மங்களேஸ்வரர்





	


	



























	




 




	








 




8:48:29 PM         Tuesday, April 21, 2026

மங்களேஸ்வரர்

மங்களேஸ்வரர்
மங்களேஸ்வரர் மங்களேஸ்வரர்
Product Code: மங்களேஸ்வரர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                    காஞ்சிபுரம், மங்களேசுவரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியில் உள்ள கங்கைகொண்டான் மண்டபம்  நகரப் பேருந்து நிறுத்தத்தருகே காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலின் தென்கிழக்கில் மங்களேசுவரர் கோயில் அமைந்துள்ளது.  சென்னையிலிருந்து 75 கி.மீ தொலைவிலும், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தொலைவிலும் இத்தலம் உள்ளது. 

இறைவன் : மங்களேசுவரர் 

இறைவி :  மங்களாம்பிகா

தல தீர்த்தம்  :   மங்கள தீர்த்தம்

 

தலச் சிறப்புகள் : காமாட்சி தேவியின் தோழியான 'மங்களை' என்பவள் வழிபட்ட தலமாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது. மங்களேஸ்வரர் கோயிலின் பின்புறமுள்ள வேப்பமரத்தடியில், செவ்வாய்க்கிழமைதோறும் காஞ்சிப் பெரியவர் தவம் செய்வது வழக்கம். இக்கோயிலின் மங்கள தீர்த்தத்தில் நீராடி மகிழ்வதுமுண்டு என்று உள்ளூர் வாசிகள் மூலம் அறியப்பட்டது.

தல வரலாறு :  திருமணத்தின்போது, மணமகள் பார்வதிக்கு பணிவிடை செய்ய தேவலோகத்திலிருந்து வந்தவள்தான் மங்களாம்பிகா. தேவிக்கு தோழியாக இருந்து சகல உதவிகளையும் செய்து வந்தாள். திருமணம் முடிந்தபின், சிவபூசை செய்ய விரும்பினால் மங்களாம்பிகா. அதற்காகவே சிவலிங்கம் ஒன்றையும், தீர்த்தம் ஒன்றையும் உருவாக்கினாள். அதன்படி தினமும் சிவனுக்கு அபிசேகம் செய்து வழிப்பட்டாள். சிவன் அவளின் பூசையை ஏற்று மோட்ச சக்தியை அருளினார். மங்களாம்பிகா வழிபட்டமையால் இச்சுவாமிக்கு மங்களேஸ்வரர் எனும் திருநாமம் விளங்கிற்று. 

சிவலோகத்தில் ஒருமுறை சிவனின் கண்களை பார்வதி தேவி விளையாட்டாக பொத்தினாள். அண்டசராசரமும் இருளில் மூழ்க சினங்கொண்ட சிவபெருமான், நீ பூலோகத்தில் பிறப்பாயாக என பார்வதி தேவிக்கு சாபமிட்டார். பார்வதிதேவி தன் தவறையுனர்ந்து வருந்தி இறைவனாகிய தாங்களை மீண்டுமடைவது எவ்வாறேனக் கேட்க; நீ காஞ்சியில் தவமிருந்து கயிலையை அடைவாயாக! என சிவன் அருள்புரிய, அவ்வாறே பார்வதியும் பூலோகத்தில் பிறந்து, காஞ்சி கம்பா நதிக்கரையை (தற்போது மஞ்சநீர் கால்வாய்) அடைந்து மணலால் லிங்கம் அமைத்து பூசை செய்தாள், அந்நாள் ஆற்றில் வெள்ளம் வரவே சிவலிங்கத்தை காப்பாற்ற எண்ணிய பார்வதி தேவி, தன்னிரு கைகாளாலும் அணைத்துக்கொண்டாள். வெள்ளத்திலிருந்து தன்னை காக்க அன்புள்ளங்கொண்ட தேவியின் முன் சிவனார் தோன்றி அருள்பாலித்தார், அவ்விடத்திலேயே தங்கும்படி தேவி கேட்க ஏகாம்பரநாதர் பெயரில் தங்கி பார்வதி தேவியை திருமணம் முடித்துக் கொண்டார்.

திருமணத் தடையுள்ளவர்கள், இத்தல இறைவரான மங்களேஸ்வரரை வழிப்பட்டால் தக்க வாழ்க்கைத்துணை அமையுமென்பது தொன்னம்பிக்கை. இக்கோயில் இறைவர்க்கும், இறைவிக்கும் திருமுழுக்கு வழிபாடு செய்து, புத்தாடையுடுத்தி நேர்த்திக்கடன் செலுத்துவதாக அறியப்படுகிறது.

காலை 5.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×