பெரியநாயக்கன்பாளையம்





	


	



























	




 




	








 




5:20:49 PM         Thursday, April 16, 2026

பெரியநாயக்கன்பாளையம்

பெரியநாயக்கன்பாளையம்
பெரியநாயக்கன்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் பெரியநாயக்கன்பாளையம்
Product Code: பெரியநாயக்கன்பாளையம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                         பெரியநாயக்கன்பாளையம், சொக்கலிங்கேஸ்வரர்

திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில், கோயம்புத்தூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. 

இறைவன் :  சொக்கலிங்கேஸ்வரர்

இறைவி :  மீனாட்சி

தல விருட்சம் : நாவல் மரம்

தல சிறப்புகள் : மூலவர் முதல் பரிவார தெய்வங்கள் அனைத்தும் தம்பதி சமேதராக காட்சிஅருளும் தலமாக விளங்குவது மிகச்சிறப்பாகும்.

கோயில் அமைப்பு : 13வது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவிலானது மேற்கு நோக்கி அமைந்துள்ளது. முன்னர் காலத்தில் இப்பகுதி கூடலூர் என்றே அழைக்கப்பட்டது. மிகப்பெரிய தலமாக நாவல்மரம், சிந்தாமணி விநாயகர், கன்னிமார் போன்ற தெய்வங்கள் ஒரு சேர தரிசிக்கலாம். கனகசபையில் நடராஜர், சிவகாமி அம்மையாருடன் காட்சி தருகிறார். ஆருத்ரா தரிசனத்தின் போது சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இங்கு திருமால், வேணுகோபாலசாமி, ருக்மணி  ஆகியோர் வீற்றுஇருக்கின்றனர். சித்தி புத்தி உடன் விநாயகரும், வள்ளி தெய்வானையுடன் முருகனும் தனி சன்னதியில் காட்சி தருகின்றனர். சந்திரன் ரோகிணியிடனும், சூரியன் உஷா மற்றும் ப்ரதூஷ உடன் அருள்பலிக்கின்றனர். அறுபத்தி மூன்று நாயன்மார்கள், நர்த்தன விநாயகர், தட்சணாமூர்த்தி, பிரம்ம, பைரவர், மீனாட்சி தாயாரை நோக்கிய படி ஐயப்பன் சன்னதிகள் உள்ளன. மிகவும் பழமையான கோவில் சிதிலம் அடைந்து தற்போது திருப்பணிகள் நடைபெற்று புது பொலிவோடு காணப்படுகிறது. 

இத்தலத்தில் நவக்கிரக வழிபாடு மிகவும் சிறப்பு. மூலவருக்கு சர்க்கரை பொங்கல் வைத்து வழிபட்டு பிறகு நவகிரங்களுக்கு புது வஸ்திரம் வைத்து படைத்தால் விரைவில் நல்ல மணவாழ்க்கை அமையும்.  பதினெட்டு சித்தர்களில் ஒருவரான சிவா வாக்கியர் இத்தலம் பற்றி பாடல் பாடியுள்ளார். பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்திரா தரிசனம், மார்கழி மாத திருக்கல்யாணம், அமாவாசை போன்றவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாத நான்காவது சோமவாரத்தின் போது 1008 சங்குகள் கொண்டு பூஜை செய்யப்படுகிறது. ஆடிப்பூரம், ஆடிவெள்ளி,தை வெள்ளி ஊஞ்சல் போன்றவை அம்மாளுக்கு கொண்டாடப்டுகிறது.

காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  கோயம்புத்தூர் 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  கோயம்புத்தூர், பெரியநாயக்கன்பாளையம்

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : இல்லை 

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×