முக்தீஸ்வரர்





	


	



























	




 




	








 




8:30:51 PM         Tuesday, April 21, 2026

முக்தீஸ்வரர்

முக்தீஸ்வரர்
முக்தீஸ்வரர் முக்தீஸ்வரர் முக்தீஸ்வரர் முக்தீஸ்வரர் முக்தீஸ்வரர் முக்தீஸ்வரர் முக்தீஸ்வரர் முக்தீஸ்வரர் முக்தீஸ்வரர் முக்தீஸ்வரர் முக்தீஸ்வரர்
Product Code: முக்தீஸ்வரர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                         காஞ்சிபுரம், முத்தீசுவரர் (கருடேசம்)

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் நடுப்பகுதியில் அடிசன் பேட்டை காந்தி சாலையில்  காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலையின் 2 கி.மீ தொலைவிலும்சென்னையிலிருந்து 75 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இறைவன் :  முக்தீஸ்வரர்

தீர்த்தம்  : சிவதீர்த்தம்

தலச் சிறப்புகள் : கிழக்கு நோக்கியுள்ள இத்தலத்தில் இறைவன் சுவர்ண ரேகையுடன் உள்ளார். 63 நாயன்மார்களில் ஒருவர் திருக்குறிப்பு தொண்ட நாயனார். இவருக்காக இறைவன் நடத்திய திருவிளையாடல் நடந்த தலம் தான் காஞ்சி முக்தீஸ்வரர் திருக்கோயில். சன்னதிக்கு நேர் எதிரே நுழைவு வாயிலில் சுதை வடிவில் இந்த வரலாறு காட்டப்பட்டுள்ளது.  சனிபகவானும், சூரியனும் இறைவனை வணங்கியபடி உள்ளனர். இவரை வணங்குவோருக்கு ஏராளமான செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கை. கருடன் தன்னை வருத்திய கத்துருவின் புதல்வர்களாகிய பாம்புகளை கொல்ல இந்த சிவனை வழிபட்டு பலன் பெற்றதாக கூறுவர். காஞ்சிபுரம் முத்தீசுவரர் கோயில் (கருடேசம்) என்று அறியப்படும் இது, மேலும் சிவனடியாரைப்போல் வந்த இறைவனின் ஆடையை திருக்குறிப்புத் தொண்டர் துவைத்தளித்த திருக்குளம், கோயிலின் அகத்திலுள்ள இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.

கருடன் இவ்விறைவனை வழிபட்டு, தன்னை வருத்திய சத்துருவின் புதல்வர்களாகிய பாம்புகளை அழிக்கும் வரத்தைப் பெற்றதாக சொல்லப்படுகிறது. கருடன் வழிபட்ட கருடேசுவரர் எனும் தனி சந்நிதி இக்கோயில் உட்புறத்தில் உள்ளது. கருடன் வழிபட்டமையால் இக்கோயில் கருடேசம் எனவும் வழங்கப்படுகிறது. திருக்குறிப்புத் தொண்டர் முத்திபேறடைந்த பெரும்பதியாகவும் குறிப்பிடப்படுகிறது. முத்தீச தல விளக்கம் என்பது, காசிப முனிவரின் மனைவியாகிய கத்துரு, சுபருணை ஆகியோர் தத்தம் அழகைப் பாராட்ட நடுநின்ற கணவர் கத்துரு அழகின் மிக்கவள் என்றமையின், தோற்ற சுபருணை, தங்களுள் ஒட்டியவாறு சிறையிடைப் பட்டனள். தேவ அமுதம் கொடுப்பின் விடுதலை பெறுவை என்ற கத்துருவின் விருப்பத்தை நிறைவு செய்யச்சுபருணை காஞ்சியில் முத்தீசரை வணங்கி வரம்பெற்றுக் காசிப முனிவர் அருளால் கருடனை ஈன்று வளர்த்து அவனுக்குக் குறையைக் கூறினள். கருடன் தேவலோகம் சென்று இந்திரனைப் புறங்காணச் செய்து அமுதத்தைக் கைப்பற்றி வருங்கால் தடுத்த திருமாலொடு இருபத்தொரு நாள் நிகழ்ந்த கடும்போரில் வெற்றி தோல்வி கண்டிலன். திருமால் வியந்து ‘வேண்டுவகேள் தருதும்’ என்றனர். கருடன் கேட்டு, ‘நினக்கு யாது வேண்டும் அதனை என்பாற் பெறுக’ எனத் திருமாலை நோக்கிக் கூறினன். ‘எனக்கு வாகனமாம் வரத்தைத் தருக’ என்ற திருமாலுக்கு வருந்தியும் சொல் தவறாது ‘அவ்வாறாகுக’ என்று பின் இசைவு பெற்றுச் சென்று, அமுதத்தைக் கத்துருவிற்குக் கொடுத்துத் தாயைச் சிறைவீடு செய்தனன் கருடன். கருடன் தனது தாய் அருச்சித்த முத்தீசரை வணங்கிக் கத்துருவின் புதல்வர்களாகிய பாம்புகளைக் கொல்லும் வரத்தைப் பெற்றனன். ஏகாலியர் குலத்திற் பிறந்த திருக்குறிப்புத் தொண்ட நாயனாரும் முத்திபெற்றனர். கருடன் வழிபட்ட கருடேசர், முத்தீசர்க்கும் பின்புறம் கோயில் கொண்டுள்ளனர்.

