அஸ்தாவாதாஷா சக்தி பீடம் சனக்ரி தேவி- இலங்கை
திருத்தல அமைவிடம் : கோணேஸ்வரம் ( சனக்ரி தேவி கோவில்) ஸ்ரீலங்காவின் கிழக்கு கரையோர நகரமான திரிகோணமலையில் அமைந்துள்ளது.
இறைவன்: கோணேச்சரர்
இறைவி: மாதுமையாள்
தீர்த்தம் : பாவநாசம்
தலவிருட்சம: கல்லால் ஆன மரம்
இத்தலதின் மீது திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப் பெற்றுள்ளது. அருணகிரிநாதரும் இத்தலத்தின் மீது திருப்புகழ்பாடியுள்ளார்.
சிறப்புக்கள் : 18 மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி வி்ழுந்த பீடமாகவும், 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. ஒரு சிலர் உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது. வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது.
தல வரலாறு : 17 ம் நூற்றாண்டில் போர்த்துகீசிய மக்கள் இந்த கோயில்களை இடித்துத் தள்ளினர். தென்னிந்தியாவிலிருந்து குலாக்கோட்டன் என்று பெயர் பெற்ற ஒரு சோழ மன்னனால் இது புதுப்பிக்கப்பட்டது. ஸ்ரீலங்காவில் இந்து மதம் புதுப்பிக்கப்பட்ட நான்கு முக்கிய சைவ கோயில்களில் ஒன்றாகும்.
இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன
கி.பி. 1624 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயத் தளபதியாகவிருந்த கொன்ஸ்டன்டைன் டீ சாகோயிலை இடித்து கோவிலில் இருந்த கல்வெட்டுப் பிரதியொன்றினை போர்த்துக்கேய மன்னனுக்கு அனுப்பி வைத்தான். கோயிலின் மூல விக்கிரகம் நகர உலா சென்றபோது போர்த்துக்கேயர் கோவில் குருமார் போன்று வேடம் தரித்து கோயிலினுள் புகுந்து அதன் சொத்துக்களை கொள்ளையிட்டதுடன் கோயிலையும் அழித்தனர்,.அழிக்கப்பட கற்களைக் கொண்டு திருகோணமலைக் கோட்டையையும் கட்டினர். இந்தக்காலப்பகுதியில் பலபெளத்த இந்து ஆலயங்கள் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கோட்டை சுவரில் முன்னே குளக்கோட்டன் எனும் கல்வெட்டு காணப்படுவதும், கயல் சின்னம் பொறிக்கபெற்றிருப்பதும் இக்கோவிலின் தொன் பெருமையை உணர்த்தும்.
கோவில் அமைப்பு : இத்திருத்தலத்தில் 33 அடி உயரமான தியான நிலை சிவபெருமானின் சிலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இச்சிலைக்கு எதிரே தாமரைப் பொய்கையும், லிங்கம், நந்தி, குறுமுனி, அகத்தியர் ஆகியோரின் சிலைகளும் அமைக்கப்பட்டு அழகுக்கு மெருகூட்டுகின்றன.
இது தவிர இராவணன் வெட்டுக்கு அருகாமையில் புதியதொரு தியான மண்டபமும் இத் தியான மண்டபத்தில் கடலுக்கடியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட லிங்கம் ஒன்றும், அகழியொன்று வெட்டப்பட்டபோது கண்டெடுக்கப்பட்ட லக்ஷ்மி சமேத நாராயண விக்கிரகமும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. விக்கிரகங்கள் கிடைக்கப்பெற்றபோது ஏற்பட்ட சேதம் காரணமாக இவைகள் பிரதான கோயிலில் பிரதிஷ்டை செய்யவில்லை. இது தவிர கோணேஸ்வர ஆலயத்தைப் புனர் நிர்மாண திருப்பணி செய்து வழிபட்ட சோழ மன்னன் குளக்கோட்ட மகாராஜாவின் சிலையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தில் ஆகம முறைப்படி பூசைகள் இடம்பெறுகின்றன. மகோற்சவம் பங்குனி உத்தரத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, பதினெட்டு நாட்களுக்கு நடைபெறுகின்றது. இந்த ஆலயத்தில் சிவராத்திரி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
நடை திறக்கும் நேரம் : இந்த திருக்கோவில் காலை 6.00 மணி முதல் இரவு 6.00 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அருகில் உள்ள விமான நிலையம் : திரிகோணமலை
அருகிலுள்ள ரயில் நிலையம் : திரிகோணமலை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு