பெருங்குளம்





	


	



























	




 




	








 




6:31:24 PM         Saturday, May 02, 2026

பெருங்குளம்

பெருங்குளம்
பெருங்குளம் பெருங்குளம் பெருங்குளம் பெருங்குளம் பெருங்குளம் பெருங்குளம் பெருங்குளம் பெருங்குளம்
Product Code: பெருங்குளம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                 திருக்குளந்தை (பெருங்குளம்), வேங்கடவானன் (சனி)

திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தூத்துக்குடி மாவட்டத்தில் சனி தலமாக திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் 38 கி.மீ தொலைவிலும், திருப்புளியங்குடியில் இருந்து 5 கி.மீ தொலைவிலும், வைகுண்டத்தில் இருந்து 7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இறைவன் : வேங்கடவானன்- நின்ற திருக்கோலம் 

உற்சவர் : மாயக்கூத்தன் 

இறைவி : குளந்தைவல்லி, அலமேலுமங்கை

தல தீர்த்தம் : பெருங்குளம்

தலச் சிறப்புகள் : இங்கு, மூலவர் ஸ்ரீனிவாச பெருமாள் நின்ற கோலத்தில் பெரிய உருவத்துடன் காட்சி தருகிறார். பொதுவாக வைணவத் தலங்களில் பெருமாளின் திருவடி தரிசனம் பெரிய பாக்கியமாகக் கருதப் படுகிறது. அதன் காரணமாகவே, இத்தல பெருமாளின் திருவடியை நன்றாக தரிசிக்க அர்த்த மண்டபத்திற்கு வெளியே பெரிய கண்ணாடி ஒன்று உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு: முன்னொரு காலத்தில் துலைவில்லி மங்கலம் என்ற ஊருக்கு அருகிலே தடாகவனம் என்ற தலம் இருந்தது. அத்தலத்தில் வேதஸாரன் என்ற அந்தணர், தனது மனைவிகுமுதவல்லியுடன் வாழ்ந்து வந்தார். தங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற திருமாலின் அருளினால் இந்தத் தம்பதியினருக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்குகமலாதேவி என்று பெயரிட்டு அழைத்தனர்.

தனது பெற்றோரின் அரவணைப்பில் பாதுகாப்பில் சிறப்புடன் வளர்ந்து வந்த கமலாதேவி, பெருமாள் மேல் உள்ள பெரும் பக்தியின் காரணமாக, இறைவனையே கணவனாக அடைய விரும்பினாள். பெற்றவர்கள், நட்புவட்டம், உறவினர் என யார் சொல்லியும் கேளாமல், திருமாலை எண்ணி தவம் இயற்றினாள். இவ்விளம் பெண்ணின் கடும் தவத்தினை கண்ட விஷ்ணுபிரான், கமலாதேவி முன் தோன்றி, நீ இவ்வாறு கடுந்தவம் புரிவதன் நோக்கம் என்ன எனக் கேட்டார். அதற்கு கமலாதேவி, ஸ்ரீமந் நாராயணனையே மணம் புரிந்து வாழ விரும்புவதாகக் கூறினாள். அதற்கு சம்மதம் தெரிவித்து திருமாலும் கமலாதேவியை திருமணம் செய்துகொண்டார். இவ்வாறாக கமலாதேவி என்னும் பாலிகை தவம் செய்த வனம் என்பதால் பாலிகாவனம் என்ற பெயர் உண்டானது. வேதஸாரனும் தான் அன்றாடம் வழிபடும் பெருமாளே, தன் மகளை தன் இதயத்தில் இருத்தி உள்ளதை எண்ணி எண்ணி மனம் மகிழ்ச்சியுற்றார். அன்றாடம் பெருமாளை மனதார நினைத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் பூஜை செய்து வந்தார்.

ஒரு நாள் வேதஸாரனின் மனைவி குமுதவல்லி ஆற்றங்கரையில் நீர் எடுக்கச் சென்றிருந்த வேளையில், அம்சநாரன் என்ற அரக்கன் அவளை கடத்திச் சென்று இமயமலைச் சாரலில் சிறை வைத்தான். தனது அன்பு மனைவியை அரக்கன் ஒருவன் கவர்ந்து சென்றதை பெருமாளிடம் கூறி, தன் மனைவியை மீட்டுத் தர மன்றாடினான் வேதஸாரன். அவனது அழுகுரலுக்கு மனமிறங்கி தனது கருடவாகனத்தில் இமயமலை சென்று அம்சநாரனிடம் இருந்து குமுதவல்லியை மீட்டு வந்தார் திருமால்.

பாலிகாவனத்தில் திருமால் குடிகொண்டிருப்பதை அறிந்த அந்த அரக்கன் இந்த வனத்திற்கு வந்து பெருமானுடன் போரிட்டான். திருமால், அந்த அரக்கனை போரில் வென்று வதம் செய்து அரக்கனது தலை மேல் ஏறி நர்த்தனமாடினார். அதற்குப் பிறகு இத்தல இறைவனுக்கு தேவர்கள் அனைவரும் கங்கை நீரால் திருமஞ்சனம் செய்வித்தனர். நடனமாடிய காரணத்தினாலேயே இத்தல இறைவனுக்கு சோரநாட்டியன்என்றும் மாயக்கூத்தன் என்றும் பெயர் வந்தது. அரக்கனுடன் ஏற்பட்ட போரில் வெற்றிபெற கருடாழ்வார் பெருமானுக்கு உதவிய காரணத்தினால் இன்றும் இத்தல உற்சவ மூர்த்தியுடனும், தாயாருடனும் கருடாழ்வாருக்கு ஒரே ஆசனத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.

பல தூண்கள் சிற்பங்களின் அழகால் நிறைந்திருந்தாலும் குறிப்பாக ஒரு தூணில் குதிரையும் யாழியும் கலந்த ஒரு மிருகத்தை வாகனமாகக் கொண்டு கல்கி அவதாரம் வாளுடன் தோற்றமளிப்பது தனித்துவமாக உள்ளது, வேறெங்கும் இல்லாத வடிவம். இத்திருக்கோயிலில் பல வருடங்களுக்கு முன்பாக வாசத்தடம் என்ற குளம் பிரசன்ன ஜோதிடம் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. திருக்கோயிலின் தெற்குப்புறமாக கழுநீர் தொட்டியான் என்ற சன்னதி உள்ளது. திரு மடப்பள்ளியில் இருந்து வரும் பிரசாத நீர், இவரது பாதம் வழியாகத்தான் செல்கிறது.

காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் :  தூத்துக்குடி

அருகிலுள்ள ரயில் நிலையம்   : ஸ்ரீவைகுண்டம்

பேருந்து வசதி   : உண்டு

தங்கும் வசதி   : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×