தல வரலாறு: காஞ்சியில் ஏகாலியர் குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்பு தொண்டர். இவர் சிவனடியார்களின் குறிப்பறிந்து செயல்பட்டதால் இந்த பெயர் வந்தது. “”அடியார்களது ஆடைகளின் மாசு கழிப்பதாலே தம்முடைய பிறப்பின் மாசு கழியும்” என்ற தத்துவத்தை இவர் உணர்ந்தார். தங்கள் ஊருக்கு வரும் சிவனடியார்களின் துணிகளை வெளுத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். இவரது பெருமையை இறைவன் உலகறிய செய்ய விரும்பினார். ஒரு நாள் சிவன் கிழிந்த உடையை உடுத்தி கொண்டு விபூதி பூசிய உடலுடன் குளிரில் நடுங்கிக் கொண்டே திருக்குறிப்பு தொண்டரின் இல்லத்திற்கு வந்தார்.

அவரை வரவேற்று உபசரித்த திருக்குறிப்பு தொண்டர், சிவனடியாரின் அழுக்கடைந்த கந்தல் துணியையும், மெலிந்த உடலையும் கண்டு வருத்தமடைந்து, உடல் இளைத்திருக்க காரணம் கேட்டார். இறைவன் சிரித்தார். அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாத திருக்குறிப்பு தொண்டர்,”” ஐயா! நான் சிவனடியார்களின் ஆடைகளை சுத்தம் செய்து கொடுத்து விட்டு தான், மற்றவர்களின் ஆடையை துவைப்பேன். எனவே தாங்கள் தங்களது உடையை கொடுத்தால் உடனே சுத்தம் செய்து கொடுத்து விடுகிறேன்,” என பணிவோடு கேட்டார். “”இந்த குளிரில் இருக்கும் ஒரு ஆடையையும் உன்னிடம் கொடுத்து விட்டால் என் பாடு திண்டாட்டமாகி விடுமே,” என்றார் சிவன். திருக்குறிப்பு தொண்டர்,””ஐயா! அப்படி சொல்லாதீர்கள். விரைவாக துணியைக் காய வைத்து தருகிறேன்,” என்றார். “”இன்று மாலை பொழுது சாய்வதற்குள் துணியை வெண்மையாக்கி என்னிடம் தந்து விட வேண்டும்,” என கூறி துணியையும் கொடுத்தார் சிவன். பின்பு வருணபகவானை அழைத்து புயலும், மழையு மாய் வீசச் சொன்னார். தொண்டர் கலங்கி விட்டார். மழை நின்றபாடில்லை. மாலையும் நெருங்கி விட்டது.

சிவனடியாருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போனதே என்று வருந்திய தொண்டர் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் வாழ்வதா என நினைத்து துவைக்கும் கல்லில் தலை மோதி உயிர் விட தயாரானார். அதற்கு மேலும் சோதிக்க விரும்பாத இறைவன் துவைக்கும் கல்லில் இருந்து தன் கை நீட்டி தொண்டரின் தலை மோதாமல் தடுத்தார். இதைக்கண்டு அதிசயித்தார் தொண்டர். அப்போது வானத்தில் பேரொளி பிறந்தது. இறைவன் அடியவரை நோக்கி,””உன் பெருமையை இந்த உலகுக்கு உணர்த்தவே நாம் இவ்வாறு செய்தோம். இனி கயிலை வந்து எம்முடன் இருப்பீராக” என கூறி மறைந்தார். திருக்குறிப்பு தொண்டரும் பகவானின் திருவடியை அடைந்தார். இந்த வரலாறு நடந்த திருத்தலம் தான் முக்தீஸவரர் திருக்கோயில். சன்னதிக்கு நேர் எதிரே நுழைவு வாயிலில் சுதை வடிவில் இந்த வரலாறு காட்டப்பட்டுள்ளது.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

காலை 7.30 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  காஞ்சிபுரம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×