பிரம்ம கிராம் - மேற்கு வங்காளம்





	


	



























	




 




	








 




8:08:39 PM         Friday, May 15, 2026

பிரம்ம கிராம் - மேற்கு வங்காளம்

பிரம்ம கிராம் - மேற்கு வங்காளம்
பிரம்ம கிராம் - மேற்கு வங்காளம் பிரம்ம கிராம் - மேற்கு வங்காளம் பிரம்ம கிராம் - மேற்கு வங்காளம் பிரம்ம கிராம் - மேற்கு வங்காளம் பிரம்ம கிராம் - மேற்கு வங்காளம் பிரம்ம கிராம் - மேற்கு வங்காளம் பிரம்ம கிராம் - மேற்கு வங்காளம்
Product Code: பிரம்ம கிராம் - மேற்கு வங்காளம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

பிரம்ம கிராம் - பஹுளா தேவி

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், பார்தம்மன் மாவட்ட கட்டோவா ரயில் நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் பஹுளா தேவி ஆலயம் அமைந்துள்ளது.

தல சிறப்பு :  51 சக்தி பீடங்களில் 25வதாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் இடது அக்குள் பகுதி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. இங்கே அன்னை, பஹுளா தேவி என்ற திருநாமத்துடனும், கால பைரவர் பூருகா என்ற திருநாமத்துடனும் எழுந்தருள்கின்றனர்.

இந்து மத பக்தர்கள் பெருமளவில் வணங்கிக் கொண்டிருக்கும் தெய்வீக சக்தி "துர்கா தேவி" க்கு புனிதமான இடம்.  இது மேற்கு வங்காள மாநிலத்தின் புகழ்பெற்ற இந்து கோவிலாகும். தெய்வீக தேவியின் முக்கிய சிலைகள் "பஹுலா" (ஆடம்பரமாக) மற்றும் சிவன் "பிர்ஹுக்" (சரஸ்வதிதிகக்), இங்கு வணங்கினர். மாதுர்கா மற்றும் சிவன் ஆகியோருக்கு இந்த புனித இடம் அமைந்துள்ளது. கேத்துக்ராமின் முதன்மைத் தெய்வம் பஹுளா தேவி. இங்கு அம்பாள் கார்த்திக் மற்றும் கணேசருடன் எழுந்தருளியுள்ளார்.

கோவில் அமைப்பு : பழங்கால கோவிலின் தரையையும் சிவப்புக் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது, அதில் கடுமையான கோடை நாட்களில் கூட உள்ளே குளிர் இருக்கும். அஜய் ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற புனித யாத்திரைகளில் ஒன்றான சக்தி பீத் பஹுலா,  பழங்காலத்தில் தேவகோட்டம் எனும் பெயர் பெற்ற இந்த சக்தி பீடம், பிற்காலத்தில் கேதுகிராமம் என்றானது. கேது கிராமத்தில் காணப்படும் சிறப்பு வாய்ந்த கோயில்களில் பஹுளா தேவியின் கோயிலும் ஒன்று. இங்கே பிண்டி எனப்படும் ஒழுங்கமைவற்ற ஒரு கல்லையே தேவி ரூபமாக பாவித்து வணங்குகின்றனர். புராணங்களில் அன்னை பஹுளா என்று அழைக்கப்பட்டாலும் சண்டா (சண்டிகா) என்றுதான் இங்குள்ளவர்கள் அழைக்கின்றனர். கலிகாலத்தில் உடனடி பலன் தரும் தெய்வம் சண்டிகா தேவி.

பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றிய சிவப்பு நிற ஒளி, விஷ்ணு முகத்திலிருந்து தோன்றிய கறுப்பு நிற தேஜஸ், சிவனிடம் இருந்து தோன்றிய வெளுப்பு நிற தேஜஸ் என மூன்றும் கலந்த தேஜஸ்ஸில் இருந்து அம்பிகை தோன்றினாள்.

தல வரலாறு : ஒருமுறை படைக்கும் தொழிலைத் துவக்கிய பிரம்மதேவர், படைக்கப்பட்ட ஆணுக்கு ஏற்ற துணையாக பெண் இருக்க வேண்டும் என எண்ணினார். ஆனால், படைப்புக்குரிய மூலப் பொருள்கள் தீர்ந்ததால், செய்வதறியாது குழம்பினார். அப்போது அவருக்குத் தோன்றிய யோசனையின்படி, முன்பே படைக்கப்பட்ட பொருள்களில் இருந்து மேன்மையானவற்றைத் தொகுத்தார். பூவின் மென்மை, கொடியின் லாகவம், மேகத்தின் கண்ணீர், சந்திரனின் குளிர்ச்சி, புலியின் ஆக்ரோஷம் ஆகியன கலந்து அழகிய உருவம் படைத்தார். அந்தப் பெண் சமஷ்டி ரூபிணியாகத் திகழ்ந்தாள்.

தேவி உபாசனையில் முக்கியமானது அவளுடைய சமஷ்டித் தன்மையைப் பற்றிய தத்துவப் புரிதல். தனித்தனியாக விளங்குவது வியஷ்டி, தனியானவை எல்லாமும் ஒன்றாகச் சேர்ந்து விளங்குவது சமஷ்டி. இத்தகு சக்தி மிகுந்த சண்டிகா என்ற பஹுளாதேவி கோயில் கொண்ட இந்தத் தலம், பக்தர்கள் கேட்கும் வரத்தை அருளும் சிறப்பு பெற்றுத் திகழ்கிறது.

நடை திறக்கும் நேரம் :  இந்த திருக்கோவில் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்  திறந்து இருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  கொல்கத்தா 

அருகிலுள்ள ரயில் நிலையம் : கட்டோவா

பேருந்து வசதி  : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×