சரவணம்பட்டி, சிரவணமாபுரீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு எதிரே கோவில் அமைந்துள்ளது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
இறைவன் : சிரவணமாபுரீஸ்வரர்
இறைவி : சிவகாமி அம்மன்
தல சிறப்புகள் : கருவறையில் ருதரட்சை பந்தலின் கீழ் வீற்றுஇருப்பது மிக சிறப்பாகும். நான்கடி உயரமுள்ள லிங்க திருமேனி முன்புறம் சற்று புடைப்பாகவும் பின்புறம் சற்று குழிவாகவும் காணப்படுகிறது. சுயம்பு மூர்த்தி ஆனதால் அபிஷேகத்தின் பொது இவ்வமைப்பை காணலாம்.
கோயில் அமைப்பு : முன்னர் காலத்தில் கிழக்கு நோக்கிய ஓடு வேய்ந்த கோவிலாக இருந்தது.தற்போது கோவிலின் முன்புறம் மண்டபத்துடன் கூடிய விளக்கு தூண் உள்ளது. சுதை சிற்பங்களுடன் விழா மண்டபம் எனும் மகா மண்டபம் உள்ளது. மேற்புற முகப்பில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சண்முகர்,சிவகாமியம்மை சுதை சிற்பங்கள் உளள்து. மகா மண்டபத்தில் ஈசனுக்கு எதிரில் மற்றும் தண்டாயுதபாணிக்கு எதிரிலும் நுழைவாயில் உள்ளது. வடபுறத்தில் கையில் தண்டத்துடன் தாங்கி, இடுப்பில் ஒரு கையை வைத்தும் அழகாக நின்ற கோலத்தில் தனி சன்னதி கொண்டு உள்ளார். பிரகாரத்தில் நால்வர், விநாயகர்,கன்னிமார்கள், வைதீஸ்வரர், சண்டிகேஸ்வரர், காலபைரவர், சனீஸ்வரர், தட்சணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை சன்னதி உள்ளது.
மகாமண்டபத்தின் வடக்கு பகுதில் தெற்கு நோக்கி அம்மாள் சன்னதி வலக்கையில் கருங்குவளை மலரை ஏந்தி, இடக்கை தொங்க விட்ட நிலையில் சிரித்த முகத்துடன் காணப்படுகிறாள். இலை, பூ போன்ற வேலை பாடுகளுடன் கூடிய திருவாசி, சிலையுடன் இணைந்து இருப்பது மிக சிறப்பான அமைப்பாகும். முருகன் பெயராலேயே ஊர் இருப்பதும், ஈசன் சிரவணமாபுரீஸ்வரர் இருப்பது சிறப்பு. 200 ஆண்டுகள் பழமையான கோவில். இங்குள்ள ஒரு குன்றின் மீது முருகன் குடிகொண்டுஇருப்பதால் செவ்வண்ணன்பட்டி பெயர் காலப்போக்கில் சரவணம்பட்டி என்று தற்போது அழைக்கப்படுகிறது.
தமிழ் புத்தாண்டு, வைகாசி விசாகம், பிரதோஷம், சிவராத்திரி,ஆடி வெள்ளி, நவராத்திரி, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம், கல்வி, பணி வாய்ப்புக்கள் போன்ற வேண்டுதலுக்கு பிராத்தனை செய்கின்றனர்.
காலை 6.00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர், காந்திபுரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை