சைதாப்பேட்டை





	


	



























	




 




	








 




4:55:08 PM         Wednesday, April 29, 2026

சைதாப்பேட்டை

சைதாப்பேட்டை
சைதாப்பேட்டை சைதாப்பேட்டை சைதாப்பேட்டை சைதாப்பேட்டை சைதாப்பேட்டை சைதாப்பேட்டை சைதாப்பேட்டை சைதாப்பேட்டை
Product Code: சைதாப்பேட்டை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                    சைதாப்பேட்டை, சௌந்தரேசுவரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் சைதாப்பேட்டையில் அமைந்துள்ளது. இத்தலத்தினை வடதிருநாரையூர் என்று அழைத்துள்ளனர். சைதாப்பேட்டை காரணீசுவர் கோயிலிருந்து தெற்கு பகுதியில் உள்ளது.

இறைவன் : சௌந்தரேஸ்வரர் 

இறைவி :  திரிபுரசுந்தரி

தலவிருட்சம் :   வில்வம், வன்னி, சரக்கொன்றை

தலச் சிறப்புகள் : இத்தலத்தில் வன்னி, கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்கள் அமைந்துள்ளது சிறப்பு. வன்னிமர வழிபாடு சனிக்கிழமைகளில் நடைபெறுகிறது.  நாரை பறவையானது இத்தலத்தின் மூலவரை வணங்கியமையால் இத்தலத்தினை வடநாரையூர் என்கின்றனர்.அன்னை திரிபுரசுந்தரி மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது எனும்படி அருள்கிறாள். ஆலய முகப்பில் தலவரலாற்றுச் சிற்பம் சுதை வடிவில் காட்சியளிக்கிறது. இங்கு வரஸித்தி விநாயகர், கொடிமரம், நந்தி தேவர், உபதேவதைகள், சோமாஸ்கந்தர், நிருதி விநாயகர், சைவ நால்வர், சேக்கிழார், அபிராமி, வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், நவக்கிரகங்கள், சூரிய பகவான் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.      

இந்த ஆலயப் பிராகாரத்தில் காணப்படுகின்ற வன்னிமரம் சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமை கொண்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தனது சென்னை விஜயத்தின்போது சைதாப்பேட்டை சவுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு வந்து ஈசனை தரிசித்த மகா பெரியவா மூன்று நாட்கள் இந்த வன்னி மரத்தின் அடியிலேயே தங்கி இருந்தார். வன்னி மரத்தின் அடியில் பைரவர், நாகர் மற்றும் வன்னீஸ்வரர் ஆகிய தெய்வ வடிவங்களைத் தரிசிக்கலாம். வன்னி மரத்தையும், இதன் அடியில் இருக்கின்ற திருமேனிகளை வலம் வருவதும் சிறப்பு. கருத்தொருமித்த தம்பதியாகக் கணவன் மனைவியர் வாழ்வதற்கு வன்னி மரத்தை வலம் வருதல் நலம். இங்கே விளக்கேற்றி வழிபடுவோர் அதிகம். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பலரும் தங்கள் இல்லத் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடப்பதற்கு முன் இந்த வன்னிமரத்தை வணங்கி விட்டுச் செல்கின்றனர். அவர்கள் வன்னிமரத்துக்கு பூணூல் அணிவிப்பதும், இலை போட்டு விருந்து நைவேத்தியம் செய்வதும் வேறு எங்கும் காணமுடியாத வழக்கம்.

தல வரலாறு : பழைமையும், சாந்நித்தியமும் கொண்டு இன்றைக்கும் விளங்கி வருகின்ற திருக்கோயில். கேட்கும் வரத்தை அருளும் இந்தத் திருக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து. 12-ஆம் நூற்றாண்டில் சதயன் என்கிற வணிகப் பெருமகனார் ஆலயப் பிராகாரம் அமைத்து, திருக்கோயிலை சீரமைப்பு செய்திருக்கிறார். அதோடு இங்கு நித்ய பூஜைகள் மற்றும் விழாக்கள் தடை இல்லாமல் நடைபெறுவதற்கு நிவந்தங்களை எழுதி வைத்தார் என்றும், அவரை சிறப்பிக்கும் விதமாக இந்தப் பகுதி சதயபுரி என்று அழைக்கப்பட்டதாகவும் பழைய குறிப்புகள் சொல்கின்றன. இச்சிவாலயத்தினை 12ம் நூற்றாண்டில் சதயன் என்பவர் கட்டினார்.  தேவதத்தன் என்ற கந்தர்வன், காட்டில் தவத்தில் ஆழ்ந்திருந்த துர்வாசரின் தவத்தைக் கலைத்தான். கண் விழித்த துர்வாசர், அவனை நாரையாகும்படி சபித்தார். நாரையாக உருமாறிய அவன், தன் பாவம் தீர, சிவபெருமானைச் சரணடைந்தான். சிவன் அந்த நாரையிடம், தினமும் காசி சென்று கங்கையில் நீராடி, தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்ய சுயரூபம் கிடைக்கும்,  என்று அருள்புரிந்தார். நாரையும் சிவனை பூஜித்து கந்தர்வனாக மாறியது. இந்த வரலாறு நடந்த சிவத்தலம் கடலூர் மாவட்டம் திருநாரையூர். இதே வரலாற்றின் அடிப்படையில் அமைந்த கோயில், சென்னை சைதாப்பேட்டை சவுந்தரேஸ்வரர் கோயில். இக்கோயில் 800 ஆண்டுகளுக்கு முந்தியது. "வடநாரையூர்' என்று பெயர்.

ஒன்பது வாரம் நெய்தீபம் ஏற்றி சைதாப்பேட்டை சவுந்தரேஸ்வரரையும், அம்பாள் திரிபுரசுந்தரியையும் வழிபட்டவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். பிரதோஷம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவாரம் சிறப்பாக கொண்டப்படுகிறது. பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள சுவாமியை தரிசித்துச் செல்கின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாற்றி விளக்கேற்றி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

காலை 5.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : சைதாப்பேட்டை 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×