நரிக்குடி, விருப்பாட்சி நாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 50 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : விருப்பாட்சி நாதர்
இறைவி : நாகவல்லி
எந்த பிரச்சனையும் தீர்த்து வைப்பவர் என்ற பெருமை இறைவனுக்கு உண்டு. கோவிலில் பலிபீடம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், நந்தி மண்டபம் அமைந்துள்ளது. மகா மண்டபத்தின் வட பகுதியில் நாகவல்லி சன்னதி உள்ளது. அர்த்த மண்டபத்தில் காசிலிங்கம், சுப்பிரமணியர், சனி பகவான், நடராஜர், சயன கோலத்தில் பெருமாள் சன்னதிகள் உள்ளது.
காடும் பரந்த நில பரப்பும் நிறைந்த நரிக்குடி பகுதில் வன விலங்குகள் காணப்படுகிறது. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் நரியின் நடமாட்டத்தை காணலாம். கிருதுமால் நதியின் மேற்கு கரையில் கிழக்கு நோக்கி பெரிய மதில் சுவர்களுடன் அமைந்துள்ளது. கி பி 1216 ம் ஆண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. அக்காலத்தில் கட்டப்பட்டது போலவே இன்றும் எவ்வித மாறுதல் இன்றி காணப்படுகிறது.
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை, நவராத்திரி உற்சவம் பெண்களால் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், அன்னபிஷகம், ஆனி திருமஞ்சனம், கார்த்திகை தீபம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பங்குனி உத்திரம், பிரதோஷ வழிபாடு போன்றவைமிக சிறப்பாக கொண்டப்படுகிறது.
காலை 8.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : விருதுநகர், சிவகாசி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு