கோவளம், கைலாசநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில், சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தெற்கில், கிழக்கு கடற்கரைச் சாலையில் மாமல்லபுரம் செல்லும் வழியில் உள்ளது.
இறைவன் : கைலாசநாதர்
இறைவி : கனகவல்லி
தலச் சிறப்புகள் : இப்பகுதியில் வாழ்ந்த கடல் வணிகள் பாதுகாப்பிற்காகவும், தொழில் சிறப்பாக அமையவும் சிவனுக்குக் கட்டிய கோயில் கடல் சீற்றத்தால் மறைந்துவிட்டது. பின்னர் வந்த பல்லவ மன்னர் சிவனுக்குக் கோயில் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு சிவன் அருளால் கோயில் கட்டினார். திருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாள் சன்னதிக்குள் சென்று, தங்கள் கையாலேயே தாலி அணிவிக்கும் வித்தியாசமான வழக்கம், இக்கோயிலில் உள்ளது. திருமணமாகாத ஆண்கள், சிவன் சன்னதி எதிரேயுள்ள நந்தீஸ்வரருக்கு தாலி அணிவித்து வேண்டிக்கொள்கின்றனர். வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்த கோயில் இது. லிங்கத்தின் ஆவுடையாரில் கோயில் குறித்த செய்திக் குறிப்பை கல்வெட்டாக பொறித்துள்ளனர்.
கோயில் அமைப்பு : இங்குள்ள மண்டபத்தில் பூமாதேவியுடன் வெங்கடேசர், சூரியன், மகாலிங்கம், மகாகாளி, நாகாத்தம்மன், சுவர்ண பைரவர் உள்ளனர். தூண்களில் ராமாயண கதாபாத்திர சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயருக்கு அருள்புரிய, எமனை சிவன் காலால் உதைக்கும் சிற்பத்தை ஆயுள் அதிகரிக்க வேண்டுகின்றனர். பிரகாரத்தில் குபேர கணபதி வடக்கு குபேரதிசை நோக்கி காட்சியளிக்கிறார். மற்றொரு சன்னதியில் விஜய கணபதி இருக்கிறார். தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், தொழிலில் வெற்றியடைவும் இவரை வேண்டுகின்றனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் சிவசக்தி கணபதி இருக்கிறார். விநாயகர் சதுர்த்தியன்று மூவருக்கும் விசேஷ பூஜை நடக்கும். இந்நாளில் இவர்களை வழிபட்டு வர குடும்பத்தில் ஐஸ்வர்யம் கிடைக்கும். திருச்சுற்றில் குபேர கணபதி வடக்கு நோக்கிய நிலையில் காணப்படுகிறார். விஜய கணபதி மற்றொரு சன்னதியில் உள்ளார். மூலவர் கோஷ்டத்தில் சிவ கணபதி உள்ளார். பூமாதேவியுடன் வெங்கடேசர், சூரியன், மகாலிங்கம், மகாகாளி, நாகாத்தம்மன், சுவர்ண பைரவர் ஆகியோர் உள்ளனர். தூண்களில் ராமாயணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆவுடையாரில் கோயில் குறித்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தலத்து அம்பிகை பொன்னைப்போல மின்னுபவளாகவும், தம்மை வழிபடும் பக்தர்களுக்கு பொன் போன்ற வாழ்க்கையைத் தருபவளாகவும் அருளுவதால் கனகவல்லி என்ற பெயரில் அருளுகிறாள். திருமணமாகாத பெண்கள் மாங்கல்ய பாக்கியம் கிடைக்க இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இந்த வழிபாட்டைச் செய்யும் பெண்கள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை அணிவித்த பின்பு, அம்பாள் சன்னதிக்குள் சென்று, தாலி அணிவித்து நல்ல மணமகன் அமைய வேண்டுமென பிரார்த்திக்கின்றனர்.
திருமணமாகாத ஆண்கள், சிவன் சன்னதி எதிரேயுள்ள நந்தீஸ்வரருக்கு தாலி அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர். செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சுவாமி சன்னதி கோஷ்டத்தில் சத்தியநாராயணர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார். பவுர்ணமி நாட்களில் இவருக்கு சுமங்கலி பூஜை நடக்கும். பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருக்க இவ்வேளையில் சத்யநாராயணரை வழிபடுகிறார்கள்.
தல வரலாறு : இப்பகுதியில் வசித்த கடல் வணிகர்கள் பயணத்தின்போது பாதுகாப்பாக இருக்கவும், தொழில் சிறக்கவும் சிவபெருமானுக்கு ஒரு கோயில் எழுப்பினர். காலப்போக்கில் கடல் சீற்றத்தால் கோயில் மறைந்துவிட்டது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த சிவபக்தனான பல்லவ மன்னன், சிவனுக்கு கோயில் எழுப்பும் ஆயத்தப்பணிகளை துவங்கினான். அவனது கனவில் தோன்றிய சிவன், அழிந்து போன கோயிலின் லிங்கம் ஓரிடத்தில் மறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். மன்னன் லிங்கத்தைக் கண்டெடுத்து கோயில் எழுப்பி அங்கு பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு கைலாசநாதர் என பெயர் ஏற்பட்டது.
சிவராத்திரி, கார்த்திகை, பிரதோஷம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. பௌர்ணமி நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிசேகங்கள் நடைபெறும். திருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாள் சன்னதிக்குள் சென்று, தங்கள் கையாலேயே தாலி அணிவிக்கும் வித்தியாசமான வழக்கம், இங்குள்ளது. முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், பிதுர்தோஷ நிவர்த்திக்காக அமாவாசையன்று கடலில் நீராடி சுவாமியை வழிபடுகிறார்கள். பவுர்ணமி நாட்களில் சிவன், அம்பிகைக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். புரட்டாசி மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது மேலும் சிறப்பு.
காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : தாம்பரம், செங்கல்பட்டு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு