மகாலிங்கபுரம் - சென்னை - தமிழ்நாடு





	


	



























	




 




	








 




8:48:37 PM         Friday, May 15, 2026

மகாலிங்கபுரம் - சென்னை - தமிழ்நாடு

மகாலிங்கபுரம் - சென்னை - தமிழ்நாடு
மகாலிங்கபுரம் - சென்னை - தமிழ்நாடு மகாலிங்கபுரம் - சென்னை - தமிழ்நாடு மகாலிங்கபுரம் - சென்னை - தமிழ்நாடு மகாலிங்கபுரம் - சென்னை - தமிழ்நாடு மகாலிங்கபுரம் - சென்னை - தமிழ்நாடு மகாலிங்கபுரம் - சென்னை - தமிழ்நாடு மகாலிங்கபுரம் - சென்னை - தமிழ்நாடு மகாலிங்கபுரம் - சென்னை - தமிழ்நாடு மகாலிங்கபுரம் - சென்னை - தமிழ்நாடு மகாலிங்கபுரம் - சென்னை - தமிழ்நாடு
Product Code: மகாலிங்கபுரம் - சென்னை - தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                  ஸ்ரீ அய்யப்பன்- குருவாயுரப்பன் கோயில், மகாலிங்கபுரம்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு என்னும் மாநிலத்தின் தலைநகரான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 10  கி.மீ தொலைவில், மகாலிங்கபுரம் மாதவன் சாலையில் அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் பிரபலமானதாகும். அமைதியான சூழலில் அமைந்துள்ள இந்த கோயில் பக்தர்கள் அதிகம் வரும் கோயிலாக உள்ளது.

தல சிறப்புகள் : சென்னை நகரத்தின் முதல் அய்யப்பன் கோயில். ஒரே வளாகத்தில் ஸ்ரீ ஐயப்பன் மற்றும் ஸ்ரீ விஷ்ணு குருவாயூரப்பன்  இரண்டு சுவாமிகளுக்கு கோவில்கள் அமைத்திருப்பது தனிச்சிறப்பாகும். சபரிமலை கோவிலின் பாரம்பரிய தந்திரிகளான குருமார்களின் ஆலோசனை பின்பற்றி தினந்தோறும் இந்த கோவிலில் வழிபாடு, பூஜை நடத்தப்படுகிறது. ஆஞ்சநேயர், கருடாழ்வார், நாகராசா, நாக்கண்னி, மாளிகப்புரத்தம்மா, நவகிரக கோவில்கள் உள்பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ளன. 1998 அன்று கோயில் வளாகத்தில் நாகராஜா மற்றும் நாகயேகி சிலைகள் நிறுவப்பட்டன. இறைவனின் பஞ்சலோஹ விக்ரஹம் செங்கனூரில் தயாரிக்கப்பட்டு ஸ்ரீ கே.கே.நானு தலைமையில் கொண்டு வரப்பட்டது.

ஸ்ரீ.என்.சுப்பிரமணிய ஸ்தாபதியின் வழிகாட்டுதலின் 1974 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. ஸ்ரீஅய்யப்பன் கோவில் 30 கிலோ தங்கத்தை கொண்டு கோபுரத்தில் தங்கக்கூரை வேயப்பட்டுள்ளது. சென்னையில் முதன் முதலில் ஸ்ரீஅய்யப்பன் மற்றும் குருவாயூரப்பன் கோவில்களை கட்டி அமைத்து, 1974-ம் ஆண்டு முதல் பல திருப்பணிகளை செய்து வருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரதீபம் ஆகிய இரு விழாக்களில் பங்கேற்பதற்காக, ஆண்டுதோறும் உலகம் முழுவதுமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சென்று வருகிறார்கள். ஆண்டு முழுவதும் அய்யப்பனை தரிசித்தாலும், கார்த்திகை மாதம் மாலை அணிந்து ஒரு மண்டலம் கடும் விரதம் இருந்து இருமுடி ஏந்தி அய்யப்பனை தரிசிப்பதை பக்தர்கள் தங்கள் வாழ்நாள் கடமையாக கொண்டுள்ளனர்.  சபரிமலை யாத்ரீகர்கள் பெரும்பாலானோர் இந்த கோவிலுக்கு செல்கிறார்கள்.  1950 களில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, புனித சபரிமலை கோவிலில் புனபிரதிஷ்டம் செய்யபட்டன.  பிரம்மஸ்ரீ காந்தாரு சங்கரரு தந்திரி 1974 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி கும்பபிஷேகம் நடத்தினார். பிரதான தெய்வமாக அய்யப்பன் பகவான், விநாயகர் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோருடன் அவரது மனைவிகளான வள்ளி மற்றும் தேவயானி ஆகியோர் பரிவரத்தை அமைத்தனர்.  

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அடுத்தபடியாக கேரளாவுக்கு வெளியே கட்டப்பட்ட முதலாவது அய்யப்பன் கோவில் இதுதான். இங்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடப்பதைப்போன்று அனைத்து பூஜைகளும் நடக்கின்றன. சபரிமலை மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவிலில் பெண்கள் சாமி தரிசனம் செய்யலாம். சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை மற்றும் மகர தீபத்தையொட்டி எண்ணற்ற பக்தர்கள் மாலை அணிந்து இருமுடியுடன் மலைக்கு சென்றுவருகிறார்கள். 

காலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 11 மணி வரையிலும், மாலையில் 5 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமான நிலையம் :  சென்னை

அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்னை ( நுங்கம்பாக்கம் )

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×