மூகாம்பிகை கோயில் கொல்லூர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின், கர்நாடக மாநிலத்தில், உடுப்பி மாவட்டத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவில் கொல்லூரில் அமைந்துள்ளது.
மூலவர்: மூகாம்பிகை
தீர்த்தம்: அக்னி, காசி, சுக்ள, மது, கோவிந்த, அகஸ்தியர், அர்ச்சனை குண்டு
பாடியவர் : ஆதி சங்கரர்.
சிறப்புகள் : கருவறையினுள்ளே, அன்னை மூகாம்பிகை திரு உருவச் சிலையின்
முன்னே காணப்படும் சுயம்பு லிங்கமாகிய ஜோதிர்லிங்கம், சக்தியும், சிவனும்
இணைந்திருப்பதை உணர்த்துவதுபோல், ஒரு தங்கரேகையால் இரு பிரிவுகளாகப்
பிரிக்கப்பட்டிருக்கின்றது. இது போன்ற சுயம்பு லிங்கத்தை உலகில் வேறு எத்
தலத்திலும் காண முடியாது. உச்சி வேளையின்போது, சூரியனின் ஒளிக் கதிரைக் கண்ணாடிமூலமாகப் பிரதிபலிக்கச் செய்து, அந்த ஒளி லிங்கத்தின்மேல் விழ வைக்கும்போது, பக்தர்கள் அந்தத் தங்க ரேகை பளிச்சிடுவதைப் பார்த்துப்
பரவசமடைகின்றார்கள். திருக்கோயிலின் கருவறையினுள்ளே, அன்னை மூகாம்பிகை தேவி தனது இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி, அருள் பொங்கக் காட்சியளிக்கின்றாள்.
இக்கோவில் 51 சக்தி பீடங்களில் தேவியின் காதுகள் விழுந்த பீடமாகப் போற்றப்படுகிறது. சக்தி பீட வரிசையில் 3 வது பீடமாக விளங்குகிறது. அன்னையின் உடற் கூறுகளில் வலது அக்குள் விழுந்தஇடமாக கருதப்படுகிறது. இயற்கை எழில் சூழ்ந்த இக்கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது மூகாம்பிகை ஆலயம். கொல்லப்புறா என்ற பெயர் மருவி கொல்லூர் என அழைக்கப்படுகிறது.
ஆதிசங்கரர் முதன் முதலில் இங்கு வந்தபோது கோல மகரிசி என்பவர் வழிபட்ட சுயம்பு லிங்கம் மட்டுமே இத்தலத்தில் இருந்தது. இந்த லிங்கத்தில் அம்பாள் அரூபமாக அருள்பாலிப்பதை உணர்ந்த ஆதிசங்கரர், அங்கிருந்த மேடையில் அமர்ந்து தியானம் செய்வார். அம்பாள் மூகாம்பிகை வடிவில் ஆதிசங்கரருக்கு காட்சி கொடுத்துள்ளார். அந்த உருவத்தை அடிப்படையாக கொண்டு மூகாம்பிகை சிலை பிரதிட்டை செய்யப்பட்டது. இந்த அம்மனுக்கு அபிசேகம் கிடையாது. அலங்காரம், மலர் அஞ்சலி, ஆராதனை மட்டுமே நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிசேகம் நடக்கும். இந்த லிங்கத்தின் நடுவில் ஒரு தங்கக்கோடு இருக்கிறது. இந்த தங்கக் கோட்டை அபிசேகத்தின் போது காணலாம். இதில் இடது புறம் பிரம்மா, திருமால், சிவனும், வலது புறம் சரசுவதி, லட்சுமி, பார்வதியும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த லிங்கத்தை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். கோல மகரிசி வழிபட்டதால் இத்தலம் கொல்லூர் ஆனது. பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் தொடர்ந்து பூசை நடக்கும்.
தல வரலாறு : கம்சாசூரன் என்ற அரக்கன் சிவனிடம் பல வரங்கள் பெற்று நாட்டையே துவம்சம் செய்து வந்தான். தேவர்கள், கடவுள்கள் எல்லாம் அவனுடைய தொந்தரவு தாங்க முடியாமல் தலைமறைவாகின்றனர். இதனால் தலைகனம் அதிகமாகி கம்சாசூரனின் தொல்லைகள் அதிகமாக அனைவரும் சிவப்பெருமானிடம் சென்று முறையிட்டனர்.
அதன்படி அனைத்து கடவுள்களின் தனிப்பட்ட சக்திகள் கோலாரிஷியின் ஆலோசனைப்படி ஒன்றினைக்கப்பட்டு மாயசக்தி உருவாக்கினர். அந்த சக்தி கம்சாசூரனுடன் போரிட்டு அவ்வரக்கனை அழித்து, அழித்த இடத்தை மரணகட்டி என்று அழைக்கப்படுகிறது. அந்த மாயசக்தி உருவம் தேவர்களால், மற்றவர்களால் மூகாம்பிகா என அழைத்து ஆசி பெறுகின்றனர்.
ஆதிசங்கரரால் பிரஷ்டை செய்யப்பட்ட அந்த சிலையே தற்போதும் உள்ளது. அழகும், அமைதியும் கொண்டயிடத்தில் சாந்தமான கோலத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் மூகாம்பிகா. மூன்று கண்கள் கொண்டவளாக காட்சியளிக்கும் அம்பாள் காணக்கிடைக்காத உருவம்மது. பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க தூண்டும் அன்பு கலந்த சாந்த முகம்மாக காட்சியளிக்கிறாள்.
சவுபர்னிக்கா: கோயிலுக்கு மேற்கே காலபைரவர் மற்றும் உமாமகேஸ்வரி சந்நதிக்கு இடையே சவுபார்னிக்கா ஆறு ஓடுகிறது. கருடன் தனது தாயார் விருந்தாவின் துயரத்தை துடைக்க இங்கு வந்து தவம் செய்யும் போது, வசந்த ஆறு தேவை என கேட்டபோது அம்பாள் ஆசிர்வாதி நீரோடையை உருவாக்கி தந்தார். அதன்படி இந்த ஆறு கொடச்சாத்தரி மலை உச்சியில் இரண்டு கனவாய் வழியாக உற்பத்தியாகி மலை அடிவாரத்தில் உள்ள கொல்லூர் வந்து செல்கிறது எனக்கூறப்படுகிறது. கொல்லூர் வழியில் இந்த ஆறு வரும்போது இதன் பெயர் சம்பாரா என அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றில் 64 வகை மூலிகை தாவரங்கள் கலந்த நீர் இந்த ஓடையில் வருகின்றன. இதில் விடியற்காலை நேரத்தில் பக்தர்கள் நீராடினால் நோய்கள் அவர்களை அண்டாது, தீராத நோய்கள் குணமாகும் என்பது புராண நம்பிக்கை. வற்றாமல் அவ்வாறில் நீர் ஓடுகிறது.
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் மூகாசுரன் எனும் அசுரன் சிவனை நோக்கி தவமிருந்தான்.அவன் தவப்பயனை அடைந்துவிட்டால் உலகிற்குத் துன்பம் ஏற்படும் என்பதால், தேவர்கள் அம்பிகையிடம் முறையிட்டனர்.
அம்பிகை, மூகாசுரனின் தவத்தைக்கலைத்து, அவனுடன் போரிட்டாள். அவன் அம்பிகையிடம் சரணடைந்தான். அவனது வேண்டுகோளுக்கிணங்க இத்தலத்தில் அவனது பெயரையே தாங்கி, “மூகாம்பிகை” என்ற பெயரில் தங்கினாள். அம்பிகை இக்கோயிலில் பத்மாசனத்தில், இரு கைகளில் சங்கு, சக்கரத்துடன், காளி, மகாலட்சுமி,சரசுவதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள். ஐம்பொன்னால் ஆன காளி, சரசுவதி சிலைகள் மூகாம்பிகையின் இருபுறமும் உள்ளன. முத்தேவியருக்கும் தினமும் சிறப்பு பூசை நடக்கிறது. ஆதிசங்கரர் இங்கு மூகாம்பிகையை, சரசுவதியாகப் பாவித்து வணங்கி, “கலா ரோகணம்” பாடி அருள் பெற்றார்.
சகலநோய் நிவாரணி: ஒரு முறை ஆதிசங்கரர் மூகாம்பிகையை நினைத்து இங்கு தவம் புரிந்து, எழ முயன்றபோது அவரால் முடியவில்லை. சங்கரருக்காக அம்பாளே கசாயம் தயாரித்துக் கொடுத்ததாகவும்,அதனால், அன்றிலிருந்து இரவு நேரபூசைக்கு பின் அனைவருக்கும் கசாயம் பிரசாதமாக வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த கசாயத்தைச் சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. இத்தலத்திலிருந்து தான் ஆதி சங்கரர் “சவுந்தர்ய லகரி”எழுதியுள்ளார்.
கோவில் அமைப்பு : கோயில் உள்பிரகாரத்தில் பஞ்சமுக கணபதி, சுப்ரமணியர், பார்த்தேசுவரர், பிராண லிங்கேசுவரர், சந்திரமவுலீசுவரர், நஞ்சுண்டேசுவரர், ஆஞ்சனேயர், மகாவிட்டுணு, துளசி கிருட்டிணன்,வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. இவர்களை வழிபாடு செய்த பின் தாய் மூகாம்பிகையை வழிபாடு செய்ய வேண்டும். தினமும் இரண்டு முறை இங்கு அன்னதானம் நடைபெறுகிறது. இக் கோயிலின் கிழக்கு வாசல் வழியாக உள்ளே சென்றால், முன் மாடம் அமைந்துள்ளது. அதைக் கடந்து சென்றால், கம்பீரமாக நின்று அருள் புரியும் வீர பத்திரரைத் தரிசிக்கலாம். கோயிலின் தெற்குப் பிராகாரத்தில், பத்துத் திருக்கரங்களுடன் விநாயகப் பெருமான் மூஞ்சூறு வாகனத்தின்மீது காட்சி தருவதைப் பார்க்கலாம். தென் கிழக்குப் பகுதியில், இரண்டு நாக உருவில் சுப்பிரமணியர், தென் மேற்கு மூலையில், சந்திர மௌலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், பஞ்சமுக கணபதி முதலிய பல சந்நிதிகள் காணப்படுகிறன. இக் கோயிற் கருவறையின் விமானம் முழுவதும் தங்கத் தகடுகளால் இழைக்கப்பட்டுப் பிரகாசமாகக் காட்சியளிக்கிறது.
நடை திறக்கும் நேரம் : தினமும் காலை 5 மணி முதல் 1.30 மணி வரையும் மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : மங்களூர் 20 கி.மீ
அருகிலுள்ள ரயில் நிலையம் : பந்தூர் மூகாம்பிகை ரோடு ஸ்டேஷன் 28 கி.மீ
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு