மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா





	


	



























	




 




	








 




10:44:39 AM         Friday, October 02, 2026

மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா

மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா
மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா
Product Code: மைசூர் சாமுண்டீஸ்வரி - கர்நாடகா
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare


மைசூர் சாமுண்டீஸ்வரி

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின்  கர்நாடக மாநிலத்தில் மைசூருவில் இருந்து 13 கி.மீ தொலைவில் பார்வதி தேவியின் அவதாரமான சாமூண்டீஸ்வரி கோயில் அமைந்துள்ளது. நவராத்திரி நாயகியான அம்பிகை சாமுண்டீஸ்வரியாக மைசூருவில் அருளாட்சி புரிகிறாள். இங்கு நடக்கும் தசராவிழா உலகப் புகழ் பெற்றது.  சாமுண்டி மலைகள் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1065 அடிகள் உயரத்தில் உள்ளன. 

கருவறையில் எட்டுக் கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். 18 வது மகா சக்தி பீடம் ஆகும்.

தல வரலாறு: தேவர்களுக்கு துன்பம் செய்த மகிஷாசுரனை அழித்தாள் பராசக்தி. மகிஷாசுர மர்த்தினி என்ற பட்டம் பெற்றாள். அசுர வதம் நிகழ்த்திய அம்பிகைக்கு மைசூரு மலையில் கோயில் கட்டப்பட்டது. அங்கு சாமுண்டீஸ்வரி என்னும் பெயர் தாங்கி அருள்புரிகிறாள். ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இக்கோயில்.  1573ல், மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒருமுறை சாமுண்டீஸ்வரியைத் தரிசித்து விட்டு திரும்பும் வழியில் பலத்த மழை பெய்தது. ஒரு மரத்தின் அடியில் பல்லக்கை வீரர்கள் இறக்கி வைத்தனர். அப்போது மன்னர், தன்னைக் காத்தருளும்படி அம்பிகையை வேண்டிக் கொண்டு மலைக்கோயிலைப் பார்த்தார். ஆனால், கோயில் கண்ணுக்குத் தெரியவில்லை. பதறிய அவர் சில அடி தூரம் நகர்ந்து சென்று பார்த்தார். மரத்தின் அடியில் இருந்தபோது, தெரியாத கோவில் இப்போது தெரிந்தது. அப்போது மின்னலுடன் இடி விழுந்தது. எந்த மரத்தின் அடியில் நின்றிருந்தாரோ, அந்த மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காக்கவே, அம்பிகை கோயிலை மறைத்து விளையாடல் நிகழ்த்தியதை எண்ணி மகிழ்ந்தார். அதன் பின், சாமுண்டீஸ்வரி கோயிலைப் பெரிதாக கட்டினார். 

கோயில் அமைப்பு: இக்கோயிலில் நவரங்க மண்டபம், அந்தராளம், பிரகாரம், கருவறை என நாற்கர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்தில் ஏழு தங்கக் கலசங்கள் உள்ளன. பழமையான இச்சிலை மார்க்கண்டேய மகரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டது. இங்கு நரபலி, மிருகபலி அளிக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டில் இப்பழக்கம் நிறுத்தப்பட்டது கோபுர நுழைவு வாசலில் விநாயகர் வீற்றிருக்கிறார். வாசல் கதவில், அம்மனின் வெள்ளி கவசமிட்ட சிற்பங்கள் உள்ளன. வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். கருவறை முன் கொடிமரம், அம்பிகையின் திருப்பாதம், நந்தி உள்ளன. கருவறை வாசலில் நந்தினி, கமலினி என்னும் துவாரபாலகியர் காட்சி தருகின்றனர். சந்நிதியின் வலப்புறம் பைரவர் இருக்கிறார். ஞாயிறு, செவ்வாய், வெள்ளியன்று இங்கு கூட்டம் அதிகமிருக்கும். 

1827ல் கிருஷ்ண ராஜ உடையார் இக்கோயிலைப் புனரமைத்து அழகுபடுத்தினார். சிம்மம் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்களை வழங்கினார். ஆறடி உயர சிலையாக கிருஷ்ண ராஜ உடையார் சிலை இங்குள்ளது. ராமவிலாசம், லட்சுமி விலாசம், கிருஷ்ண விலாசம் ஆகிய மூன்று பட்டத்தரசியரும் உடன் இருக்கின்றனர். கோயிலில் விநாயகரைத் தவிர,மகேஸ்வரனுக்கும்,குமாரசுவாமிக்கும் சிறு சந்நிதிகள் அமைந்துள்ளன

நவராத்திரி விழா: மும்மூர்த்திகளாலும் வெல்ல முடியாத அசுரனான மகிஷாசுரனை வதம் செய்து வெற்றி பெற்ற சாமுண்டீஸ்வரியைப் போற்றும் விதத்தில் நவராத்திரி பிரம்மோற்ஸவம் இங்கு சிறப்பாக நடத்தப்படுகிறது. 1610ம் ஆண்டு முதல் தசராவிழா நடக்கிறது. தற்போது கர்நாடக அரசு இதை அரசு விழாவாக நடத்துகிறது. தசராவையொட்டி, மைசூரு அரண்மனை மின்விளக்கால் அலங்கரிக்கப்படும். முக்கிய நிகழ்ச்சி யான யானை ஊர்வலத்தின் போது, யானை மீது தங்க சிம்மாசனம் அமைத்து அதில் சாமுண்டீஸ்வரி பவனி வருவதைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். 
 
அன்னை சாமுண்டீஸ்வரியின் திருமுகம் காண மலை உச்சிக்கு வந்து சேரும் பக்தர்களை முதலில் வரவேற்பது வண்ணமயமான மகிஷாசுரனின்
நெடிதுயர்ந்த பொம்மை வடிவம். கோயிலைச் சுற்றி செல்லும் மரங்கள் சாமரம் வீசும் பெரிய சாலை.அந்தச் சாலையின் எந்த விளிம்பிலிருந்து நோக்கிஆலும் கீழே பரந்து பரவிக் கிடக்கும் மைசூரின் அற்புதக் காட்சி.
 
திராவிடப் பாரம்பரியத்தில் கட்டப்பட்ட திருத்தமான கோபுரம்.கோபுர வாசல் கடந்ததும் வலதுபுறம் விநாயகரின் சிறிய சிற்பம். சிலபடிகள் ஏறியதும் கொடிமரக்கம்பம், அன்னையின் பாதங்கள் பதிந்த அடையாளம். அவள் அருள் முகம் பார்த்து அமர்ந்திருக்கும் சிறு நந்தி. சிறகசைக்கும் மணிப்புறாக்களும்,
மணங்கமழும் மலர்களும்,தொட்டுத் தழுவும் தென்றலும் அந்த அமைதிப் பிரதேசத்தில்,கர்ப்பக்கிரகத்தில் அன்னையின் தரிசன்ம் கிடைத்ததும் உடல் சிலிர்க்கிறது.
 

நடை திறக்கும் நேரம் :  தினமும் காலை 6.00 மணி முதல் 2.00 மணி வரையும் மாலை 3.00 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 5.00 மணி முதல் நடை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  பெங்களூரு தேவனஹள்ளி 170 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : மைசூர் 
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×