திருப்புலிவனம்





	


	



























	




 




	








 




1:58:53 PM         Sunday, May 31, 2026

திருப்புலிவனம்

திருப்புலிவனம்
திருப்புலிவனம் திருப்புலிவனம் திருப்புலிவனம் திருப்புலிவனம் திருப்புலிவனம் திருப்புலிவனம் திருப்புலிவனம் திருப்புலிவனம் திருப்புலிவனம் திருப்புலிவனம் திருப்புலிவனம் திருப்புலிவனம் திருப்புலிவனம்
Product Code: திருப்புலிவனம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                               திருப்புலிவனம், வியாக்ரபுரீசுவரர்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்புலிவனம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூருக்கு அருகில் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது.

இறைவன் : வியாக்ரபுரீஸ்வரர்

இறைவி : அமிர்தகுஜலாம்பாள்

தல தீா்த்தம் : வியாக்ரபாத தீா்த்தம் 

தல விருட்சம்  :  வில்வம்

தலச் சிறப்புகள் :  இங்கு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின்மீது புலியின் பாதங்கள் படிந்துள்ளன. சிவனின் விலா எலும்பும் தெரிகிறது. லிங்கத்தின் மேல்பாகத்தில் ஜடாமுடி உள்ளது. உத்ராயணம், தட்சிணாயணம் இரண்டு புண்ணிய காலங்களிலும் இங்குள்ள சூரியன் சிலையின் நிழல், சாயாமல் நேராகவே சுவரில் விழுவது ஒரு தெய்வீக அதிசயம். தெட்சிணாமூர்த்தி ஒரு காலை சிங்க வாகனத்தில் வைத்துள்ளார். மற்றொரு கால் வழக்கம் போல் முயலகன் மீது இருக்கிறது. இந்த அமைப்பை வேறு எங்கும் காண இயலாது. இவரை “ராஜயோக சிம்ம தெட்சிணாமூர்த்தி’ என்கின்றனர். இவரை “அர்த்தநாரீஸ்வர தெட்சிணாமூர்த்தி’ என்றும் சொல்வர். காரணம், அம்பாளுக்கு உகந்த சிம்மத்தின் மீதும், மறுகால் நடராஜப் பெருமானின் காலடியில் உள்ள முயலகன் மீதும் உள்ளதாலும் ஆகும். ஒருபுறம் ஆண்மையின் மிடுக்கும், மறுபுறம் பெண்மையின் நளினமும் இச்சிலையில் தெரிகிறது.

கோவில் அமைப்பு :  கோயிலின் முகப்பில் விநாயகர், முருகன் சிலைகள் உள்ளன. கருவறை தரைத்தளத்திலிருந்து 15 அடி உயரத்தில் காணப்படுகிறது. மூலவர் சன்னதிக்குப் பின் திருமால் நின்ற கோலத்தில் உள்ளார். அருகில் ஒரு தூணில் அருகே நரசிம்மர் நின்ற நிலையில் உள்ளார். கோயிலில் விஷ்ணு துர்க்கை, துர்க்கை, பைரவர், சண்டீசுவரர், நவக்கிரகங்கள் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. பதஞ்சலி, வியாக்கிர பாதர், சனகாதி முனிவர்கள் ஆகியோர் தட்சிணாமூர்த்தி அருகில் உள்ளனர். பல்லவர் காலப்பணியாக கோயில் உள்ளது. சிவன் சன்னதியில் ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது. இது ஒருபுறம் காஞ்சிபுரம் வரையிலும், மறுபுறம் உத்திரமேரூர் வரையிலும் செல்கிறது என்றும், ஒரு பெரிய பாறை மூடிய முக்கிய அறை இதற்குள் உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஆதிசங்கரர் சனாதன தர்மத்தின் ஷண்மதங்களை வழி வகுத்துத்தந்தார். இந்த திருத்தலத்தில் ஷண்மதங்களுக்கான தெய்வங்களும் உள்ளன.

திருப்புலிவனம் கோவிலில் மூன்றாவது பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார். இவர் ஒரு காதில் குண்டலமும், மறு காதில் தோடும் அணிந்து சிவசக்தி வடிவமாக காட்சியளிக்கிறார். இந்த தட்சிணாமூர்த்தியின் இடது கால் சிம்ம வாகனத்தின் மீதும், வலது கால் முயலகன் மீதும் ஊன்றியபடி காணப்படுகிறது. தட்சிணாமூர்த்தியின் அருகில் சனாகதி முனிவர்களும், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்கள் தங்கள் துணைவியருடனும் இருப்பது போன்ற அமைப்பு உள்ளது.

இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே நிர்மாணிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். பல்லவர்கள் காலத்து கட்டுமானப் பணியே பிரதானமாக உள்ளது. இங்குள்ள வியாக்ரபுரீஸ்வரர் சுயம்புலிங்கமாவார். ஆவுடையார் சதுர வடிவில் தாமரை மீது உள்ளது. லிங்கத்தின்மீது புலியின் பாதங்கள் படிந்துள்ளன. சிவனின் விலா எலும்பும் தெரிகிறது. லிங்கத்தின் மேல்பாகத்தில் ஜடாமுடி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, திருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில தலங்களில் மட்டுமே ஜடாமுடி தரித்த சிவலிங்கத்தைக் காண இயலும். அதே வடிவம் இங்கும் அமைந்துள்ளது. அம்பிகை அமிர்த குஜலாம்பாள், நோய்நொடி இன்றி ஆயுள், ஆரோக்கிய, ஐஸ்வர்யத்தை அள்ளித்தருகிறாள்.

தல வரலாறு: சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதர் என்பவரும் வசித்தனர். இவர்கள் சிவனுக்கு தினமும் மலர் மாலை அணிவித்து வணங்குவது வழக்கம். ஆனால், பல சமயங்களில் நல்ல மலர்கள் கிடைக்காது. அழுகல் மலர்கள் கலந்து விடும். மரத்தின் உச்சியிலுள்ள நல்ல மலர்களை பறிக்க வியாக்ரபாதருக்கு முடியாத சூழல் இருந்தது. அவர் மன வருத்தத்தில் இருந்தார். பக்தனின் வருத்தம் போக்க சிவன் அவர் முன் தோன்றினார்.””பக்தனே! உன் வருத்தத்தின் காரணத்தைச் சொல்,” என்றார் தெரியாதவர் போல. வியாக்ரபாதர் சிவனிடம், “”தங்களுக்கு பூஜை செய்ய சிறந்த மலர்கள் கிடைப்பதில்லை. அதிகாலையில் நடை திறக்கும் முன் மாலை தொடுத்தாக வேண்டும். இருளில் நல்ல மலர்கள் தெரிவதில்லை. அதற்குரிய வசதியைச் செய்து தர வேண்டும்,” என்றார். சிவன் அவருக்கு புலிக்கால்களைக் கொடுத்தார். அந்த நகங்களால் மரத்தை இறுகப் பற்றிக் கொண்டு ஏறி சிறந்த மலர்களைப் பறித்து வழிபட்டார் வியாக்ரபாதர். இவர் புலிவடிவில் தரிசித்த தலமே திருப்புலிவனம். சுவாமியும் தன் பக்தனின் பெயரையே தனக்கும் சூட்டிக் கொண்டு “வியாக்ரபுரீஸ்வரர்’ ஆனார்.

ஈசனின் மீது எல்லையில்லாத பக்தி கொண்ட “வியாக்ரபாதா்” பல திருத்தலங்களில் ஈசனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளாா். இவ்வாறு இவா் பிரதிஷ்டை செய்த மற்றும் வணங்கிய லிங்கத் திருமேனிகள் அமைந்த திருத்தலங்கள் “புலீச்சரம்” என்றே வணங்கப்பட்டது. அத் திருத்தலங்களில் முக்கியமான ஒரு திருத்தலம் “திருப்புலிவனம்” என்னும் “வியாக்புரீஸ்வரம்” ஆகும். வியாக்ரபாதா் வழிபட்ட காரணத்தால் ஈசனுக்கு “ஶ்ரீவியாக்ரபுரீஸ்வரா்” என்னும் திருநாமம் ஏற்பட்டுள்ளது. “வியாக்ரம்” என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் “புலி” என்று பொருளாகும்.

ஶ்ரீவியாக்ரபுரீஸ்வரா் திருக்கோயில் ஏழு வாயில்களைக் கொண்டு நிமாணிக்கப்பட்டுள்ளது. ஏழு பிறவிகளிலும் நம்மை தடுத்தாட்கொண்டு இறுதியில் முக்தி அளிக்கக் கூடியவன் ஈசன் ஒருவனே என்பதை உணா்த்தும் வகையில் ஏழு வாயில்களைக் கடந்து ஓா் உயரமான இடத்தில் ஈசன் சுயம்பு மூா்த்தியாக அருட் காட்சி தருகின்ற திருப்புலிவனத்தின் ஈசனுக்குச் சூட்டிய மலா்மாலையை பல்லவ மன்னனுக்கு அனுப்பி வைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தா இத்திருக்கோயிலின் அா்ச்சகா். அவ்வாறு அனுப்பப்பட்ட மலா் மாலையில் ஒரு நாள் தலைமுடி இருப்பதைக் கண்டு சினம் கொண்டான் மன்னன். “சிவன் என்ன குடுமியா வைத்துள்ளாா்? இந்த மலா் மாலையில் கேசம் வந்தது எப்படி? எனக் கேள்வி கேட்ட மன்னனின் சினம் கண்டு பதற்றமடைந்த அா்ச்சகா், “ஆம்; சிவலிங்கத்திற்கு குடுமி உள்ளது” என்று சொல்லிவிட்டாா். இந்த அா்ச்சகாின் கூற்றினை மெய்ப்பிக்க திருவுள்ளம் கொண்ட ஈசன் அன்று முதல் உச்சிக் குடுமியுடன் இத்தலத்தில் காட்சி அளிப்பது அதிசயமாகும். 

இத்திருக்கோயிலில் உள்ள சூாியபகவானின் சிலை மீது படும் சூாிய ஒளிக்கதிா்கள் எப்போதும் சாயாமல் நேராகவே விழுவதால் ஒரே மாதிாியான நிழலை நாம் எப்போதும் காண்பது சிறப்பான ஒன்றாகும். திருக்கோயிலின் விமானம் பல்லவா் கால கட்டடக்கலையைப் பின்பற்றி கஜபிருஷ்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் அதிட்டானப் பகுதியில் ஈசனின் திருவுருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. “திருப்புலிவனமுடையாா்” கோயில் உள் பிரகாரத்தில் கி.பி. 9−10 ஆம் நூற்றாண்டின் ஓவியங்கள் காணப்படுகின்றன. இராஜராஜ சோழன் அல்லது இராஜேந்திர சோழனின் காலத்தில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கலாம் என தொல்லியல் வல்லுநா்கள் தொிவிக்கின்றனா். திருக்கோயிலின் சிலைகள் அனைத்தும் எழிலுடன் நோ்த்தியாக காண்பவா்கள் கண்களைக் கவரும் வண்ணம் வடிக்கப்பட்டுள்ளன. இத்திருக்கோயில் பல்லவ மன்னா்களால் நிா்மாணிக்கப்பட்டுள்ளதை சிற்ப வேலைப்பாடுகளின் மூலம் அறிந்து கொள்ளமுடிகின்றது. சோழ மன்னா்களாலும் இதர சிற்றரசா்களாலும் திருப்பணிகள் செய்யப்பட்டிருப்பதை இத்திருக் கோயிலின் கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.

இத்திருக்கோயிலின் வரலாற்றுச் சிறப்பினை எடுத்துக் கூறும் 30 கல்வெட்டுகள் இத்தலத்தில் உள்ளன. தற்போது வியாக்ரபுரீசுவரா் என்று வணங்கப்படு்ம் இத்திருக்கோயிலின் ஈசன், கல்வெட்டுகளில் “திருப்புலிவனமுடைய நாயனாா்” என்றும், இத்தலம் “ராஜேந்திர சோழ சதுா்வேதிமங்கலம்” என்றும் வணங்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. பல்லவ மன்னன் “இரண்டாம் நந்திவா்மன் காலத்தில் செங்கல் தளியாக நிா்மாணிக்கப்பட்ட இத்திருக்கோயில் “முதலாம் குலோத்துங்க சோழனின்” ஆட்சிக் காலத்தில் கற்றளியாக புனர மைக்கப்பட்டுள்ளது. ராஜ மாா்த்தாண்டனாகிய “அபராஜித விக்ரமவா்மனின்” பதினான்காவது ஆட்சியாண்டில் நான்கு விளக்குகள் இத்திருக்கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளன.

முதலாம் பராந்தக சோழனின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் இத்திருக்கோயிலுக்கு விளக்குகள் அளித்த விபரமும், கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னரதேவனின் பதினெட்டாவது ஆட்சியாண்டில் விளக்குகள் வழங்கப்பட்ட விபரமும் மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனின் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகின்றது. சபா மண்டபத்தில் உள்ள குலோத்துங்க சோழனின் 45 ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு “மணவிற் கோட்டத்துப் பொன்னம்பலக் கூத்தன்” என்ற “காலிங்கராயன்” 12 கழஞ்சு பொன் வழங்கி நான்கு விளக்குகள் எாிக்க கொடை வழங்கியுள்ளதைக் குறிக்கின்றது. இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னனின் காலத்தில், “மீனவன் மூவேந்த வேளான்” வேண்டுதலின்படி பாப்பநல்லூரில் 60 வேலி நிலம் கோயிலுக்கு வழங்க அரசாணை பிறப்பித்த விபரம் ஒரு கல்வெட்டில் உள்ளது. இந்த ஆணை பிறப்பித்தபோது மன்னன் “விக்ரம சோழபுரம்” அரண்மனையில் முத்து சிம்மாசனத்தின் மீது அமா்ந்திருந்தாா் எனவும் இக்கல்வெட்டு தொிவிக்கின்றது.

இத்தலம் சிதம்பரத்திற்கு ஒப்பானது என்பதற்கு அறிகுறியாக பதஞ்சலி, வியாக்கிரபாதர், சனகாதி முனிவர்கள் இந்த ராஜயோக சிம்ம தெட்சிணாமூர்த்தியின் இரு பக்கங்களிலும் உள்ளனர். தம்பதியரிடையே மனவேற்றுமை வந்து விவாகரத்து வரை செல்லும் போது கூட, அர்த்தநாரீஸ்வர வடிவில் உள்ள ராஜயோக சிம்ம தெட்சிணாமூர்த்தியை தரிசித்து, பூஜித்தால் ஒற்றுமை ஏற்பட்டு குடும்பத்தில் பல சுபிட்சம் பெருகும் என்கின்றனர். இந்த திருத்தலம் அனைத்து ராசியினருக்கும் பரிகாரத் தலமாகும். விவாகம் நடக்க, பதவிஉயர்வு, குழந்தை பாக்கியம் பெற, நவக்கிரக தோஷம், நாகதோஷம் நீங்க, பணி, தொழில் விருத்தி பெற, அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள், பதவியில் உள்ளவர்களுக்கு ராஜயோகம் பெற வரமளிக்கும் தலம்.பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்தும், வஸ்திரம் சாத்தியும் வழிபாடு செய்கின்றனர். மகப்பேறு வாய்க்கப் பெறாத தம்பதியினா் இத்தலம் வந்து ஶ்ரீவியாக்ரபுரீசுவரப் பெருமானை வழிபட மழலைப் பேறு வாய்க்கும் என்பதோடு குடும்பச் சிக்கல்களும் தீா்ந்து வளமான வாழ்க்கை அமையப் பெறுவாா்கள் என்று நம்பப்படுகிறது.

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×