குன்னூர்





	


	



























	




 




	








 




2:27:13 PM         Thursday, April 16, 2026

குன்னூர்

குன்னூர்
குன்னூர் குன்னூர் குன்னூர் குன்னூர் குன்னூர் குன்னூர் குன்னூர்
Product Code: குன்னூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                              குன்னுர், கொழுந்தீஸ்வரர் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மாவட்டத்தில் விருதுநகரில் இருந்து ஆமத்தூர் வழியாக 33 கி.மீ பயணித்தும், எரிச்சநத்தம் வழியாக 40 கி.மீ பயணித்தும் கோவிலை அடையலாம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து சுமார் 15 கி.மீ சாலை மார்க்கமாக சென்றாலும் கொழுந்தீஸ்வர் கோவிலை அடையலாம்.

இறைவன் : கொழுந்தீஸ்வரர்

இறைவி : மரகதவள்ளி

தீர்த்தம் :  அர்ச்சுனன் சுனை 

தலச் சிறப்புகள் :  குன்னூர் வட்டத்திற்கு உட்பட்டு மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள முதல் குடைவரைக்கோயில் என்பது சிறப்பு.  மகாபாரதப் போரில் அர்ச்சுனன் எய்த அம்புகளில் ஒன்று, கோயில் அமைந்துள்ள பாறையில் விழுந்ததாக ஐதீகம். இதன் காரணமாக அம்பு குத்திய இடத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பின் அதுவே வற்றாத சுனை நீரூற்றாக அர்ச்சுனன் சுனை தீர்த்தமாக உள்ளது. இத்தீர்த்தம் அடிவாரத்தில் அர்ச்சுனன் நதியாக இன்றளவும் ஓடுகிறது. அர்ச்சுனன் சுனை அருகே திருவோட்டுக்கேணி வற்றாத நீரூற்று உள்ளது. அர்ச்சுனன் சுனை தீர்த்தம், திருவோட்டுக்கேணி தீர்த்தம், நோய்களை தீர்க்கும் அருமருந்தாக இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.

கோவில் அமைப்பு : விருதுநகர் மாவட்டத்தின் எண்ணற்ற கோயில்கள் இருப்பினும், கி.பி., எட்டாம் நுற்றாண்டில் பாறைகளை குடைந்து அமைக்கப்பட்ட முதல் குடவறை சிவன் கோயில் இங்கு அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்தது. விருதுநகர் மாவட்டம் மூவரை வென்றான் அருகே குன்னுர் மலைப்பாறையில் அமைந்துள்ள மரகதவள்ளி அம்பாள் சமேத மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் சிவ தலங்களில் பிரசித்தி பெற்றது. இங்கே கருவறையில் லிங்க வடிவில் மூலவர் காட்சியளிக்கிறார். பக்கவாட்டின் வலதுபுறத்தில் நடராஜர், சிவகாமி அம்பாள், இடது புறம் விநாயகர், முருகள் சிலகள் தத்ரூபமான முறையில் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. கோவில் தலத்தில் காலபைரவர், நவக்கிரகங்களுக்கு தனித் தனியே சன்னதி உள்ளது. 

தல வரலாறு :  கொழுந்தீஸ்வரர் கோவில் சுமார் ஆயிரம் முதல் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. விருதுநகரில் பல சிவன் கோவில்கள் காணப்பட்டாலும் கி.பி.8 ஆம் நூற்றாண்டில் பாறைகளைக் குடைந்து கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் மிகவும் பிரசிதிபெற்தாக உள்ளது. இதுவே சிவனுக்கு அமைக்கப்பட்ட முதல் குடவறைக் கோவிலாகும். சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் கோவிலாகவும் உள்ளது. 

ஆண்டுதோறும், சிவராத்திரி, பவுர்ணமி, பிரதோஷம் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் மூலவருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. 

காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 6.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : மதுரை

அருகிலுள்ள ரயில் நிலையம் : ஸ்ரீவில்லிப்புத்தூர்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×