கோபுராபுரம் , ஆதிசக்தீஸ்வரர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின் விருத்தாசலத்திலிருந்து பாலக்கொல்லை செல்லும் வழியில் கோபுராபுரம் உள்ளது.
இறைவன்: ஆதிசக்தீஸ்வரர்
இறைவி : ஆதிசக்தீஸ்வரி
தல விருட்சம் : இலந்தை
தல தீர்த்தம் : தீர்த்த குளம்
தல சிறப்புகள் : சுயம்பு லிங்கம், சூரியக்கதிர்கள் சிவனின் நெற்றியில் விழுவது சிறப்பு. இக்கோயிலில் தனி சனி பகவான், சசிவர்ணர் நந்தி பாராயணர் ஜீவசமாதி கிழக்கு நோக்கி உள்ளது. பைரவர், முருகன், கஜலெட்சுமி, நவகிரகம் முதலிய தெய்வங்கள் தனித்தனிச் சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபம், கொடிமரம் காணப்படுகின்றன.
தல வரலாறு : காசிக்கு வீசம் அதிகம் விருத்தகாசி எனும் திருமுதுகுன்றத்திற்கு ஈசானிய மூலையில், 6 கி.மீ., தூரத்தில் கோபருவதம் எனும் தேவஸ்தான கோபுராபுரம் உள்ளது. நந்தி தேவர், உமாதேவிக்குறிய வழிபாட்டிற்கு உதவி செய்ததால், இத்தலம் கோபருவதம் என்றும், ஆதியில் உமாதேவி சிவனை வழிபட்டதால், ஆதிசக்தீசுரம் என்றும் கூறப்பட்டது. உமாதேவி வழிபாட்டிற்கு பயன்படுத்தியதுதான் கோவில் வடக்கு பகுதியிலுள்ள கங்கை தீர்த்தம். இத்தீர்த்தத்தை பயன்படுத்தினால் நோய் நீங்குவதுடன், சரும நோய்களும் நீங்கியதாக ஐதீகம். இதில் சசிவர்னர், நந்திபாராயணர் ஆகியோர் நீராடி, சரும நோய் நீங்கி, சிவனை வழிபட்டு முக்தியடைந்தனர்.
தோல் நோய் பக்தர்கள், தீர்த்த குளத்தில் குளித்து சுவாமியை வழிபட வேண்டும், சசிவர்ணர் - நந்திபாராயணர் குஷ்ட நோய் குணமடைய வேண்டி தீர்த்தகுளத்தில் குளித்து வழிபட்ட பின், ஜீவசமாதி அடைந்ததாக கூற்று உள்ளது. வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். தல விருட்சம் இலந்தை தானாக உற்பத்தியானதாக கூறப்படுகிறது, சித்ரா பவுர்ணமி பத்து நாட்கள் பிரம்மோற்சவம், பிரதோஷம், அமாவாசை சிறப்பாக நடைபெறும்.
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி
அருகிலுள்ள ரயில் நிலையம் : விருத்தாசலம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு