மகாநதி 





	


	



























	




 




	








 




10:07:55 PM         Saturday, May 16, 2026

மகாநதி

மகாநதி
மகாநதி மகாநதி மகாநதி மகாநதி மகாநதி மகாநதி மகாநதி மகாநதி மகாநதி மகாநதி மகாநதி
Product Code: மகாநதி
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

அமைவிடம் : இந்தியாவின் கிழக்குப்பகுதியில் பாயும் ஒரு ஆறாகும். 860 கிமீ நீளம் உடைய இவ்வாறு சாத்புரா மலைத்தொடர்களில் தொடங்கி கிழக்குத்திசையில் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இவ்வாறு சத்தீஸ்கர் மற்றும் ஒரிஸா மாநிலங்களின் வழியாகப் பாய்கிறது.

மகாநதி என்றால் 'பெரிய நதி' என்று பொருளாகும். 858 கிமீ நீளமுள்ள இந்த நதி உண்மையில் மிகப்பெரிய நதியே! சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலத்தவர்களின் வாழ்வாதாரமாகவும், மற்றும் இன்றியமையாத படிவுகளை கொண்டிருப்பதாகவும் மகாநதி உள்ளது.

இந்த நதி முழுவதுமே பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளதால், படகு போக்குவரத்திற்கு ஏற்றதாக இந்நதி இல்லை. மழைக்காலத்தில் மட்டுமே ஆர்ப்பரித்து ஓடும் இந்நதி, பிற நாட்களில் ஒரு அகலாமான கால்வாய் அல்லது ஓடை போன்றும், இரு புறங்களிலும் பெரும் மணற்பரப்பையும் கொண்டிருக்கும்.

பசுமையான நிலப்பகுதிகளால் சூழப்பட்டிருக்கும் இந்நதியின் வளமான கண்கவரும் சுற்றுச்சூழல் மிகவும் காணத் தகுந்தது. மழைக்காலங்களில் கங்கை நதியைப் போல ஆக்ரோஷத்துடன் இருக்கும் இந்த நதியின் சிறந்த காட்சியை காண முடியும்.

மகாநந்தி திருக்கோயில் : சிவபெருமானை அனுதினமும் துதித்து, அருளைப் பெற்று, அவற்றை அடியவர்களுக்கு அள்ளித் தரும் அபிஷேகத் தெய்வம்தான் ‘’நந்திகேஸ்வரர்’’! ஆந்திர மாநிலத்தின் நந்தியால் என்னும் இடத்தில் ‘’மகாநந்தி’’ ஆக திருக்கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறார். மலைப்பாதையில் அமைந்துள்ள இந்நந்தித் திருக்கோயிலுள்ள சிவலிங்கத்தின் கீழலுள்ள தளத்திலிருந்து ஒரு கனிம நீரோடை ஒன்று கீழே வழிந்து வருவதும், கோயிலின் எல்லாப் பக்கங்களிலும் மண்டபங்கள் சூழ்ந்திருப்பதும் இத்தலத்தின் சிறப்புக்களாக கருதப்படுகிறது.

கோயிலின் முன்புறமாக அமைந்துள்ள தெப்பக்குளத்தில் காணப்படும் இளஞ்சூடான புனித நீர் நோய்களைக் குணமாக்கக் கூடிய சக்தி பெற்றதாகவும் காணப்படுகிறது. ஸ்ரீ சைலதாரா, நரசிம்மதாரா, தெய்வோதினிதாரா, கயிலாச தீர்த்தம் மற்றும் நந்தி தீர்த்தமாகிய ஐம்பெரும் நீரோடைகளிலிருந்து புனிதநீர் தெப்பக்குளத்திற்குள் வந்தடைவதாக சொல்லப்படுகிறது. இருந்தாலும் நீரோடையின் மூலம்ச் ஒரு போதும் யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் மையப்பகுதியில் ஒரு மண்டபமும், அறுபது அடி சதுக்கமும் உடைய இத்திருக்குளத்தில் பக்தர்கள் நீந்திச் சென்று நன்னீராடும் வகையில் ஐந்தடி ஆழத்தில் தண்ணீர் நிரந்தரமாகத் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

வரலாறு: மகாநந்தி வீற்றிருக்கும் நவநந்திகள் உள்ள பகுதியை நந்தா என்னும் மன்னன் ஆண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு முறை மன்னன், இறைவனின் திருவுருச்சிலையை வடித்து, பிரதிஷ்டை செய்து அதற்கு பாலாபிஷேகம் செய்யவேண்டுமென நினைத்தான். இதற்காக ஒரு பசுக் கூட்டமே அவன் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. அந்தப் பசுக் கூட்டத்திலே ஒரு கறுப்பு வண்ணப்பசு ஒன்றும் இருந்தது. அந்தப் பசுவானது ஏராளமான பாலை கொடுத்ததால், அதன் விருப்பம் போல் காடுகளில் நுழைந்து, சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து புல் மேய அனுமதிக்கப்பட்டது.

இதனால் மகாநந்தி கோயிலிருந்த அந்தக் கறுப்புப் பசு ஒரு மேய்ச்சலின் போது அதிக தூரம் சென்று, அதிக நேரம் கழித்து திரும்பி வந்தது. பசுவின் மடியோ பாலில்லாமல் வற்றிய நிலையில் இருந்தது. அது வழக்கமாய் கொடுக்கும் பாலையும் கொடுக்கவில்லை. இதைக் கண்ட மாடு மேய்ப்பன் சந்தேகங்கொண்டு மேய்ச்சலின் போது அந்தப் பசுவை பின் தொடர்ந்து, காட்டுக்குச் சென்று மறைந்து கவனித்தான்.

அந்தப் பசுவோ ஒரு கறையான் புற்றைச் சுற்றி மேய்ந்தது. பிறகு அந்தப் புற்றுக்கு மேலே சரியாக நின்றபடி புற்றின் மீது பாலைச் சொரிந்தது. புற்றிலிருந்து பகவான் கிருஷ்ணனின் வடிவம் என்று சொல்லப்படுகிற ஒரு இளம் குழந்தை தோன்றி மறைந்தது. இந்த அருங்காட்சியைக் கண்ட மேய்ப்பன் நாட்டையாளும் மன்னனிடம் சென்று நடந்ததைக் கூறினான். ஆச்சரியமடைந்த மன்னனோ, ஒரு நாள் மேய்ச்சலுக்காக விடப்பட்ட அந்தக் கறுப்புப் பசுவைத் தொடர்ந்து சென்றான். இறைவனின் திருக்காட்சியை கண்ணால் காணும் பொருட்டு ஒரு புதருக்குள் மறைந்திருந்து பார்த்தான்;

அந்தப் பசுவோ வழக்கம் போல் கறையான் புற்றைச் சுற்றி மேய்ந்தது. புற்றின் மேல் பாலைச் சொரிந்தது. அப்பொழுது கிருஷ்ண பகவான் அப்பசுவின் முன் தோன்றினான். அதன் பால் காணிக்கையை ஏற்றான். இதைக் கண்ட மன்னன் ஆச்சரியத்தில் மூழ்கி, தன்னையறியாமல் புற்றருகே நடந்து வந்து விட்டான்.

மன்னனைக் கண்ட பசுவோ பீதியடைந்து, பதட்டத்துடனும் பயத்துடனும் அந்தப்புற்றின் மீதே ஏறிச்சென்று விட்டது. இதனால் பசுவின் கால் குளம்படி தடம் புற்றின் மீது பதிந்து விட்டது. இதைக்கண்ட மன்னன், தான் தவறு செய்து விட்டதை உணர்ந்து, மன்னிப்பு வேண்டி ஆண்டவனிடம் பிராத்தனை செய்தான். அப்பொழுது உலர்ந்த நிலையிலிருந்த கறையான் புற்று சுயம்பு சிவலிங்கமாக உருமாறியது, இறைவன் தோன்றினான்; இறைவனைக் கண்ணாரக் கண்டு அரசனும் மகிழ்ந்தான் என்கிறது இத்தல புராணம்.

இன்றைக்கும் சிவலிங்கத்தின் மேற்பகுதியில் இரண்டு தடங்கள் இருப்பதை இன்றைக்கும் நம்மால் காணமுடிகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். . இவ்வரிய சிவலிங்கத்தை பக்தர்கள் தொட்டு வணங்க கோயிலின் ஆகமம் அனுமதியளிக்கிறது.

இக்கோயிலின் பிரதான சந்நிதிக்கு அருகாமையுள்ள ஒரு சந்நிதியானது அம்பாளுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அம்பாளின் திருவுருவுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சக்கர வடிவம், ஆதிசங்கரால் நிர்மாணிக்கப்பட்டதாகும். இத்தெய்வத்தின் முன்பு அமர்ந்து தியானிப்பவருக்கு, அம்பாள் தயை புரிந்து தரிசனம் தருகிறாள் என்ற நம்பிக்கை பொதுவாக நிலவுகிறது. பிரதான சந்நிதிக்கு பின்புறமாக மூன்று சிவலிங்கச் சந்நிதிகள் உள்ளன. இந்த முப்பெரும் சிவலிங்கங்களை வழிபட்டால், ஸ்தூல, சூட்சும, காரண தேகங்களைக் கடந்து ‘’துரியநிலை’’யை அடையலாம் என்பது ஜதீகமாகும்.

இம்மகா நந்தி திருக்கோயிலிருந்து பத்துமைல் தொலைவில் ஒன்பது நந்தி திருக்கோயில்கள் உள்ளன:

1.பத்ம நந்தி,  2 நாக நந்தி,  3 விநாயக நந்தி,

4 கருட நந்தி, 5 பிரம்ம நந்தி, 6 சூர்ய நந்தி,

7 விஷ்ணு நந்தி, 8 சோம நந்தி, 9 சிவ நந்தி

பயண விபரம்:  மகாநந்தி

விமான நிலையம் :   ஹைதராபாத் (215 கி.மீ )

ரயில் நிலையம் : கர்னூல் (73 கி.மீ)

பேருந்து வசதி  : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×