கோனேரிக்குப்பம்





	


	



























	




 




	








 




12:19:03 AM         Wednesday, April 22, 2026

கோனேரிக்குப்பம்

கோனேரிக்குப்பம்
கோனேரிக்குப்பம் கோனேரிக்குப்பம் கோனேரிக்குப்பம் கோனேரிக்குப்பம் கோனேரிக்குப்பம் கோனேரிக்குப்பம் கோனேரிக்குப்பம்
Product Code: கோனேரிக்குப்பம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                             கோனேரிக்குப்பம், வீரட்டானேசுவரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோனேரிக்குப்பம் என்னுமிடத்தில் அப்பாராவ் தெருவில் அமைந்துள்ளது.  காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கே சுமார் 1 கி.மீ தொலைவிலும்,  கோனேரிக்குப்பம் ரெயில் கேட்டுக்கு முன்னால்  தாமல்வார் தெருவும், அப்பாராவ் தெருவும் இணையும் இடமே திருக்கோவில் அமைவிடமாகும்.

இறைவன் : வீரட்டானேசுவரர்

தலச் சிறப்புகள் : இக்கோயிலின் மூலவர் மேற்கு நோக்கிய நிலையில் உள்ளார். அவருக்கு எதிரில் சாக்கிய நாயனார் கையில் கல்லுடன் காணப்படுகிறார். லிங்கத்திருமேனி மீது கல்லை எறிந்த அடையாளமாக பாணத்தில் புள்ளி காணப்படுகிறது. இவரே சாக்கியரால் கல்லடி பட்டவராக இருக்கக்கூடும் என்கிறார்கள். இவரின் எதிரே விநாயகருக்கு அருகில் வெகு எளிய உருவில் அழகிய சிலையாகச் சாக்கிய நாயனார் தன் கைகளில் பெரிய கல்லைப் பிடித்துக் கொண்டு, அதை இறைவன் மீது எறியும் கோலத்தில் இருக்கிறார். 

தல வரலாறு : மூன்று அசுரர்கள் என்ற நிலையில் இக்கோயிலைப் பற்றி வரலாறு கூறப்படுகிறது. கடும் தவமிருந்து வரம் பெற்ற மூன்று அசுரர்கள் தம்மைத் தாமே அழித்துக்கொண்டதாக வரலாறு. இது தவிர சாக்கிய நாயனார், கொங்கணச்சித்தர் ஆகிய இருவரோடும் தொடர்புடையது இத்தலமாகும். காஞ்சிபுரத்தின் அருகேயுள்ள திருச்சங்கமங்கையில் பிறந்த சாக்கிய நாயனார் இறைவன்மீது கல்லெறிந்து இறைவனை வணங்கிய தலமாகும். ஞானத்தைத் தேடிய அவர் பௌத்த சமயத்தில் சார்ந்திருந்தார். பின்னர் ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருந்தபோது இங்கு வந்தார். லிங்கத்தின் அருகே அமர்ந்தார். இறைவனை அர்ச்சிக்க பூவைத்தேடினார். கிடைக்காததால் அருகேயிருந்த கற்களை எடுத்து இறைவன்மீது வீசினார். ஒவ்வொரு முறையும் இறைவன்மீது எறியும்போதும் தன்னுள் ஏதோ உயர்வு ஏற்படுவதை உணர்ந்தார். ஒரு நாள் அவ்வாறாக கல்லில் பூசை செய்ய மறந்துவிட்டார். இறைவனும் அவருக்காகக் காத்திருந்தார். இறைவனிடம் தன் வருத்தத்தைத் தெரிவித்துவிட்டு தொடர்ந்து கல்லை எறிந்து பூசித்தார். அவர் மீது கருணை கொண்ட இறைவன் தேவியுடன் அவருக்குக் காட்சி தந்தார்.

