மேல்விஷாரம், வால்மீகீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் ஆற்காட்டில் இருந்து வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 7 கி.மீ தொலைவில் வலதுபுறமாக இக்கோவில் உள்ளது. வேப்பூரிலிருந்து தென்கரையில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : வால்மீகீஸ்வரர்
இறைவி : வடிவுடையம்மை
தல விருட்சம் : எட்டிமரம்
தல தீர்த்தம் : அக்னி தரீதம்
தல சிறப்புகள் : வால்மீகி முனிவர் இந்த எட்டிமரக்காட்டில் வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதனால் ஈசன் வால்மீகீஸ்வரர் என்று வணங்கப்படுகிறார். இங்கு வடிவுடையம்மை சமேத வால்மீகிஸ்வரர் காட்சியளின்றனர். வால்மீகி முனிவர் நின்ற நிலையில் சிவனை நோக்கிய சிலை உள்ளது.
தல வரலாறு : வேலூர் மாவட்டத்தில் உள்ள ஷடாரண்ய ஷேத்திரங்கள் மிக முக்கியமானவையாக விளங்குகின்றன. பாலாற்றின் கரைகளில் அமைந்துள்ள இந்த சிவாலயங்கள் அனைத்தும், அங்கு லிங்கங்கள் அமைத்து வழிபட்ட முனிவர்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன. ஆதியில் அன்னை பார்வதிதேவி பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார். பார்வதிதேவியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதிதேவியை மணம் முடிக்க காஞ்சிபுரத்தில் எழுந்தருளினார். இறைவனின் திருமண விழாவை காண மகரிஷிகள், முனிவர்கள் என பலரும் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தனர். காஞ்சி மாநகரமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் முனிவர்களும், ரிஷிகளும் தங்கள் தினசரி பூஜைகளை செய்வதற்கு அமைதியான இடம் தேடினர். அதற்காக பாலாற்றின் கரையோரம் இருந்த காடுகளில் தங்கினர். இவ்வாறு ரிஷிகள் தங்கி லிங்கங்கள் அமைத்து பூஜைகள் செய்த இடங்கள் பிற்காலத்தில் ஷடாரண்ய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஷடாரண்ய ஷேத்திர சிவாலயங்கள் ஆற்காட்டை அடுத்த வேப்பூர் மற்றும் மேல்விஷாரம், புதுப்பாடி ஆகிய இடங்களில் பாலாற்றின் தென்புற கரைகளிலும், அவரக்கரை, காரை, வன்னிவேடு, குடிமல்லூர் ஆகிய இடங்களில் பாலாற்றின் வடபுற கரைகளிலும் அமைந்துள்ளன. இந்த ஆறு ரிஷிகள் வழிபட்ட தலங்களுடன், காஷ்யபர் வழிபட்ட ஆவாரங்காட்டு இறைவனையும் வழிபடவேண்டும் என்பது மரபு.
ஆண்டுதோறும் மகா சிவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பைரவருக்கு ஜன்மேஅஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, ஆடி மாதம் ஈஸ்வர்ய சிறப்பு யாகம், புரட்டாசி மாத துர்காஷ்டமி, ஆவணி மாத வால்மீகி முனிவருக்கு ரிஷி பஞ்சமி பூஜை நடைபெறுகிறது. ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு பிராதிக்கின்றனர்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள நிலையம் : வாலாஜா ரோடு, காட்பாடி, அரக்கோணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு