15.பச்சோந்தி விநாயகர்- தமிழ்நாடு





	


	



























	




 




	








 




4:31:10 PM         Wednesday, April 29, 2026

15.பச்சோந்தி விநாயகர்- தமிழ்நாடு

15.பச்சோந்தி விநாயகர்- தமிழ்நாடு
15.பச்சோந்தி விநாயகர்- தமிழ்நாடு 15.பச்சோந்தி விநாயகர்- தமிழ்நாடு 15.பச்சோந்தி விநாயகர்- தமிழ்நாடு 15.பச்சோந்தி விநாயகர்- தமிழ்நாடு 15.பச்சோந்தி விநாயகர்- தமிழ்நாடு 15.பச்சோந்தி விநாயகர்- தமிழ்நாடு 15.பச்சோந்தி விநாயகர்- தமிழ்நாடு 15.பச்சோந்தி விநாயகர்- தமிழ்நாடு
Product Code: 15.பச்சோந்தி விநாயகர்- தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

மசான மூர்த்தி மகா தேவர் திருக்கோயில்

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில்  கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் மசான மூர்த்தி மகா தேவர் திருக்கோயில் உள்ளது. கேரளபுரம் மகாதேவர் ஆலயத்தில் உள்ள நிறம் மாறும் அதிசய விநாயகர் சிலை ஒன்று உள்ளது.

மூலவர் : மசான மூர்த்தி மகா தேவர்

தல விருட்சம் : ஆலமரம் 

தல சிறப்பு:  மகாதேவர் கோயிலில் அருளும் விநாயகர் ஆவணி முதல் தை மாதம் வரை வெள்ளை நிறத்துடனும், மாசி முதல் ஆடி வரை கறுப்பு நிற மேனியராகவும் காட்சி தருவார். நிறம் மாறுவதால் இவரை, பச்சோந்தி விநாயகர் என்ற பெயரில் வழிபடுகின்றனர். இவரை வெறும் கண்ணால் பார்த்தால் கண்கள் கூசும். விநாயகர் நிறம் மாறும் இந்த காலகட்டத்தில், அங்குள்ள கிணற்று தண்ணீரும் மாற்றமடைவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். விநாயகர் கறுப்பாக இருக்கும் போது, தண்ணீர் கலங்கலாக சுவை இழந்தும், விநாயகர் வெள்ளையாக இருக்கும் போது, கிணற்றின் தரை பகுதி வரை தெரிவதுடன் தண்ணீரும் சுவையாக இருக்கும் என கூறுகின்றனர். இதனால்  இந்த பகுதி மக்கள் இந்த விநாயகரை அதிசய விநாயகர் என அழைக்கின்றனர்.

தலபெருமை:  இங்கு 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவன் கோவில் உள்ளது. மூலவர் சுயம்பு அல்ல.இந்த கோவிலை சுற்றி பல்வேறு பதிவார தெய்வங்கள் உள்ளன. அவ்வாறு பதிவார தெய்வமாக விளங்கும் இரண்டரை அடி உயரமுள்ள விநாயகர் சிலை ஒன்றை, அதிசய விநாயகராக அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். 

கேரளபுரம் மகாதேவர் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு விமான மண்டபம் இல்லை. உட் கோயில் வட்ட வடிவேல் இருக்கும். கேரளா கட்டட அமைப்பை சார்ந்தது.நந்தி மண்டபம் திராவிட சிற்ப கலையை பின்பற்றி கட்டியுள்ளனர்.  நாலம்பலம், மடைப்பள்ளி,  ரிஷப மண்டபம், ஆகியவை இருக்கின்றன.நவநீத கிருஷ்ண கோயில் ஒன்றும் இருக்கின்றன வெயில், மழை இரண்டுமே விநாயகர் சிலை மீது விழும். இவர் தட்சிணாயத்தில் வெள்ளை நிறமாகவும், உத்தராயணத்தில் கறுப்பு நிறமாகவும் காட்சி அளிப்பார். இந்த சிலை சந்திர காந்தக் கல்லினால் செதுக்கப்பட்டுள்ளது. இதனால் வெயிலில் ஒரு நிறமாகவும், மற்ற நேரங்களில் வேறு ஒரு நிறமாகவும் இருக்கும். இங்குள்ள விநாயகரை வழிபட வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.  இங்குள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், தேங்காய் உடைத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

மேற்கூரை இல்லாமல் அரசமரத்தடியில் அமர்ந்து இருக்கும் இந்தப் பிள்ளையாரை தரிசிக்க வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் தினமும் வந்து தரிசித்து பேறு பெறுகிறார்கள். முதல் ஆறு மாதம் வெள்ளை நிறமாக இருக்கும் விநாயகர் திருமேனியில் ஆடி மாத ஆரம்பத்தில் கறுப்புப் புள்ளிகள் ஏற்படுகின்றன. பிறகு, தொடர்ந்து சிறிது சிறிதாக கறுப்பு நிறம் சூடுகிறார். இந்த அதிசய விநாயகரை ஆய்வு செய்த புவியியல் துறை நிபுணர்கள், திருமேனி உருவாக்கப்பட்ட கல் இந்திர காந்தம் என்னும் அபூர்வ வகையைச் சார்ந்தது என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
தல வரலாறு:  வீரகேரளவர்மா என்ற மன்னர், ராமநாதபுரம் மன்னரைக் காண்பதற்காக ராமேஸ்வரம் சென்றார். அங்கு அக்னி தீர்த்தத்தில் நீராடியபோது, அவர் காலில் ஒரு சிறியகல் இடறியது. அந்தக் கல்லை எடுத்துப் பார்த்தபோது, அது பிள்ளையார் வடிவத்தில் இருப்பதைக் கண்டு வியந்தார். ராமநாதபுரம் மன்னரைச் சந்தித்த வீர கேரளவர்மா, தான் நீராடியபோது கண்டெடுத்த கல்லை அவரிடம் காட்டினான். இது பிள்ளையார் போல்தான் தெரிகிறது. நீங்கள் இதை உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள், இது என் பரிசாக இருக்கட்டும் என்றார். கேரளபுரம் வந்த வீர கேரள வர்மா, தற்போது உள்ள இடத்தில் அந்தப் பிள்ளையார் உருவம் கொண்ட திருமேனியைத் திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்து அங்கு ஓர் அரச மரக் கன்றினையும் நட்டு வைத்துப் பராமரித்தார். நாளடைவில் அரசமரம் வளர்ந்து கொண்டே வந்தது. அத்துடன் சிறிய அளவிலிருந்த விநாயகரும் வளர்ந்து கொண்டே வந்தார். ஆரம்ப காலத்தில் ஆறு அங்குலம் அளவு இருந்த விநாயகர், தற்போது பதினெட்டு அங்குலம் வளர்ந்து கம்பீரமாகத் திகழ்கிறார்.

தரிசன நேரம் :  காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
 

அருகிலுள்ள விமான நிலையம் :  திருவனந்தபுரம்  ( 55 )

அருகிலுள்ள ரயில் நிலையம் : தக்கலை ( 4 )

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×