இளநகர்





	


	



























	




 




	








 




9:59:25 AM         Friday, April 17, 2026

இளநகர்

இளநகர்
இளநகர் இளநகர் இளநகர் இளநகர் இளநகர் இளநகர் இளநகர் இளநகர்
Product Code: இளநகர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                     இளநகர், உடையீஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில்  உத்திரமேரூர் வட்டம், இளநகர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

இறைவன் : உடையீசுவரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

இறைவி : உமையம்பிகை, சுகப்பிரசவ நாயகி

தல விருட்சம்  : வில்வம் 

தலச் சிறப்புகள் : தாமரை பீடத்தில் காட்சி தரும் சுவாமி செம்மண் லிங்கமாக இருந்தாலும், அபிஷேகம் செய்யும்போது கரையாதிருப்பது கலியுக அதிசயம். இந்த இலிங்கத்தில் ஏர்க்கால் பட்ட தடம் இருக்கிறது. இலிங்கத்தின் மத்தியில் மற்றொரு லிங்கம் இருப்பதைப்போன்ற அமைப்பும் இருக்கிறது. திருச்சுற்றில் விநாயகர், நவக்கிரகங்களின் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். இங்குள்ள விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். 

தல வரலாறு : பல வருடங்களுக்கு முன்பு இங்கு வசித்த சிவபக்தர் வயலை உழுதபோது ஏர்க்கால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றுவிட்டது. அதனை எடுக்க முயற்சி மேற்கொண்டபோது செம்மண்ணால் லிங்கம் இருப்பதைக் கண்டு அதனை அமைத்து கோயில் கட்டினார். ஏர்க்கால் தடுத்து கிடைக்கப்பெற்றதால் மூலவர் உடையீசுவரர் எனப்படுகிறார். ஏர்க்காலை உடை என்பர். இக்கோயிலின் திருப்பணி போது ஒரு நந்தி கிடைத்தபோது அதனை கோயிலில் வைத்து வழிபடத்தொடங்கியுள்ளனர். இறைவியை வழிபட வந்த நிறைமாத கர்ப்பிணி நந்தி மேல் சாயவே, நந்தி சிறிது சிறிதாக நகர்ந்தது. அவள் தடுமாறி தரையில் சாய்ந்தாள். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது முதல் அந்த நந்தி சுகப்பிரசவ நந்தி என்றழைக்கப்படுகிறது. சுகப்பிரசவம் ஆவதற்கு கர்ப்பிணிகள் இங்கு அம்பிகையை வழிபட்டு, பிரசவ நந்தி சிலையை சற்று தள்ளி வைத்து செல்கின்றனர். அவர்களுடன் துணைக்குச் செல்பவர்கள், நந்தியை மீண்டும் பழைய நிலையில் திரும்பவும் வைக்கின்றனர். இவ்வாறு செய்தால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

தைப்பூசம், சிவராத்திரி. புத்திர பாக்கியம் கிடைக்க, சுகப்பிரசவம் ஆக இங்கு வேண்டிக்கொள்ளலாம். இங்கு வேண்டிக்கொள்ள கடன் தொல்லை தீரும். வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

காலை 6.00 மணி முதல் முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம் 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×