கிள்ளை





	


	



























	




 




	








 




6:43:47 PM         Tuesday, April 21, 2026

கிள்ளை

கிள்ளை
கிள்ளை கிள்ளை கிள்ளை கிள்ளை கிள்ளை கிள்ளை கிள்ளை
Product Code: கிள்ளை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                           கிள்ளை, விடங்கேஸ்வர் (தில்லை விடங்கன்)

திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் நடராஜர் சன்னதியின் ஈசான்ய மூலையில், தில்லை காளியின் இடைக்கண் பார்வையிலும் அமைந்துள்ளது. 

இறைவன் : விடங்கேஸ்வர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

இறைவி : பர்வதம்மாள் 

தல விருட்சம் : வில்வம் 

தல தீர்த்தம் : புஷ்கரணி 

தல சிறப்புகள் : சித்திரை மாதம் முதல் வாரம் மூலவரின் மீது சூரியன் கதிர்கள் விழுகிறது. கருவறையில் ருத்ராட்ச பந்தலுக்கு கீழ் மூலவர் அருள்பலிக்கிறார்.

கோவில் அமைப்பு : கிழக்கு பக்க நுழைவாயில் முன்பு தல விருட்சம் அமைந்துள்ளது. மகா மண்டபம் முன்பு பாலி பீடம், நந்தி, தெற்கு முகம் பார்த்து அம்பாள் சன்னதி உள்ளது. வலது பக்கம் வள்ளி தெய்வானை உடன் முருகனும், இடப்பக்கம் விநாயகரும் அருள்பலிக்கின்றனர். வடக்கு பக்கம் பார்த்து சமய குறவர்களும், மேற்கு பக்கம் பார்த்து சூரியன், சந்திரன் மற்றும் பைரவர் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது. வெளி பிரகாரத்தில் தட்சணாமூர்த்தி, விஷ்ணு, துர்கை, சண்டிகேஸ்வரர், லிங்கோத்பவரர் உள்ளனர்.

பிச்சவரம் ஜமின் காலத்தில் பரிவட்டம் காட்டும் போது ஏற்பட்ட பாகுபாட்டில் பலர் மனஉளைச்சல் அடைந்தனர். அப்பாசாமி என்பவர் தனக்கு உரிய சிறப்பு கிடைக்காமல் மிகவும் வருந்தி இறைவனிடம் வேண்டினர். அப்போது ஈசன் கனவில் தோன்றி பிச்சவரம் காட்டுப்பகுதில் கிடப்பதாகவும் என்னை எடுத்து பூஜை செய்யுமாறு  கூறி மறைந்தார். தான் வாழ்ந்த இடமான சிதம்பரம், கிள்ளைகும் இடைப்பட்ட பகுதில் உள்ள கிராமமான இங்கு வருண பகவான் நோக்கி இசை படியதில் வருண பகவான் இறங்கி வந்து வணங்கியதால் வருணகிரி எனவும், விடங்க முனிவருக்கு மோட்சம் கொடுத்ததால் தில்லை விடங்கன் எனவும் இப்பகுதி அழைக்கப்படுகிறது.    

சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம், கார்த்திகை, பிரதோஷம் போன்ற முக்கிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கல்வி, திருமண தடை, புத்திர பாக்கியம், சகல நோய்களை நீக்கும் இறைவனாக அருள்பலிக்கிறார். 
 
காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி 

அருகிலுள்ள ரயில் நிலையம் : சிதம்பரம்,  சீர்காழி

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×