ஆர் எஸ் புரம், மாதேஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம் நகரின் மேற்கு பகுதியில் உக்கடத்தின் பழைய கோயம்புத்தூர் பகுதிக்கும், பூட்டு மார்க்கெட்டிற்கும் அருகில் மேட்டுப்பாளையம் சாலைக்கும் தடகம் சாலைக்கும் இடையில் அமைந்துள்ளது.
இறைவன் : மாதேஸ்வரர்
தல சிறப்புகள் : சுவாமி லிங்கவடிவில் காட்சிதருகிறார். கோவிலின் நடு பகுதில் கருவறை அமைந்துள்ளது. அரசமரத்தடியில் விநாயகர், ஆஞ்சநேயர் பிணையல் நாகம் மற்றும் இரு சிவலிங்கம் உள்ளது. மிக தொன்மை வாய்ந்த நந்தி சிலை உள்ளது.
கோயில் அமைப்பு : இக்கோவில் திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்டது. சுல்தான் காலத்து செப்பு பட்டயம் இங்கு உள்ளது. கோபுரம் விமானம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் என இருந்தாலும் சாதாரண ஓடுகள் வேய்ந்த கூரையின் கீழ் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில். உடல் நல குறைபாட்டால் பாதிக்கப்பட்ட கால் நடைகளுக்காக இங்கு வேண்டிக்கொள்கின்றனர். விழாக்காலங்களில் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். காமிக ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகிறது.
தல வரலாறு : கர்நாடக மாநிலத்தில் மைசூர் மலையில் துறவி ஒருத்தர் வாழ்ந்து வந்தார். கால்நடை விஷ கடிக்கு வைத்தியம் செய்து வந்தார். ஒருநாள் ஜீவமுக்தி அடைந்தார். முக்தியடைந்த மலையில் ஒரு சமாதி அமைத்து அதன் மீது சிவலிங்கம் பிரதிஷடை செய்து மாதேஸ்வரர் என்ற பெயரில் மக்கள் வழிபாடு செய்து வந்தனர். மைசூர் பகுதி அக்காலத்தில் திப்பு சுல்தான் ஆட்சிக்கு உட்பட்டது. குதிரை பட வீரர்கள் அக்காலத்தில் கேரள பகுதிக்கு கொங்கு மண்டலம் வழியாக செல்லும்போது இரவு நேரங்களில் இக்கோவிலில் தங்கினர். அரச மரத்தடியில் தங்கி செல்வர். மைசூரில் இருந்த மாதேஸ்வரை நினைத்து இல்லாமல் ஒரு சிவலிங்கத்தை நிறுவி கோவிலை விரிவாக்கம் செய்தனர். சுற்று பகுதில் உள்ள மக்கள் பலரும் வர தொடங்கினர். ஆங்கிலேயர் தொடுத்த போரில் திப்பு சுல்தான் 1799ம் மரணமடைந்து ஆட்சி மாற்றம் அடைந்த பின் குதிரை வீரர்கள் வருகையும் நின்று விட்டது.
சோமவாரம், பிரதோஷம், ஐப்பசி மாத அன்னாபிஷேகம், பௌர்ணமி ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாசி மாத உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பக்தர்கள் தங்கள் கைகளாலேயே பாலபிஷகம் செய்கின்றனர். ஒவ்வொரு நாட்களில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருகிறார். மாட்டு பொங்கலன்று இப்பகுதியில் இருக்கும் கால் நடைகளை வரிசையாக நிற்கவைத்து பூஜை செய்யும் காட்சி சிறப்பாகும். மேலும் ஈன்ற கன்றுவின் பசு முதல் பாலை சிவனக்கு அபிஷேகத்திற்கு கொடுத்த பின்பு தான் வேறு காரியத்திற்கு பயன் படுத்துகிறார்கள்.
காலை 7.00 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர், திருப்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்ல