மாங்காடு





	


	



























	




 




	








 




1:42:40 PM         Saturday, May 02, 2026

மாங்காடு

மாங்காடு
மாங்காடு மாங்காடு மாங்காடு மாங்காடு மாங்காடு மாங்காடு மாங்காடு மாங்காடு மாங்காடு மாங்காடு மாங்காடு
Product Code: மாங்காடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                              மாங்காடு, ஸ்ரீ வெள்ளீஸ்வரர் (சுக்ரன் தலம்) 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை நகரின் அருகில் காஞ்சிபுரம் மாவட்டம், இத்தலம் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு வெகு அருகில் உள்ளது.

இறைவன் : வெள்ளீஸ்வரர் ,பார்கவேஸ்வரர்

இறைவி: : ஸ்ரீ காமாட்சி

தல தீர்த்தம் : சுக்ரதீர்த்தம்

தல விருட்சம் : மாமரம் , வில்வம்

தலச் சிறப்புகள் : மூலவர் சதுர பீடத்தில் காணப்படுகிறார். இக்கோயிலின் மூலவராக வெள்ளீசுவரர் உள்ளார். அவரை பார்க்கவேசுவரர் என்றும் அழைப்பர். முயலகன் இடது புறத்தில் திரும்பியிருப்பதுபிரம்மாவும், பிரயோக சக்கரத்தில் விஷ்ணுவும் வணங்கியபடி தட்சணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடது புறத்தில் திரும்பியிருப்பதும் , லிங்கோத்பவர் அருகில் பிரம்மாவும் ,பிரயோக சக்கரத்தில் விஷ்ணுவும் வணங்கியபடி இருப்பது வேறு கோயில்களில் காணமுடியாத சிறப்பு. விநாயகரின் கையில் மாம்பழம் உள்ளது. மாங்கனி விநாயகர் என்று பெயர். துர்க்கைகையின் கையில் பிரயோக சக்ரம் உள்ளது இத்தகைய கோலத்தில் துர்கையை பார்ப்பது அரிது. நந்தி தேவரின் முன் காமாட்சியம்மை நின்ற பாத சுவடுகள் உள்ள பீடமே இங்கு அம்பாள் சன்னதி. காஞ்சிக்கு செல்லும்முன் சிவபெருமான் சுக்கிரனுக்கு தரிசனம் கொடுப்பதை இங்கு நின்று கண்டு மகிழ்ந்தார்.

விமானத்தில் எண்திசை அதிபர்கள் உள்ளனர். திருச்சுற்றில் வீரபத்திரர் உள்ளார். அவரது வலது பாதத்திற்கு அருகே தட்சன் ஆட்டுத்தலையுடன் வணங்கும் கோலத்தில் உள்ளார். முன் மண்டபத்தில் இருக்கும் விநாயகர் மிகவும் விசேஷமானவர். விவசாயிகள் இவரிடம் மாங்கனி, நெல் நைவேத்யமாக படைத்து வழிபடுகிறார்கள். இதனால், விவசாயம் செழிப்பதாக நம்பிக்கை. கோஷ்டத்தில் உள்ள மற்றொரு விநாயகர் கையில் குடை, சாமரம் வைத்து நின்ற கோலத்தில் இருக்கிறார். இவ்வாறு இத்தலத்தில் இரண்டு வித்தியாசமான விநாயகர்களை தரிசிக்கலாம். இக்கோவிலில் ஒரே கல்லால் வடிக்கப்பட்ட வள்ளி தெய்வயானை சமேத முருக பெருமான் உள்ளார்.

தல வரலாறு :  தேவியின் திருக்கரம் பற்றி அழைத்துவர மாங்காட்டை நோக்கி ஈசனும் புறப்பட்டார். தேவியை நாடி ஓடோடி வந்த சிவனின் திருவடிகள் மாங்காட்டை நெருங்கியதும் அசையாமல் நின்று விட்டன. சிவநாமம் உச்சரித்து தவமிருக்கும் மாமுனிவன் குரல் கேட்டு உலகம்மையை நெருங்காமல் உறைந்துபோய் நின்று விட்டார். இடைவிடாமல் சிவமந்திரத்தை உச்சரித்து கடுந்தவமிருக்கும் மாமுனிவர் சுக்கிர முனிவனாவார். சுக்கிராச்சாரியார் பூஜித்த இத்தலத்தை தரிசிப்பவர்களுக்கு சுக்கிரனின் பூரண அருள் கிட்டும். சுக்கிராச்சாரியார் பூஜித்ததால் இறைவனை தமிழில் வெள்ளீஸ்வரர் என்றும், சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைத்தனர்.

கைலாயத்தில் ஒருசமயம் சிவன், தனித்து அமர்ந்திருந்தார். அப்போது அவரிடம் வந்த அம்பிகை, விளையாட்டாக அவரது கண்களை மூடினாள். இதனால், உலகம் இருளில் மூழ்கியது. எனவே, அம்பிகை மீது கோபம்கொண்ட சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபம் கொடுத்துவிட்டார். அம்பிகை, தவறை மன்னித்து அருளும்படி சிவனிடம் வேண்டினாள். அவர் பூலோகத்தில் இத்தலத்தில் தவமிருந்து வழிபட, குறிப்பிட்ட காலத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதன்படி அம்பிகை இத்தலத்திற்கு வந்து பஞ்சாக்னியில் நின்று தவம் செய்தார். அவளுக்கு அருள்புரிவதற்காக சிவன், இத்தலத்திற்கு வந்தார். இதனிடையே, சுக்கிராச்சாரியாரும் இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்தார்.

மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்வதற்காக, வாமனராக குள்ள அவதாரம் மகாவிஷ்ணு, மகாபலியிடம் தானம் கேட்டு சென்றார். அவனிடம் மூன்றடி வேண்டும் என்றார். அவரும் ஏற்றுக்கொண்டார். அப்போது அவரது குலகுருவான சுக்ராச்சாரியாருக்கு, வந்திருப்பது திருமால் என்று தெரிந்து விட்டது. எனவே, மகாபலியிடம் தானம் தர வேண்டாம் என்று தடுத்தார். ஆனால், மகாபலி கொடுத்த வாக்கை மீறமாட்டேன் என சொல்லி அவர் கூறியதை கேட்கவில்லை. அவன் திருமாலுக்கு மூன்றடியை கொடுப்பதற்காக, தாரை பாத்திரத்தை எடுத்தார். மனம் பொறுக்காத, சுக்ராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து தாரை பாத்திரத்தில் நீர் வெளியேறும் துளையை அடைத்தார். அப்போது வாமனராக வந்த திருமால், ஒரு தர்ப்பை புல்லை எடுத்து சுக்ராச்சாரியாரின் கண்ணில் குத்தினார். அதன்பின் மூன்றடியில் மூன்று உலகையும் அளந்தார். இவ்வாறு கண் பார்வை இழந்த சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை கிடைக்க, இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தார்.

அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார். அப்போது அவர் சிவபூஜை செய்யவே, சிவனால் இங்கிருந்து செல்ல முடியவில்லை. எனவே, இங்கிருந்தபடியே அம்பிகையிடம் அசரீரியாக காஞ்சிபுரத்தில் தவம் செய்யும்படியும், அங்கு தான் காட்சி தருவதாகவும் கூறினார். அதன்படி அம்பிகையும் காஞ்சிபுரம் சென்று தன் தவத்தை தொடர்ந்து, பின் சிவனருள் பெற்றாள். சுக்ராச்சாரியாருக்கு காட்சி தந்த சிவன் இங்கு எழுந்தருளினார்.

பார்வை குறைபாடுள்ளோர், ஏன், பார்வை இழந்தவரும்கூட வெள்ளீஸ்வரரை அகக்கண்களால் தரிசித்து, மீண்டும் வந்து  புறக்கண்களால் தரிசிக்கும் பாக்கியத்தை பெறுகின்றனர். சிவராத்திரி, கார்த்திகை, ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. ஐந்து வெள்ளிக்கிழமைகளில் அல்லது பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் சுக்கிரனுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் சிவன், அம்பிகைக்கு பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள். சுவாமிக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்தும், மொச்சை பயிறு நைவேத்யம் படைத்தும் வழிபடுகிறார்கள். மாங்காடு காமாட்சியை வழிபடுபவர்கள் இவரையும், இங்கிருந்து சற்று தூரத்திலிருக்கும் வைகுண்டவாசப் பெருமாளையும் வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

காலை 6.30 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : பல்லாவரம் 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×