அரசன் கழனி, கல்யாண பசுபதீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு அருகில் பள்ளிக்கரணை அருகே அரசன் கழனி பகுதியில் பெரியநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது
இறைவன்: கல்யாண பசுபதீஸ்வரர்
இறைவி : பெரியநாயகி
தல விருட்சம் : நாகலிங்க மரம்
தல தீர்த்தம் : அகத்தியர் தீர்த்தம்
தலச் சிறப்புகள் : அகத்திய முனிவர் பூஜை செய்த தலம.ஐந்து கோடியே ஐந்து லட்சம் சிவநாமம் பொறிக்க பட்ட குபேரலிங்கம் உள்ளது. கோவில் குளத்தில் அர்ச்சனை செய்து குளித்தால் திருமண தடை நீங்கும்.
அரசன் கழனி பழைய கிராமத்தில் குளத்தின் நடுவில் அமைந்த நிலப்பரப்பில் சிவலிங்க திருமேனி, நந்தி தேவர் சிதிலம் அடைந்து கோவில் கட்டிடம் இன்றி இருந்ததது. குளகரையின் மீது ஆதிகால தூண்கள் உள்ளன. அருகில் ஒஹத மலையில் கார்த்திகை தீபத்தன்று இப்பகுதி மக்கள் தீபம் ஏற்றி வந்து உள்ளனர். பிரதி மாதம் தோறும் பௌர்ணமி அன்று தீபம் ஏற்றி கிரிவல வழிபாடு நடைபெற்று வருகிறது. 2012 ம் ஆண்டு சிவலிங்கமும், நந்தி சிலையும் நிறுவப்பட்டது. பிறகு பெரியநாயகிக்கு சன்னதி அமைக்கப்பட்டது. சில ஆண்டுகள் முன்பு நாகேஸ்வரர் மற்றும் சண்டிகேஸ்வரர்க்கு சன்னதி கட்டப்பட்டுள்ளது. பௌர்ணமி, பிரதோஷம், அன்னாபிஷேகம், திருவாதிரை, திருக்கார்த்திகை போன்ற உற்சவங்கள் நடைபெறுகின்றன.
காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : தாம்பரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு