பேட்டை விஸ்வேஸ்வரர் 





	


	



























	




 




	








 




3:24:17 AM         Tuesday, April 21, 2026

பேட்டை விஸ்வேஸ்வரர்

பேட்டை விஸ்வேஸ்வரர்
பேட்டை விஸ்வேஸ்வரர் பேட்டை விஸ்வேஸ்வரர் பேட்டை விஸ்வேஸ்வரர் பேட்டை விஸ்வேஸ்வரர் பேட்டை விஸ்வேஸ்வரர் பேட்டை விஸ்வேஸ்வரர் பேட்டை விஸ்வேஸ்வரர் பேட்டை விஸ்வேஸ்வரர் பேட்டை விஸ்வேஸ்வரர் பேட்டை விஸ்வேஸ்வரர்
Product Code: பேட்டை விஸ்வேஸ்வரர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                        பேட்டை விஸ்வேஸ்வரர்  

திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ராஜா வீதியின் மிக அருகிலேயே உள்ளது. 

இறைவன் : விஸ்வேஸ்வரர்

இறைவி  : விசாலாட்சி 

தல விருட்சம் : வில்வம் 

தல தீர்த்தம் : கங்கை தீர்த்தக்கிணறு 

தல சிறப்புகள் :  நர்மதை நதியிலிருந்து கொண்டு வந்த பாணலிங்க சுயம்புக்கு நிகரான சிறப்பு வாய்ந்தது.

கோயில் அமைப்பு : கோவில் சற்று மாறுபட்ட வடிவில் உள்ளது. விஸ்வேஸ்வரர் விசாலாட்சி ஆகிய சன்னதிகள் சற்று பெரிய அளவில் அர்த்த மண்டபம், கருவறை என தனி தனி விமானம் மேல் தளத்தின் மீது உள்ளது. பரிவார தெய்வங்கள் விமானத்தை உள்ளடக்கியவாறு உள்ளது. முன்னர் காலத்தில் கன்னி மூல கணபதி, அம்மாள் சன்னதி மட்டுமே இருந்தது. இக்கோவிலில் ஈசன், அம்மாள் ஆகியோருக்கு தனி தனி நுழைவாயில் உள்ளது.  உட்புற வளாகத்தில் தென் பகுதியில் விஸ்வேஸ்வர சன்னதி உள்ளது. அர்த்த மண்டபத்தின் நுழைவாயிலின் இருபுறமும் டிண்டி, முண்டி காவல் புரிய விஸ்வேஸ்வரர் கருவறையில் உள்ளார். கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், துர்கை, தட்சணாமூர்த்தி, பிரம்ம மற்றும் விஷ்ணு, லிங்கோத்பர் சிலைகள் உள்ளன.

வடபகுதியில் விசாலாட்சி அம்மன் சன்னதி உள்ளது.  அர்த்த மண்டபத்தின் இருமடங்கிலும் ஜெயா விஜய காவல் புரிய புன்னகை முகத்துடன், கருணை விழிகளுடன் நின்ற கோலத்தில் வீற்றுஇருக்கிறாள். அம்மன் சிலையும் திருவட்சியும் ஒரே கல்லில் வடித்துஇருப்பது சிறப்பு. கவுமாரி, மகேஸ்வரி, வைஷ்ணவி, பிரமாகி, வாராகி ஆகியோர் கோஷ்டத்தில் உள்ளனர். மூலவர் சன்னதி எதிரில் நந்தி, பலிபீடம், கொடி கம்பம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்புறம் வள்ளி தெய்வானை சமேதராக கல்யாண சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. கொடிக்கம்பத்திற்கு இடதுபுறம் சித்தி விநாயகர் சன்னதி உள்ளது. பொல்லாப்பு விநாயகர், ஈசன் உமையம்மை, நால்வர், அறுபத்தி மூவர், சமய குரவர்கள், மாணிக்க பாலசுப்பிரமணியர், சூரியன், சந்திரன், அருணகிரிநாதர், நடராஜர் சிவகாமி, கால பைரவர் ஆகியோர் தனி சன்னதி கொண்டுள்ளது. வடகிழக்கு மூலையில் தீர்த்த கிணற்றை ஒட்டி நவக்கிரக சன்னதி உள்ளது.

தல வரலாறு : இக்கோவிலில் உள்ள சித்தி விநாயகர் கண் பார்வை போன அர்ச்சகருக்கு மீண்டும் கண் பார்வை பெற செய்த ஆற்றல் மிகுந்தவர். இத்தலம் சுமார் 1000 வருடங்கள் தொன்மை வாய்ந்தது. கோவை நகரை மைசூர் மன்னர்கள் ஆட்சி செய்த வந்த நிலையில் மருதைய யதார்த்தி, வீரப்ப யதார்த்தி எனும் சகோதரர்கள் ஆண்டு வந்தனர். ஈசன் கனவில் தோன்றி தனக்கு ஒரு சன்னதி அமைத்து தருமாறு கூறினார். விஸ்வேஸ்வருக்கும், அம்பளுக்கும் திருப்பணிகள் ஏற்பாடு செய்து மிக பெரிய அளவில் கோவில் கட்டினர். மக்கள் பெருமளவில் வந்து வழிபட வழி வகுத்தனர். மாதே ராஜ காலத்திற்கு பிறகு தொடர்ந்து திருப்பணிகள் செய்தும் வழிபாடு செய்தும் வந்தனர்.

நல்ல ஆரோக்கியம், திருமண தடை, குழந்தை பாக்கியம், எதிரிகள் பயம், நாட்பட்ட வியாதிகள் குணமடைய இங்கு பிராத்தனை செய்கின்றனர். கருவறையில் தாரையின் நீர் பாணத்தின் மீது விழுந்து பரவி ஆவுடையார் வழியாக வரும் நீரை பிரசாதமாக  எடுத்து கொள்ள நோய்கள் குணமடைகிறது.

காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  கோயம்புத்தூர் 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  கோயம்புத்தூர் 

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : இல்லை 

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×