திம்மராஜம்பேட்டை





	


	



























	




 




	








 




3:29:33 AM         Wednesday, April 22, 2026

திம்மராஜம்பேட்டை

திம்மராஜம்பேட்டை
திம்மராஜம்பேட்டை திம்மராஜம்பேட்டை திம்மராஜம்பேட்டை திம்மராஜம்பேட்டை திம்மராஜம்பேட்டை திம்மராஜம்பேட்டை திம்மராஜம்பேட்டை திம்மராஜம்பேட்டை திம்மராஜம்பேட்டை திம்மராஜம்பேட்டை திம்மராஜம்பேட்டை
Product Code: திம்மராஜம்பேட்டை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                     திம்மராஜ பேட்டை, இராமலிங்கேஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில்  திம்மராஜம்பேட்டை என்னுமிடத்தில் உள்ளது.

இறைவன் : இராமலிங்கேஸ்வரர்

இறைவி :  பர்வத வர்தினி

தல விருட்சம் :  வில்வ மரம்

தலச் சிறப்புகள் : மாசி மாத பௌர்ணமி அன்று மூலவர் மீது சூரிய ஒளி படும். பித்ருகடன் செய்ய தவறியவர்கள் இங்கு, அதற்கான தர்ப்பனங்கள் செய்வது சிறப்பு. மேலும், காஞ்சி மாநகருக்கு வெளியே உள்ள கோவில்களில் தனி கொடிமரத்துடன் விளங்கும் சிவ ஆலயம் இது. பித்ருகடன் செலுத்தப்படுவதால், வட இராமேஸ்வரம் என அழைக்கப்படுகிறது. 

தல வரலாறு : 17ம் நூற்றாண்டு இப்பகுதியில் வாழந்த போஜராஜன் என்பவர் கோவிலை கட்டி உள்ளார். வணிக வரி செலுத்துவதற்காக கோவிலை, இப்பகுதியை ஆண்ட திம்மராஜ அரசனிடம் குத்தகைக்கு விடுத்தார். இப்பகுதியை சுற்றி திம்மம்பேட்டை, நாயக்கன்பேட்டை, நத்தப்பேட்டை, ஏகானாம்பேட்டை, ஜயம்பேட்டை என 18 பேட்டை கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த பேட்டை கிராமங்களுக்கு, தலைநகரமாக திம்மராஜம் பேட்டை விளங்கியது. மேலும், இப்பகுதியை ஆண்ட அரசன் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள முருகப்பெருமானை தனி சிறப்பாக வணணங்கியுள்ளான. இதனால், வெறு எந்த கோவிலிலும் இல்லாத வகையில் இங்கு முருகபபெருமானுக்கு பெரிய பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பு. மேலும், கந்தசஷ்டியின் போது இக்கோவில், சூரசம்ஹாரம் நடைபெற்றுள்ளது. தற்போது கோவிலுக்கு போதிய நிதி வசதி இல்லாததால், சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறவது இல்லை.

கோயில் அமைப்பு : மூன்று நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மரம், நந்தி காணப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு வெளியே காணப்படுகின்ற கோயில்களில் கொடி மரத்துடன் உள்ள கோயிலாகும். மூலவர் சன்னதியின், வலப்புறத்தில் உற்சவர் பிரகாரம். இடப்பறத்தில் ஜயப்ப சுவாமி பிரகாரம்.அதன் அருகில் வள்ளி, தெய்வயானை சமேத திருத்தனி முருகன் சன்னதி. நவராத்தி மண்டபம். கொடி மரத்திற்கு அருகில் வசந்தமண்டபம். அருகில் நவக்கிரக சன்னதி ஆகிய பிராகரங்களுடன் அமைந்துள்ளது. வேறு எங்கும் இல்லாத வகையில் முருகன் சன்னதிக்கு தனி திருச்சுற்று அமைக்கப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போஜராஜன் கோயிலைக் கட்டினார். வரி செலுத்துவதற்காக குத்தகைக்கு திம்மராஜ மன்னனிடம் விட்டார்.இப்பகுதியைச் சுற்றி திம்மம்பேட்டை, நாயக்கன்பேட்டை, நத்தப்பேட்டை, ஏகனாம்பேட்டை, ஐயம்பேட்டை ஆகிய 18 பேட்டைகள் காணப்படுகின்றன. இவற்றிற்குத் தலைநகராக திம்மராஜம்பேட்டை விளங்கியுள்ளது.

மாசி மகம், கந்த சஷ்டி, நவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன. ஆடிமுதல் வெள்ளி விளக்கு பூஜை.திருமண தடை நீங்கும், பிரதோஷகால வழிபாடு சிறப்பு வாய்ந்தது. பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியவுடன் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

காலை 7.00 மணி முதல்10.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×