பாவாகட் குஜராத்





	


	



























	




 




	








 




9:15:48 AM         Saturday, May 16, 2026

பாவாகட் குஜராத்

பாவாகட் குஜராத்
பாவாகட் குஜராத் பாவாகட் குஜராத் பாவாகட் குஜராத் பாவாகட் குஜராத் பாவாகட் குஜராத் பாவாகட் குஜராத் பாவாகட் குஜராத் பாவாகட் குஜராத் பாவாகட் குஜராத் பாவாகட் குஜராத் பாவாகட் குஜராத் பாவாகட் குஜராத் பாவாகட் குஜராத் பாவாகட் குஜராத் பாவாகட் குஜராத் பாவாகட் குஜராத்
Product Code: பாவாகட் குஜராத்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

மஹாகாளி கோவில்- பவாகத்

திருத்தல அமைவிடம் : இந்தியாவில்  குஜராத் மாநிலத்தில் ஹாலால் பேருந்து நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் மஹாகாளி கோவில், ஹிந்துக்களுக்கு மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களுக்கும் புகழ் பெற்ற புனித ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவில் குஜராத்திலுள்ள வடோடராவிற்கு 53 கி.மீ. தொலைவில் உள்ள பவாகத்தில் அமைந்துள்ளது.

தல சிறப்பு :  இந்த கோவிலின் கர்ப்பகிரஹத்தில் மாதா காளிகாவின் சிவப்பு நிற முகம் மட்டும் தான் இருக்கும். உடம்பு இருக்காது. மாதா மற்றும் பஹுசாராவை சேர்ந்த யாந்த்ராகளின் முழு உருவச்சிலைகளையும் இங்கே காணலாம். 
இந்த கோவிலில் இரண்டு தளங்கள் உள்ளன. கீழ் தளத்தில் மஹாகாளி மாதாவின் சிலை உள்ளது. கோவிலின் மேல் தளம் இஸ்லாமியர்களுக்கு புனிதமான இடமாக விளங்குகிறது. 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. எந்த உடல் பகுதியென அறியப்படவில்லை.

கோயில் அமைப்பு : பவாகத் என்ற மலை சம்பனேருக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றி கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. மஹ்முட் பேக்டா சம்பனேரை கையகப்படுத்தி இதனை புகழ் பெறச் செய்வதற்கு முன்பாகவே இந்த கோவில் இருந்துள்ளது. சம்பனேர் அழிந்த போது கூட இந்த கோவில் நிலைத்து நின்றது. இந்த கோவிலுக்கு மலை பாதையில் நடந்தோ அல்லது கயிற்றுப்பாதை வழியாகவோ வந்தடையலாம். தினசரி பல புனித காரியங்கள் நடக்கும் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். மஹாகாளி மாதா பயமுறுத்தும் தோற்றத்துடன் காட்சி அளித்தாலும், தன்னை தேடி வரும் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்று நம்பப்படுகிறது. சோலங்கி ராஜ்புட்களால் பவாகத்தில் ஒரு கோட்டையும் கட்டப்பட்டுள்ளது. இன்னமும் கூட இந்த கோட்டையின் சுவர்கள் எஞ்சியிருக்கிறது. இந்த கோட்டையினுள் 10-11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு ஹிந்துக் கோவில் பழமையான கோவிலாக கருதப்படுகிறது. இந்த கோட்டையினுள் நகரா வடிவமைப்பில், 13-15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வேறு சில ஹிந்து மற்றும் ஜெயின் கோவில்களும் கூட உள்ளன.

இந்த மகாகாளி அம்மன் இருக்கும் கர்பகிரகம் நிலத்திற்குக் கீழ் அமைந்துள்ளது. படியிரங்கி, தலைகுனிந்து உள்ளே சென்றுதான் அம்மனை தரிசிக்க முடியும். (தலைவணங்கி உள்ளே சென்றால் தான் காளியின் தரிசனம்). இந்த கோவிலில் சுரங்கப்பதை போன்று பாதை வழியாக சென்றால் இன்னுமொரு அம்மன் சிலை உள்ளது உறங்கிய நிலையில். இவளை உறக்கத்தின் கடவுள் என சொல்லுகிறார்கள்.(இந்த சுரங்க வழி காலையிலும் ,மாலையிலும் மட்டுமே திறக்கப்படுகிறது,மதியான நேரத்தில் பூட்டப்பட்டு இருக்கும்). 

நடை திறக்கும் நேரம் :  இந்த திருக்கோவில் காலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும்  திறந்து இருக்கும். 

அருகிலுள்ள விமான நிலையம் : வதோதரா 48 கி.மீ 
அருகிலுள்ள ரயில் நிலையம் :  வதோதரா 
பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

தகுந்த காலம் :அக்டோபர் முதல் பிப்ரவரி

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×