இத்தலத்து இறைவனை, திருமால் வழிபட்டு தனது பச்சை நிறம் நீங்கிப் பவள நிறம் பெற்றார் என்று காஞ்சிப்புராணம் கூறுகிறது. பல்வேறு சித்தர்களும், முனிவர்களும் இங்குள்ள இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கொங்கண முனிவர். இறைவனின் திருமேனி புகழை உணர்த்த நினைத்த கொங்கண முனிவர், இறைவனையே சோதிக்க நினைத்தார். கொங்கண முனிவரிடம், ஒரு பொருளை எதன் மீது வைத்தாலும், அதனை நீராக்கிவிடும் சக்தி கொண்ட குளிகை இருந்தது. அதனை சிவலிங்கத்தின் மீது வைத்து சோதித்தார். அக்குளிகை நீராக மாறுவதற்குப் பதிலாக, சிவலிங்கம் அதனை உள்ளே இழுத்துக் கொண்டது. இதனைக் கண்டு வியப்புற்ற கொங்கண முனிவர், சிவலிங்கத்தின் பெருமையைப் புரிந்து கொண்டு அங்கேயே தங்கி தவம் செய்து பேறு பெற்றார். இப்படிப் பல்வேறு பெருமைகளின் இருப்பிடமாகத் திகழ்வது வீரட்டானேசுவரர் திருக்கோவில் ஆகும். தொண்டைவள நாட்டிலுள்ள, திருச்சங்கமங்கை என்ற ஊரில், வேளாளர் குளத்தில் உதித்த சாக்கியர், காஞ்சீபுரம் சென்று ஞானம் பெறுவதற்குரிய வழிகள் பலவற்றையும் ஆராய்ந்தார். முடிவில் சாக்கிய சமயம் எனப்படும் புத்த மதத்தில் சேர்ந்தார். என்றாலும், அதில் அவர் மனம் அமைதி பெறவில்லை. செய்வினை, செய்பவன், வினையின் பயன், அதனைக் கொடுப்பவன் என்ற நான்கையும் ஏற்றுக் கொள்கின்ற இயல்பு சைவம் ஒன்றுக்கே உள்ளது என்பதை உணர்ந்தார்.

கோவில் அமைப்பு : பழமையும் பெருமையும் வாய்ந்த இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. தெற்கு நோக்கிய சிறிய வாசலும் பழுதடைந்த கதவுகளும், நம்மை வரவேற்கின்றது. உள்ளே நுழைந்ததும், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கற்சிற்பங்கள் உடைந்த நிலையில் கீழே கிடக்கின்றன. சற்றுத் தள்ளியதும் எளிய வடிவில் இறைவன் கருவறை அமைந்துள்ளது. இடதுபுறம் விநாயகர், அருகில் நந்திதேவர், பலிபீடம் அடுத்து இரு ஜோடி லிங்கங்கள் மேற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றன. அவற்றினிடையே இரண்டு ஜோடி பாதங்கள் கருங்கற்களில் வடிக்கப்பட்டுள்ளன. இவை நடராஜர், சிவகாமி அம்மையின் திருவடிகள் எனக் கூறப்படுகிறது. இதேபோல், மற்ற தெய்வங்களான சூரியன், பைரவர் ஆகியோரின் பாதங்கள் இருந்ததாகவும் கூறுகிறார்கள். இப்பாதங்களை ஒட்டி, அழகிய கருங்கல் சிற்பத்தில் சிவன்  பார்வதியின் அழகிய திருக்கோலம் காணப்படுகிறது.

ஆலயத்தின் வெளிப்புறம் உயரமான கல்மேடையில் சிறிய வடிவில் நந்தி தேவர் இறைவனை நோக்கிக் காட்சி தருகிறார். நந்திதேவரின் பின்னால் சற்று தொலைவில் ஏகாம்பரேஸ்வரர் கோபுர தரிசனத்தைக் காண முடிகிறது. எண்ணற்ற பெருமைகள் கொண்ட இத்திருக்கோவில், இன்று சிறிய கருவறை மட்டுமே பழம்பெரும் ஆலயம் என்பதற்குச் சாட்சி கூறுகின்றது. இந்த ஆலயத்தில் பவுர்ணமி மற்றும் பிரதோஷ விழா எளிய முறையில் நடந்து வருகின்றது. ஒரு கால பூஜை மட்டுமே நடைபெற்று வருகிறது.

காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம், கோனேரிக்குப்பம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×