விக்கிரமங்கலம், சோழீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டத்தில் தஞ்சாவூருக்கும் கங்கைகொண்ட சோழபுறத்திற்கும் இடையே இவ்வூர் உள்ளது.
இறைவன் : சோழீஸ்வரர்
இறைவி : பூர்ண சந்திரா கலாம்பிகை
தல தீர்த்தம் : கங்கா தீர்த்தம்
தல விருட்சம் : வில்வம்
தல வரலாறு : முதலாம் இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் இக்கிராமம் நிறுவப்பட்டு அவரது குடும்பப் பெயரால் விக்கிரமசோழபுரம் என அழைக்கப்பட்டது. இந்த இடம் சோழ மன்னர்களின் துணை நகரமாக விளங்கியதாக விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆகியோரின் காலத்திய கல்வெட்டுக்கள் கூறுகிறது. இவ்விடத்திலிருந்து சோழ நாட்டின் பல கோவில்களுக்கு நிலங்களை தானமாக வழங்க ஆணை பிறப்பித்தனர்.சோழர் காலத்தில் விக்கிரமசோழபுரம், ஒரு புகழ்பெற்ற வர்த்தக மற்றும் வாணிப மையமாக இருந்தது. சோழர் காலத்திய அழகிய ஜெயின் மற்றும் புத்தர் சிற்பங்கள் இந்த கிராமத்தில் பாதுகாக்கப்படுகிறது.
நாகமங்கலம் என்ற ஊர் ராஜேந்திர சோழரின் மனைவி வானவன்மாதேவி என்பவரின் பெயரால் வானவன்மாதேவி சதுர்வேதிமங்கலம் என அழைக்கபட்டது . இவ்வூரில் உள்ள ஏரியின் பெயர் அம்பிகாபதி ஏரி என்று அழைக்கப்பட்டது . இது கம்பரின் மகன் அம்பிகாபதியை நினைவுபடுத்துகிறது . செட்டி திருக்கோணம் , பெரிய திருக்கோணம் ஆகிய ஊர்கள் ஒன்று சேர்ந்து மதுராந்தகபுரம் என்னும் பெயரால் மிகபெரிய வணிக நகரமாக இருந்தது. மனுகுலகேசரி எனபது ராஜேந்திர சோழரின் மகனான சொழகேரலன் என்பவரின் பட்ட பெயராகும். ஸ்ரீ புரந்தான் என்ற ஊர் முதலாம் பராந்தக சோழரின் காலத்தில் ஸ்ரீபராந்தக சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டது. உத்தமசோழன் ராஜராஜன் ஆகியோரிடம் உயர் அதிகாரியாக பணியாற்றிய அம்பலவன்
கோவில் அமைப்பு : விக்கிரம சோழன் என்ற பட்ட பெயர் கொண்ட முதலாம் ராஜேந்திர சோழன் (1012-1044) காலத்தில் இவ்வூர் வணிக நகரமாக உருவாக்கப்பட்டது. கி.பி 1068 இல் வீரராஜேந்திரன் காலத்தில் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்த மடத்திற்கு இடப்புறமாக இம்மன்னரால் கொடுக்கப்பட்டதை அந்த கல்வெட்டு கூறுகிறது. பிற்காலத்தில் விக்கிரமம் எனவும் விக்கிரமங்கலம் எனவும் மாறிவிட்டது . சோழீஸ்வரர் கோயிலில் முதலாம் குலோத்துங்கன் மூன்றாம் குலோத்துங்கன் மற்றும் பிற்கால கல்வெட்டுகளும் ஒரு செப்பேடும் உள்ளன. இவ்வூரை பற்றி கூறும் கல்வெட்டுகள் கங்கைகொண்டசோழபுரம் கீழபழுவூர் வேலூர் திருபுலிவனம் அச்சிறுபாக்கம் பிரம்மதேசம் அய்யன்பேட்டை ஆலங்குடி ஆகிய ஊர்களில் உள்ளன. சோழர் கால செப்பு திருமேனிகளும் சிற்பங்களும் உள்ளன. இரண்டு கோபுரங்களும் பிரகாரங்களும் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டன. இக்கோயிலுக்கு 1912 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் மகாமண்டபமும் இதன் கூரையில் உள்ள ஓவியங்களும் விஜயநகர , நாயக்கர் காலத்தை சேர்ந்தவைகளாகும். இம்மண்டபத்தின் கூரையில் 12 ராசிகளை குறிப்பிடும் ராசி மண்டல சிற்பங்கள் உள்ளன . இக்கோயில் எதிரில் உள்ள திருக்குளம் சோழர் காலத்தில் வெட்டப்பட்டது .
இங்குள்ள சனீஸ்வரர் சன்னதியில் ஞாயிறு செவ்வாய் சனி கிழமைகளில் தாமரை ,அரளி போன்ற பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து எள் தீபம் ஏற்றி வழிபட்டால் நவகிரக தோஷங்கள் நிவர்தனையாகி திருமண தடைகள் நீங்கி புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். இதேபோல் பைரவர் சன்னதியில் வழிபாடுகள் செய்தால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கி வளமான வாழ்கை அமையும் . இக்கோயில் அம்பாள் தெய்வீக சக்தி நிறைந்த அம்மனாகும்.
காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சோழவந்தான், கொடைக்கானல் ரோடு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை