந்து வருகிறது.

தரிசன நேரம்:  காலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : மதுரை 128 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்சி 4 கி.மீ 
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×