சின்ன காஞ்சிபுரம்





	


	



























	




 




	








 




12:39:09 PM         Friday, April 17, 2026

சின்ன காஞ்சிபுரம்

சின்ன காஞ்சிபுரம்
சின்ன காஞ்சிபுரம் சின்ன காஞ்சிபுரம் சின்ன காஞ்சிபுரம் சின்ன காஞ்சிபுரம் சின்ன காஞ்சிபுரம் சின்ன காஞ்சிபுரம் சின்ன காஞ்சிபுரம் சின்ன காஞ்சிபுரம்
Product Code: சின்ன காஞ்சிபுரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                  சின்ன காஞ்சிபுரம், பிரம்மபுரீஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரத்தில் வரதராஜபெருமாள் ஸ்வாமி கோயிலில் இருந்து 2கி.மீ. தொலைவில், தென்கிழக்கே வேகவதி ஆற்றுக்கும் பாலாற்றுக்கும் இடையில்  தேனம்பாக்கத்தில் அமைந்துள்ளது.

இறைவன் :  பிரம்மபுரீஸ்வரர்

தல தீர்த்தம் :  பிரம்ம தீர்த்தம்

தலச் சிறப்புகள் : சிவன் சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் நடுவில் முருகன் சந்நிதி அமைந்திருந்தால், அதை சோமாஸ்கந்த அமைப்பு கோயில் என சொல்வதுண்டு. பிரம்மபுரீஸ்வரர் கோயிலில், சிவனுக்கும் பார்வதிக்கும் இடையில் விநாயகர் வீற்றிருப்பது வேறெங்கும் காணமுடியாத தனிச்சிறப்பு. இந்த அமைப்புள்ள தலத்தை சோமகணபதி கோயில் என்கின்றனர். மூலவர் பிரம்மபுரீஸ்வரர் கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார்.

கோவில் அமைப்பு : சுவாமியின் பின்புறச் சுவரில் ஆதிசங்கரரும், சோமகணபதியும் உள்ளனர். இவரை வழிபட்டால் மகப்பேறு விரைவில் வாய்க்கும். சோமகணபதி சிற்பத்தை உற்றுநோக்கினால் மட்டுமே தரிசிக்க முடியும். இதை தெளிவாகத் தெரியச் செய்ய பக்தர்கள் முயற்சி எடுக்க வேண்டும். இதனால், ஒரு அரிய ஆன்மிகச்சிற்பம் பாதுகாக்கப்படும். உலக நன்மை கருதி, காஞ்சிப்பெரியவர் பலமுறை இங்கு தவம் செய்திருக்கிறார். கோயிலின் தென்புறத்தில் அவருக்கு சந்நிதி உள்ளது. ஆனந்த தட்சிணாமூர்த்தி, சந்திரசேகர கணபதி, சுவாமிநாத சுவாமி, துர்க்கை, ஆஞ்சநேயர், பைரவர், நவக்கிரக சந்நிதிகள் இங்குள்ளன. இங்கு ஆதிசங்கரரின் செப்புத்திருமேனி உள்ளது. பிரகாரத்தில் இவரின் திருப்பாதம் உள்ளது.

மஹா பெரியவாள் முயற்சியால் அது ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டு இன்று அற்புதமாக இருக்கிறது. பிரம்மபுரீஸ்வரர் சிவலிங்கத்தின் பின்னே சுவற்றில் சிவன், பார்வதி, கணேசன் சிலாரூபமாக வடிக்கப்பட்டுள்ள கோவில். அம்பாள் இங்கேயும் காமாட்சி தான். காஞ்சி எல்லை வரையில், காமாட்சியைத் தவிர வேறு அம்பாளே கிடையாதே . இங்குள்ள தக்ஷிணாமூர்த்தி விகிரஹத்தில் முகத்தில் புன்னகை அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கிறது. மஹா பெரியவா ஸ்தாபித்த ''சந்திரசேகர கணபதி''சந்நிதி உள்ளது. இந்த பழைய கோவில் மற்ற பழங்கோயில்களைப்போல கஜப்ருஷ்ட விமானம் வடிவம் கொண்டது. ஒரு சிறு பத்துக்கு பத்து அறையில் இங்கே மகா பெரியவா ஒரு வருஷம் போல் தவம் இருந்தார். ஒருநாள் கூட வெளியே வரவில்லை. அவர் அறையை ஒட்டி ஒரு சிறு கிணறு. ''இது தான் என் இடம்'' என்று அவரே சொன்னது. 

தல வரலாறு: சிவனின் இடப்பாகத்தில் தோன்றிய திருமால், தன் உந்திக்கமலத்தில் (தொப்புளில் இருந்து தோன்றிய தாமரை) இருந்து பிரம்மாவைப் படைத்தார். பிரம்மா சிவனிடம், தனக்கு உலக உயிர்களைப் படைக்கும் ஆற்றலை வழங்கும்படி வேண்டினார். சிவன் அவரிடம், பூலோகத்தில் உள்ள புண்ணியத்தலமான காஞ்சிபுரம் சென்று, தன்னை நினைத்து தவமிருக்கும்படியும், மனம் ஒன்றி செய்யும் தவம் வெற்றி பெற்றால், அங்கே தோன்றி, படைப்பாற்றலை தருவதாகவும் வரமளித்தார். பிரம்மாவும் அங்கு சென்று சிவ தியானத்தை ஆரம்பித்தார். அத்துடன், சிவனுக்குரிய சோமயாகம் நடத்த விரும்பினார். யாகம் நடத்துபவர்கள் மனைவியுடன் சேர்ந்து செய்தால் தான், அதற்குரிய பலன் கிடைக்கும். ஆனால், யாகம் தொடங்கிய காலத்தில், பிரம்மாவின் மனைவி சரஸ்வதி கருத்து வேறுபாடு காரணமாக பங்கேற்கவில்லை. அதனால், காயத்ரி, சாவித்திரி என்ற தேவியரை தோற்றுவித்து, யாகத்தைத் தொடங்கினார். இதையறிந்த சரஸ்வதி, ஒரு நதியாக உருவெடுத்து யாக குண்டத்தை அழிக்க முற்பட்டாள். அதிலிருந்து தன்னைக் காக்க பிரம்மா, சிவனை வேண்டினார். சிவனின் ஆணைப்படி திருமால் அந்த நதியின் குறுக்கே அணையாகப் படுத்தார். பின் தன் தவறை உணர்ந்த சரஸ்வதி பிரம்மாவைப் பணிந்தாள். பின், பிரம்மா யாகத்தை நிறைவேற்றினார். அவருக்கு காட்சியளித்த சிவன், உலகத்தைப் படைக்கும் வரத்தை பிரம்மனுக்கு அருள்புரிந்தார். அப்போது பிரம்மா சிவனிடம், தான் தவமிருந்த இடத்தை ஆஸ்தான தலமாக ஏற்று அருளும்படி வேண்டினார். சிவனும், அதை ஏற்று லிங்கத்துக்குள் ஐக்கியமானார். சிவனின் ஆஸ்தான தலம் என்பதால் இக்கோயில் சிவாஸ்தானம் எனப்படுகிறது. பிரம்மன் வணங்கிய சிவன் என்பதால், சுவாமிக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற பெயர் வந்தது.

முன்வினைப் பாவம் நீங்கவும், விருப்பங்கள் நிறைவேறவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். சுவாமிக்கும் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், சிவராத்திரி உள்ளிட்ட விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. 

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம் 

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×