ஸ்ரீ பாலதிரிபுரசுந்தரி - வேலூர்-தமிழ்நாடு





	


	



























	




 




	








 




7:56:17 PM         Saturday, May 16, 2026

ஸ்ரீ பாலதிரிபுரசுந்தரி - வேலூர்-தமிழ்நாடு

ஸ்ரீ பாலதிரிபுரசுந்தரி - வேலூர்-தமிழ்நாடு
ஸ்ரீ பாலதிரிபுரசுந்தரி - வேலூர்-தமிழ்நாடு ஸ்ரீ பாலதிரிபுரசுந்தரி - வேலூர்-தமிழ்நாடு ஸ்ரீ பாலதிரிபுரசுந்தரி - வேலூர்-தமிழ்நாடு ஸ்ரீ பாலதிரிபுரசுந்தரி - வேலூர்-தமிழ்நாடு
Product Code: ஸ்ரீ பாலதிரிபுரசுந்தரி - வேலூர்-தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare


நெமிலி - பாலதிரிபுரசுந்தரி ஸ்ரீ பாலா பீடம் 


திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்  வேலூர் மாவட்டம்  அரக்கோணத்தில் இருந்து 16 கி.மீ  தொலைவில் அமைந்துள்ளது.

அம்மன் : பாலா திரிபுரசுந்தரி
பாடியவர்  : கருவூர் சித்தர்

சிறப்புகள்: ஒரு சுண்டு விரல் அளவே அன்னையின் உருவம் என்பது தனிச் சிறப்பு. ஒரு கையில் ஜெப மாலை, மற்றொரு கையில் புத்தகம் கொண்டு காட்சி தருவது பாலா திரிபுரசுந்தரியின் தோற்றம் ஆகும். உலகத்து தெய்வ உருவங்களில் சிறிய உருவம் கொண்டு விளங்குவது நெமிலி பாலா திரிபுரசுந்தரி மட்டும்தான். சுண்டு விரல் அளவு அம்மன், குசஸ்தலை ஆற்றில் தோன்றியவள், அடியாரின் வீட்டையே ஆலயமாக்கிக் கொண்ட அன்னை, என பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குபவள்.

புராண  வரலாறு : உலகைக் காக்கும் மாதாவின் செல்ல மகளே பாலா. ஒன்பது வயதான இவள் ஆற்றலில் அன்னைக்கு நிகரானவர். அன்னை வித்யா என்றால், இவள் வித்யாபாலா. ஸ்ரீலலிதோ பாக்யானம் என்ற புராணத்தில் இவளைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அன்னை லலிதா தேவியோடு போரிட்டு வெல்ல முடியாத பண்டாசுரன், தனது முப்பது மைந்தர்களை போருக்கு அனுப்பினான். லலிதாவின் மகளான பாலா தன் அன்னை லலிதாவிடம் கலசங்களையும், ஆயுதங்களையும் பெற்று ரதம் ஏறி போருக்கு புறப்பட்டாள். போரில் பண்டாசுரன் மகன்களுடன் போரிட்டு அனைவரையும் அழித்தாள். இதன்பின் பாலா, அன்னை லலிதாவோடு ஐக்கியமானாள் என்கிறது புராணம்.  அதன்பின் இந்தக் கலியுகத்தில் மீண்டும் கண்கண்ட தெய்வமாகத் தோன்றினாள் பாலா.

லலிதாம்பிகையின்பரிவாரங்களோடு போரிட்டு தோற்றான் பண்டாசுரன்.அவனுக்கு  முப்பது புத்திரர்கள் இருந்தனர். அவர்களையும்அழித்தால் தான் தேவர்களுக்கு நிம்மதி என்பதால், லலிதாவின்மகளான ஒன்பது வயது பாலா அவர்களை அழிக்கபுறப்பட்டாள். தாய் தடுத்தும் அடம்பிடித்தாள். எனவே,லலிதாம்பிகை தன் கவசத்தில் இருந்துசிறுகவசத்தைதோற்றுவித்து மகளின் உடலில் அணிவித்தாள். சிறியஆயுதங்களை உருவாக்கிக் கொடுத்தாள். தேரேறிப் புறப்பட்டபாலா பண்டாசுரனின் புத்திரர்களைத் தோற்கடித்தாள்.வெற்றியுடன் திரும்பிய மகளை ஆரத்தழுவி முத்தமிட்டாள்.ஸ்ரீமாதாவான அன்னையுடன் மகள் ஐக்கியமாகிவிட்டாள். இந்தவதத்திற்குப் பிறகு பாலாவைபற்றிய குறிப்புகள் புராணத்தில்இடம்பெறவில்லை.

தல வரலாறு : அம்மன் உபாசகரான சுப்பிரமணியர் என்பவர் வாழ்ந்து வந்தார். ஒரு சமயம் அவரது கனவில் தோன்றிய  அன்னை பாலா, ‘உன்னோடு வாழும் அன்னை ராஜராஜேஸ்வரியின் கட்டளைக்கு இணங்க, ஆற்றில் மிதந்து குழந்தை பாலாவாக உன் ஊருக்கு வருகிறேன். என்னை உன் வீட்டில் வைத்து வழிபாடு செய் என்றாள். கனவு கலைந்ததும் அந்த நடு இரவிலேயே கண் விழித்த சுப்பிரமணியர், உடனடியாக தன் வீட்டில் அருகில் ஓடும் குசஸ்தல ஆற்றிற்குச் சென்றார். அப்போது எதுவும் கிடைக்கவில்லை. மனம் தளர்ந்து போகாத நிலையில் மூன்றாம் நாளன்று அவர் ஆற்றில் மூழ்கி எழும்போது, அவரது கரங்களில் தவழ்ந்தாள் அன்னை பாலா.

அன்னையின் ஆணைப்படி தன் வீட்டிலேயே வைத்து வழிபாடலானார். இந்த வீடே பிற்காலத்தில் பாலாபீடமாக உருமாறி, வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து வந்து அருள்பெற்றுச் செல்லும் ஆலயமாக மாற்றம் கண்டுள்ளது. அன்னை, பாலா திரிபுரசுந்தரி என்று அழைக்கப்படுகிறாள். அன்னை பாலாவிற்கு இசை மீது அளவற்ற பிரியம். சித்தர்களும், ஞானிகளும் போற்றும் தெய்வம் இவள். தெய்வங்களே சீராட்டும் குழந்தை இவள். அளவற்ற சக்தியை பெற்ற மையப்புள்ளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னையானவள் கோவிலில் குடிகொள்ளாமல், அடியாரின் வீட்டை தேர்வு செய்து குடி கொண்டு அருளாட்சி செய்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அன்னை பாலா திரிபுரசுந்தரி வீற்றிருக்கும் இடம் பாலாபீடம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. 

நடை திறக்கும் நேரம் :  தினமும் காலை 9.00  மணி முதல் 2.00 மணி வரையும் மாலை 4.00  மணி முதல் இரவு 7.00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை  77 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் : அரக்கோணம் 16 கி.மீ 
பேருந்து வசதி  : உண்டு 
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×