கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு





	


	



























	




 




	








 




8:55:39 PM         Thursday, April 16, 2026

கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு

கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு
கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு
Product Code: கருமாரியம்மன் - திருவேற்காடு - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில்

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டம்  சென்னையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.   

மூலவர்: தேவி கருமாரி அம்மன்
சிறப்பம்சம் : நாகபுற்று
தீர்த்தம் : வேலாயுத தீர்த்தம்.
தலவிருட்சம் : கருவேல மரம்.
பதிகம் : சம்பந்தர், தேவாரம்

தலச்சிறப்பு: அம்மன் இத்தலத்தில் சுயம்பு என்பது விஷேசம். மிகப்பெரிய புற்று உள்ளது. மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.  இந்த தலத்தின் அம்மனுக்கான விசேஷ நாளாக ஞாயிற்றுக்கிழமை  பின்பற்றப்பட்டு வருகிறது.  அந்நாளில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்து தங்கியும்  செல்கின்றனர். ஆடி உற்சவத்தின் போது புற்றுக்கு பால் ஊற்றுதல் சிறப்பு  நிகழ்ச்சியாக செய்யப்படுகின்றது.  இங்கு  ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது. 
தல வரலாறு : அந்த காலத்தில் வேல மரங்கள் இவ்விடத்தில் அதிகம்.  எனவே வேற்காடு  எனப்பெயர் பூண்டது.  வெள்ளத்தால் உலகம் ஒரு முறை அழிவுற்றது.  சிவன் உலகை மீண்டும் படைக்க  எண்ணினார்.  வெள்ளம் வற்றியது, பின் வேதங்களை குறிப்பிட்ட இடத்தில் மரங்கள் ஆக்கினார்.  அவற்றின்  அடியில் லிங்கம் தோன்றியது.  லிங்கத்துடன் அன்னையும் தோன்றினாள்.  அன்னையின் அருளால்  மீண்டும் தேவர்களும், மும்மூர்த்திகளும் தோன்றினர். மீண்டும் உலகம் இயங்க ஆரம்பமானது.  வெள்வேல மரமும், அதனடியில் லிங்கமும், அன்னையும் தோன்றிய இடம்  திருவேற்காடு.  தேவர்கள் தோன்றிய இவ்விடத்தின் ஒரு பகுதி ‘தேவர் கண்ட மடு’ என்று அழைக்கப்படுகிறது.  இந்த திருவேற்காடு பாலி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
தல வரலாறு : ஒரு முறை அம்மன் கிழவி வேடம் பூண்டு, கதிரவனை சோதிக்க நினைத்தாள். ஆகையால் அம்மன் குறி சொல்லும் கிழவியாக வேடம் பூண்டு கதிரவனை சந்தித்தாள். ஆனால் சூரியன், அம்மனை அடையாளம் கண்டுக் கொள்ளாமல் அவமானப் படுத்தினான். இதனால் கோவம் கொண்ட அம்மன், சூரியனிடமிருந்து அகன்றாள். உடனே சூரியனின் ஒளி மங்கியது. தன்னுடைய தவறை உணர்ந்த சூரியன், அம்மனிடம் மன்னிப்பு கேட்டான். அம்மனும் சூரியனை மன்னித்து அருளினாள். பிறகு சூரியன், தன்னுடைய நாளான ஞாயிற்று கிழமையை அம்மனின் நாளாக கொண்டாட வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அம்மனும் ஏற்றுக் கொண்டாள். அத்துடன் பங்குனி, புரட்டாசி மாதங்களில் கதிரவன் தன் கதிரால் அம்மனை அபிஷேகம் செய்யவும் வரம் கேட்டுப் பெற்றான். ஆகவே தான் பலர் ஞாயிற்று கிழமை கோவிலில் இரவு தங்குவதாக வேண்டிக் கொள்வார்கள். அந்த ஸ்தலத்தில் தங்கினால் அவ்வளவு புண்ணியம். 
அகஸ்த்தியருக்கு கல்யானக் கோலத்தில்சிவனும், அம்பாளும் தரிசனம் தருகிறார்கள். ஏனென்றால், ஒரு தடவை சிவனுக்கும், அம்மனுக்கும் திருமணம் ஆகும் போது எல்லோரும் ஒரு இடம் வந்துவிடவே, உலகம் ஒரு பக்கமாக சாய ஆரம்பித்தது. இதனால் சிவன் அகஸ்த்தியரை மட்டும் வேறு இடத்தில் இருக்குமாறு செய்தார். இதனால் அகஸ்த்தியர் திருமணத்தை பார்க்க முடியாமல் போனதே என்று கவலைப் பட்டார். அதற்காக அவருடைய இடத்திற்கே வந்து திருமணக் கோலத்தில் சிவன் காட்சிக் கொடுத்தார். இந்தக் கோவிலுக்கு மிக அருகில் வேரொரு கருமாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த அம்மனைத் தான் வேரொரு இடத்தில் ப்ரதிஷ்ட்டை செய்ததாக ஐதீகம். அந்த ப்ரதிட்ஷ்ட்டை செய்த அம்மன் கோவில் தான் இப்பொழுது எல்லோரும் செல்லும் கருமாரி அம்மன் ஆலயம். ஆகவே இந்த மூன்று கோவிலுக்கும் சேர்ந்து சென்றால் பலன் கண்டிப்பாகக் கிடைக்கும்.  பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு. 
நடை திறக்கும் நேரம்: காலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.  
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை 
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்னை சென்ட்ரல் 
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×