அரிதாரிமங்கலம்





	


	



























	




 




	








 




8:30:19 AM         Saturday, May 02, 2026

அரிதாரிமங்கலம்

அரிதாரிமங்கலம்
அரிதாரிமங்கலம் அரிதாரிமங்கலம் அரிதாரிமங்கலம் அரிதாரிமங்கலம் அரிதாரிமங்கலம் அரிதாரிமங்கலம் அரிதாரிமங்கலம் அரிதாரிமங்கலம்
Product Code: அரிதாரிமங்கலம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                               அரிதாரிமங்கலம், கைலாசநாதர் 

திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலையில் அரிதாரிமங்கலம் என்னுமிடத்தில் உள்ளது. 

இறைவன் :  கைலாசநாதர்

இறைவி :  பெரிய நாயகி 

தல தீர்த்தம்  : செய்யாறு 

தல சிறப்புகள் :  இது ஒரு சப்த கைலாய தலம். கைலாசநாதர் அழகான தோற்றத்துடன் சாந்நித்யம் நிறைந்தவராகவும், பெரிய நாயகி வசீகர தோற்றத்துடன் சாந்தமாகவும் கேட்ட வரங்களை அளிப்பவளாகவும் காட்சி தருகிறார்கள். மஹாவிஷ்ணு இங்கு தங்கி எல்லோருக்கும் மங்களத்தை வாரி வழங்குவதால் அரிதார மங்கலம் என பெயர் பெற்றது. விஷ்ணு அடி முடியை காணமுடியாமல் திரும்பி வந்து விட இந்த தலத்தில் தங்கியதாக கூறப்படுகிறது. விநாயகர், முருகன் உடன் வள்ளி, தெய்வானை, ஐயப்பன், தட்சணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை, பைரவர், சரஸ்வதி, பிரம்மா, 63 நாயன்மார்கள், நவக்கிரகங்கள் சன்னதிகள் உள்ளன 

தல வரலாறு :  திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே “சப்த கைலாசங்கள்’ மற்றும்  சப்த கரைகண்டேஸ்வரர்” கோவில்கள் உள்ளன. அன்னை காமாட்சி சிவபெருமானின் இடப்பாகம் பெற காஞ்சிபுரம் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் போது வாழைப்பந்தலில் மண்ணால் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டார். அப்போது அவரது வழிபாட்டிற்கு தண்ணீர் தேவைப்பட்டது. உடனே முருகப்பெருமான் தன் கூர்வேலை எய்ய, ஜவ்வாது மலையில் இருந்து ஆறு ஊற்றெடுக்கிறது. அந்த நேரத்தில் அந்த இடங்களில் சப்த முனிகள் தவம் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் குருதி தான் ஆற்றில் கலந்தது. அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த “சப்த கைலாசங்கள்” தலங்கள் என்றனர். ஆற்றின் நிறம் செந்நிறமாக இருந்ததால் செய்யாறு என பெயர் பெற்றது. ஆற்றின் நிறத்தை மாற்றவும் முருகப்பெருமான் சாபம் நீங்கவும் பிரதிட்டை செய்து வழிபட்ட தலங்கள்” சப்த கரைகண்டேஸ்வரர்” தலங்கள் ஆகும். 

திருமண தடை நீங்கவும், குழந்தை பேறு பெறவும் பிராத்தனை செய்கின்றனர். இங்கு தமிழ் புத்தாண்டு, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  விழுப்புரம் , மேல்மருவத்தூர், திண்டிவனம் 

பேருந்து வசதி  : உண்டு   

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×