19.முந்தி விநாயகர்- தமிழ்நாடு 





	


	



























	




 




	








 




3:19:09 PM         Wednesday, April 29, 2026

19.முந்தி விநாயகர்- தமிழ்நாடு

19.முந்தி விநாயகர்- தமிழ்நாடு
19.முந்தி விநாயகர்- தமிழ்நாடு 19.முந்தி விநாயகர்- தமிழ்நாடு 19.முந்தி விநாயகர்- தமிழ்நாடு 19.முந்தி விநாயகர்- தமிழ்நாடு 19.முந்தி விநாயகர்- தமிழ்நாடு 19.முந்தி விநாயகர்- தமிழ்நாடு 19.முந்தி விநாயகர்- தமிழ்நாடு 19.முந்தி விநாயகர்- தமிழ்நாடு
Product Code: 19.முந்தி விநாயகர்- தமிழ்நாடு
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

புளியகுளம் முந்தி விநாயகர் ஆலயம்.

திருத்தல அமைவிடம் :  இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோவை மாவட்டம் காந்திபுர த்தில் இருந்து 3 கி  மீ தொலைவில் உள்ளது. புலியகுளம் பகுதியில் 1982 ஆம் ஆண்டில் தேவேந்திர குல அறக்கட்டளையால் விநாயகர் கோவில் ஒன்று நிறுவப்பட்டது . இங்குவீற்றிருக்கும் மூலவர் முந்தி விநாயகர் சிலை 19 அடி உயரத்தில் 190 டன் எடை கொண்டது. இது ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய கருங்கற்சிலைகளில் ஒன்றாகும். இது 1998 ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மூலவர்: முந்தி விநாயகர்

தல விருட்சம்: அரசமரம்

தல சிறப்பு: ஆசியாவிலையே இது தான் மிக பெரிய விநாயகர் விக்கிரகம்.இந்த விநாயகர் விக்கிரகத்தின் எடை பதினான்கு டன் என்று சொல்லப்படுகிறது.1993 ஆம் அண்டு முதல் இந்த ஆலயம் உள்ளது.  இந்த ஆலயம், அந்தப் பகுதி மக்களால், கடந்த 98-ம் வருடம், ஜகத்குரு ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளின் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 

எதுவாக இருப்பினும், என்ன இன்னல் வந்திடினும் முன்னின்று வந்து அனுக்கிரகம் செய்து வைப்பாராம் இவர். எனவே, இவருக்கு ஸ்ரீமுந்தி விநாயகர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்வர். அனைத்துக் கடவுளருக்கும் முதன்மையானவர் என்பதாலும் இந்தத் திருநாமம் இவருக்கு.

இன்னொரு சிறப்பு... இந்தச் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது. விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள். வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன்கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். தவிர, துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீவிநாயகக் கடவுள். அவரின் கிரீடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு.வாசுகிப் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் ஸ்ரீகணபதி பெருமான். நாக தோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து ஸ்ரீவிநாயகரை வணங்கினால், தோஷம் நீங்கி, வளமுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.

'பிடியதன் உருவுமை கொளமிகு கரியது’ என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு ஸ்ரீவிநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி. அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளது.

'சித்திரை முதல் நாள், சுமார் 3 டன் எடை கொண்ட பலவகை பழங்களால், விநாயகருக்கு அலங்கார பூஜை நடைபெறுகிறது. அந்த மாதம் முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்வதும் பக்தர்களுக்கு பழங்கள் விநியோகிப்பதும் சிறப்புற நடைபெறும். அதேபோல் விநாயக சதுர்த்தி நாளில், அதிகாலையிலேயே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுவதுடன், மூன்று டன் எடை கொண்ட பல மலர்களால் ஆன மாலையை அணிவிக்கப் பட்டு, ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார்.'' எனத் தெரிவிக்கிறார் குருக்கள்.

தல சிறப்பு: ஆசியாவின் மிகப்பெரிய இந்த விநாயகர் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. விநாயகர் ,துதிக்கையில் அமிர்த கலசம், இடது காலில் மகாபத்மம்.

தலபெருமை : விநாயகரின் நெற்றி மட்டுமே இரண்டடி அகலம். துதிக்கை வலம் சுழிந்து காட்சி தருகிறார் பிள்ளையார். நான்கு திருக்கரங்கள். வலது முன் கரத்தில் தந்தமும் பின் கரத்தில் அங்குசமும்; இடது முன் கரத்தில் பலாப்பழமும் பின் கரத்தில் பாசக் கயிறும் கொண்டு காட்சி தருகிறார். இதை தவிர, துதிக்கையில் மகாலட்சுமியின் அம்சமான அமிர்த கலசத்தைத் தாங்கியபடி, தாமரை பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார் விநாயகக் கடவுள்.

அவரின் கிடத்திலும் தாமரை மேல்நோக்கி விரிந்திருப்பது போன்ற வேலைப்பாடு மிக அழகு வாசுகிப் பாம்பை, தன் வயிற்றில் கட்டிக் கொண்டிருப்பதால், நாக தோஷத்தை நீக்கி அருள்கிறார் கணபதி பெருமான். பிடியதன் உருவுமை கொளமிகு கரியது என்ற வாக்குக்கு இணங்க, அம்பாள் பார்வதியும் பரமேஸ்வரனும் யானை உருக்கொண்டு விநாயகப் பெருமானாகத் தோன்றியது போல் காட்சி அளிக்கிறார் கணபதி.

அதாவது, அவரின் வலது பகுதி, ஆண்களைப் போலவும் இடது பக்கம் பெண்களின் வடிவிலும் அமைந்து உள்ளதால் இவர் முன் நின்று தரிசிக்கும் போது ஓர் ஆண் யானையின் கம்பீரமான தோற்றம் பக்தர்களை பிரமிக்க வைக்கிறது. கரஸ்த்த கதலிசூத பனஸேக்ஷக மோதகம் பால சூர்ய பீரபாகாரம் வந்தே பால கணாதிபம் என்கிறது சிவாகம சாஸ்திரம் அரசமரத்தடியில் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பதால் அருள் கடாக்ஷம் அதிகம். இடது திருவடியில் சித்த லட்சுமியின் அம்சமான பத்ம சக்கரத்தைக் கொண்டுள்ளதால் நாடிவரும் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்கி வருகிறார்.

தல வரலாறு: சுமார் 21 சிற்ப கலைஞர்களின் உழைப்பு 6 ஆண்டு பலன் ஓர் அழகிய முந்தி விநாயகர். இச்சிலையை செய்ய பெரிய கல்லை தேர்வு செய்வது என்பது எளிதான காரியம் அன்று. பல இடங்களில் தேடி அலைந்து முடிவில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி என்னும் ஊரில் சுமார் 20 அடி ஆழத்தில் இருந்து எந்த பின்னமும் இல்லாத பாறையைத் தேர்வு செய்து வெட்டி எடுத்தனர். பின் அங்கேயே வைத்து தோராயமாக விநாயகப் பெருமான் உருவில் செதுக்கி எடுத்தனர். இதற்கென தயார் செய்யப்பட்ட தனி ஊர்தியில் ஏற்றி கோவிலின் இருப்பிடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். பிரத்தியேகமாக ஒரு சாய்வு தளம் அமைத்து நிலைக்கு கொண்டு வர மட்டும் சுமார் 18 நாட்கள் பிடித்தன. படுக்கை வசமாக வைத்து துல்லியமாக வடிவமைக்கப்பட்டு நுணுக்கமாக உருவாக்கினர்.பக்தர்களின் பங்களிப்புடன் முந்தி விநாயகருக்கு முழுவதும் கற்களால் ஆன 5 நிலைக் கோபுரமும் முன் மண்டபமும் அமைக்கும் திருப்பணி நடந்து வருகிறது. இதற்கென அரசு திருப்பணி குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

பிரார்த்தனை: சரஸ்வதி பூஜை அன்று குழந்தைகளுக்கு நாக்கில் பிரணவ வடிவாகிய விநாயகரின் மூல மந்திரத்தை எழுதி கல்விப் பயணத்தைத் தொடங்கி வைக்கின்றன. ராகு, கேது தோஷங்கள், நவகிரஹ தோஷங்கள் நிவர்த்திக்காக நவகோள்கள் கோவில் கொண்ட ஸ்தலங்களுக்குச் சென்று வழிபடுவதை விட, கணங்களுக்கு எல்லாம் நாயகனாகத் திகழும் இம்முந்தி விநாயகனைத் தொழுது போற்றினால் எல்லா தோஷங்களும் நிவர்த்தி ஆகின்றன என முழுமையாக நம்புகின்றனர். சக்தி வாய்ந்த விநாயகரின் திரு அருளால் தன்னை நாடிவந்த பக்தர்களின் வேண்டுதல், தடைபெற்ற திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப நலம் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கிறார். இதன் காரணமாக பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் கூடி வருவதைக் காண முடிகிறது. முந்தி விநாயகரை வணங்கினால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். பதினாறு வகை பேறுகளும் பெற்று, பெருவாழ்வு வாழலாம் என்கின்றனர் பக்தர்கள்.

திறக்கும் நேரம் : காலை 5.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  கோவை  11 KM

அருகிலுள்ள ரயில் நிலையம் : கோவை 4 KM

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×