சி.கொத்தங்குடி





	


	



























	




 




	








 




4:52:15 PM         Tuesday, April 21, 2026

சி.கொத்தங்குடி

சி.கொத்தங்குடி
சி.கொத்தங்குடி சி.கொத்தங்குடி சி.கொத்தங்குடி சி.கொத்தங்குடி சி.கொத்தங்குடி சி.கொத்தங்குடி சி.கொத்தங்குடி சி.கொத்தங்குடி
Product Code: சி.கொத்தங்குடி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                                     சி.கொத்தங்குடி , கைலாசநாதர்

திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தின்  சிதம்பரம் நடராஜர் கோவில், தில்லை காளி மாரியம்மன் கோவிலுக்கு அருகில்  2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இறைவன் : கைலாசநாதர்

இறைவி : காமாட்சியம்மன் 

தல விருட்சம் : வில்வம் , அரசம், வேம்பு 

தல சிறப்புகள் : கருவறையில் கைலாயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட லிங்கம் உள்ளது. கொற்றவன் மன்னன் ஆட்சி செய்தததால் இப்பகுதி கொற்றவன்குடி மருவி கொந்தன்குடி என்று அழைக்கப்படுகிறது. 

கோவில் அமைப்பு : கிழக்குப்பக்க நுழைவாயில் கொண்டு மகாமண்டபத்தில் 100 பேர் அமர்ந்து சாமி தரிசனம் செய்யலாம். நுழைவாயில் முன்பு தல விருட்சங்கள் காணப்படுகிறது. அம்மாள் சன்னதி கிழக்கு நோக்கி காணப்படுகிறது. பலிபீடம், நந்தி மேற்கு பார்த்த வண்ணம் அமர்ந்த நிலையில் உள்ளது. வெளி பிரகாரத்தில் மேதா தட்சணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்ககள் உள்ளது. 1995 ம் ஆண்டு கட்டபட்ட முத்து விநாயகர் கோவிலில் சிவன் கோவிலை கட்ட முடிவு செய்யப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன்பு கைலாசநாதர், காமாட்சியம்மன்,கஜலக்ஷ்மி, விநாயகர், முருகன், பைரவர் ஆகிய தெய்வ மூர்த்திகளுடன் கோவில் கட்டப்பட்டது. விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தெய்வ சிலைகள் கொடுத்தும், பொருளாதார உதவிகள் செய்தார்.

சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, பங்குனி உத்திரம், கார்த்திகை, பிரதோஷம் போன்ற முக்கிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கல்வி, திருமண தடை, புத்திர பாக்கியம், சகல நோய்களை நீக்கும் இறைவனாக அருள்பலிக்கிறார். 

காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை, புதுச்சேரி 

அருகிலுள்ள ரயில் நிலையம் : சிதம்பரம்,  சீர்காழி

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×