ஆதி பத்ரி
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் சிமோலி மாவட்டத்தில் பத்ரிநாத்துக்கு செல்லும் வழியில் கடல் மட்டத்திலிருந்து 2400 அடி உயரத்தில் ருத்ரபிரயாகையில் இருந்து அலக்நந்தாவுடன் பிண்டர் நதி சங்கமிக்கும் 32 கீ.மீ தொலைவில் கர்ணபிரயாகை உள்ளது.
புருஷசூக்தம், ரிஷிகேசம் முதலான ஸ்லோகத் தொகுதிகளை இயற்றிய ரிஷி நாராயணன், ஐந்து இடங்களில் தவமிருந்ததாகக் கூறுகிறார்கள். இந்த ஐந்து ஆசிரமங்களை பஞ்ச பத்ரி என்று அழைக்கிறார்கள். அவை ஆதி பத்ரி, வ்ருத பத்ரி, பவிஷ்ய பத்ரி, யோக பத்ரி, விஷால் பத்ரி என்பனவாகும். பத்ரி திருத்தலங்கள், ரிஷிகேஷ் பத்ரிநாத் மார்க்கத்தில் உள்ளன.
சிறப்புக்கள் : கர்ண பிரயாகையிலிருந்து 17 கி.மீ தொலைவில் ஆதி பத்ரி உள்ளது. ஹெலிசேரா என்ற இடத்தில் 16 சிறு கோயில்கள் கொண்ட ஒரு அமைப்பு ஆதிசங்கரர் ஸ்தாபித்தார் என்றும் பிறகு குப்தர்கள் செப்பனிட்டனர் என்றும் சொல்லப்படுகிறது. கோயில் கருவறையில் நாலு கரங்களுடன் சங்கு சக்கர தாமரை சுதையுடன் விஷ்ணு காட்சியளிக்கிறார்.
இங்குள்ள கோயில் ‘நாராயண மட்’ என்று அழைக்கப்படுகிறது. ரிஷி நாராயணனால் உருவாக்கப்பட்டது. ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கரர் இங்கு விஜயம் செய்திருக்கிறார். அவருக்கு முன் பஞ்ச பாண்டவர்களும் இங்கு வந்து வழிபட்டிருக்கிறார்கள். இந்த ஆதிபத்ரி கோயில் 6 முதல் 12 நூற்றாண்டுவரை பல அந்நிய சக்திகளால் அடுத்தடுத்து பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. 350 சதுர மீட்டர் பரப்பில், 14 சிறுசிறு கோயில்கள் கோபுரங்களுடன் இங்கே திகழ்கின்றன. ஏழு கோவில்கள் குப்த காலத்தில் கட்டப்பட்டன. கடப்பா கற்கள் என்று அழைக்கப்படும் செவ்வக கருநிற கற்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான கோயில்கள் சேதமுற்றுள்ளன. இக்கோயிலின் பிரதான பகவான், ஆதி பத்ரிநாராயணன், மூன்றரை அடி உயரம் 2 அடி அகலம் கொண்ட கருப்பு நிறக் கல்லால் மிகவும் அழகாக, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டவர்.
கர்ப்பகிரகம், நடு சந்நதி, மக்கள் சேவை மண்டபம் என்று 3 பிரிவுகளாக இக்கோயில் விளங்குகிறது. பகவான் ஆதிநாராயணன் மேல் இரு கரங்களில் சங்கும், சக்கரமும் ஏந்தியிருக்கிறார். இச்சிலை சிதி லமடைந்துவிட்டதால் அவரது கீழ் இரு கரங்களை முழுமையாகக் காண இயலவில்லை. இக்கோயிலைச் சுற்றி பிராகாரத்தில் கருடன் , உமாமகேஷ், லக்ஷ்மி நாராயணன், சூரியன், விநாயகர், துர்க்கா, ஹனுமன், ராம - லட்சுமண - சீதா, சிவன் சந்நதிகள் தனித்தனியே உள்ளன. இந்த இடத்தில் ஸ்ரீ கேதார்நாத், மந்த்ரா தேவி மற்றும் ஆதி பத்ரி நாராயணா போன்ற புகழ் பெற்ற கோவில்கள் உள்ளன. சதுர்புய நின்ற கோல சாளக்கிரம மூர்த்தியாக அருள் பாலிக்கின்றார் இங்கு பெருமாள். பத்ரிநாதரை தரிசனம் செய்ய செல்லும் பொது நாரதர் முதன் முதலாக பிரதிஷ்டை செய்து வழிபட்ட மூர்த்தி இவர்.
கோவில் அமைப்பு : கட்யூரி அமைப்பில் ஒரு விமானத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. ஒரு கருவறை மற்றும் ஒரு மண்டபம் இரு வாயில்கள் உள்ளன. திருச்சுற்றில் பஞ்சமுக அனுமன் மற்றும் சிவபெருமானுக்கு தனி சன்னதி உள்ளது. கருவறையில் பஞ்சாயத் முறையில் தியான பத்ரிநாதர். சதுர்புஜராக சங்கு சக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். குபேரன், உத்தவர், நரநாரயணர்கள், கிராமதேவதை உடன் உள்ளனர். சாளக்கிராமங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளார். கர்ப்பகிரகத்தில் பஞ்சபாண்டவர்கள் கல் முகங்கள் உள்ளன. வருடத்தில் ஒரு நாள் பெருவிழாவின் போது இம்முகமூடி அணிந்து நடனம் ஆடுவார்களாம்.
கர்ணப் பிரயாகையிலிருந்து இராணிகேத்து பேருந்து மார்க்கத்தில் இவ்வாலய வளாகம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு மேல் நாம் வாகனத்தில் செல்ல இயலாது. அங்குள்ள ஒரு ஜீப்பில் தான் செல்ல வேண்டும். சிறிது தூரம் சென்றவுடன் நடந்து தான் செல்ல வேண்டும். சுமார் 2 கீ.மீ நடக்க வேண்டி இருக்கும். செல்லும் பாதை ஒற்றை அடி பாதை. கையில் ஒரு ஊன்று கோலை வைத்துதான் நடக்க வேண்டும். வழியில் ஒரு அருவி இருக்கிறது. மூலிகை தன்மை வாய்ந்த இந்த அருவியில் குளித்துவிட்டுத்தான் பாபாஜியை தரிசிக்க செல்ல வேண்டும். முதன் முதலில் மஹா அவதார் பாபாஜி, ராணுவ அதிகாரியான லாஹிரி மகாசாயருக்கு காட்சி அளித்தார். அவர்தான் பாபாஜியின் முதல் சீடர்.
ஆதி பத்ரி கன்னாபபிராயிலிருந்து ஒரு மணிநேர பயணமாகவும், ராணிக்கேத் செல்லும் வழியில் சூலாக்கோட் அருகிலும் உள்ளது. இந்த இடத்தை அடைவதற்கு உள்ளூர் போக்குவரத்து கிடைப்பது குறைவாகவே உள்ளது. ஒரு வாடகை வண்டியை வாடகைக்கு எடுத்து, அருகிலுள்ள பகுதியை எளிதாக அடையலாம். இங்கு சீரான சாலை வசதிகள் உள்ளன.
அருகிலுள்ள விமான நிலையம் : டேராடூன்
அருகிலுள்ள ரயில் நிலையம் : ரிஷிகேஷ்
பேருந்து வசதி : இல்லை
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை